மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம்  அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் மாலினி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் திருமணம் செய்ய வைரமுத்து குடுபத்தார் ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு தனது வீட்டுக்கு வந்த வைரமுத்துவை அடையாளம் தெரியாத சிலர் ஓட ஓட விரட்டி சென்று  வெட்டி படுகொலை செய்தனர். காதல் விவகாரத்தில் மீண்டும் ஒரு படுகொலை அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, வைரமுத்துவின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாதி வன்கொடுமை காரணமாக வைரமுத்துவின் கொலை நடந்திருப்பதால் இதனை ஆணவ படுகொலையாக கருத வேண்டும் என்றும், காதலியின் பெற்றோர் மீது ஜாதியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதி பெற்றுத் தர வேண்டும், அரசாங்க வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட் கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை பெற மறுத்து, வைரமுத்துவின் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை கும்பகோணம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version