ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று (டிச.1) ரூ.720 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.11,980ஆகவும், 1 சவரன் ரூ.95,840ஆகவும் விற்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.90 அதிகரித்து, ரூ.12,070-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.720 உயர்ந்து, ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நேற்று 1 கிராம் ரூ.192ஆகவும், 1 கிலோ ரூ.1 லட்சத்து 92 ஆயிரமாகவும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.4 உயர்ந்து ரூ.196ஆகவும், 1 கிலோ ரூ.4,000 அதிகரித்து ரூ.1 லட்சத்து 96 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
