கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களிடம் 2வது நாளாக தவெக தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேசினார்.

கடந்த 27ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பலரும் ஆறுதலையும், கருத்துகளையும் கூறிவந்தனர். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்த விஜய் யாரிடமும் பேசாமல் அமைதி காத்தார்.

தொடர்ந்து அமைதியாகவே இருந்த விஜய் வீடியோ மூலம் பேசியதுடன், தற்போது வீடியோ கால் மூலமாக கரூர் மக்களுடன் பேசி வருகிறார். சம்பவம் நடந்து 12 நாட்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் வீடியோ கால் மூலம் விஜய் பேசியுள்ளார். காவல்துறை அனுமதி கிடைத்ததுடன் நேரில் வந்து சந்திப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஜய் பேசவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் விஜய் வீடியோ காலில் பேசி இருப்பது வைரலாகி வருகிறது. நேற்றும் இதேபோல் வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் விஜய் பேசி இருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version