திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 79.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி இன்று காலை காலமானார்.

நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ரேணுகா தேவி. கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரேணுகா தேவியின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலுவுக்கு திமுக கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version