தீபாவளி பண்டிகையை ஒட்டி ரேஷன் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கூட்டுறவு சங்கங்களின் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70வயதுக்கு மேற்பட்ட முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை அனைத்து ரேஷன்கடைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவலை பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தாயுமானவர் திட்டத்தை மக்கள் பயன்படுத்துமாறும் கேட்டு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version