திருச்சியில் வைகோவின் நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதை காங்கிரஸ் புறக்கணிப்பதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

தமிழகத்​தின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்​க​வும், உரிமை​களை மீட்​க​வும் மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ “சமத்​துவ நடைபயணம்” என்​கிற பெயரில் தனது 11-வது நடைபயணத்தை திருச்​சி​யில் இன்று (ஜன.2) தொடங்​கி, மதுரை​யில் வரும் 12-ம் தேதி நிறைவு செய்​கிறார்.

நிகழ்ச்​சிக்​கு, அமைச்​சர் கே.என்​.நேரு தலைமை வகிக்​கிறார். அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி முன்​னிலை வகிக்​கிறார். மதி​முக முதன்​மைச் செய​லா​ள​ரும், திருச்சி மக்​கள​வைத் தொகுதி உறுப்​பினரு​மான துரை வைகோ வரவேற்​றுப் பேசுகிறார்.

விழாவில், திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசிய தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் மொகிதீன், மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன், திரா​விடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்​து​கொள்ளவுள்ளனர்.

இந்தநிலையில், இதனை புறக்கணிப்பதாக, தமிழ்​நாடு காங்​கிரஸ் கமிட்டி தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை அறிவித்துள்ளார். அழைப்பிதழில் விடுதலைப்புலிகள் பிரபாகரன் படம் இருந்ததால் புறக்கணிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசின் கடன் விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் இடையே புகைச்சல் உண்டாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version