மாநில திருநங்கையர் கொள்கையை கொண்டு வந்துள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில், தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை 2025 கொண்டு வரப்பட்டதை சுட்டிக்காட்டி, நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தியாவிலேயே ஏழாவது மாநிலமாக, தமிழக அரசு இந்த கொள்கையை கொண்டு வந்தது பாராட்டத்தக்கது என்று கூறி நீதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.
திருநங்கைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், திருநங்கைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தர வேண்டும், திருநங்கைகளுக்கு என உள்ள பிரத்யேக செயலியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதி தள்ளி வைத்தார்.