மயிலாடுதுறை இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் தாய் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்து வீட்டிற்கு அருகே சிலரா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வைரமுத்து கொலைக்கு அவர் காதலித்த பெண் வீட்டாரே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இருவரும் வேறு சாதி என்பதால் தன் மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணின் குடும்பத்தார் வைரமுத்துவை கொலை செய்ததாக கூறி அவரது தாய் ராஜலட்சுமி புகார் அளித்தார்.

அதன்பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வைரமுத்து மரணம் கொலை வழக்காக 6பேர் மீது பதிவு செய்யப்பட்டது. கொலை குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின் நேரில் விசாரணை மேற்கொண்டார். இக்கொலை சம்பந்தமாக மயிலாடுதுறை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் கொலையுண்ட வைரமுத்து ஒரே சமுகத்தை சேர்ந்த பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் வைரமுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தால் மட்டுமே வைரமுத்துவின் உடலை பெற்றுக் கொள்வோம் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து கொலை வழக்கு சம்பந்தமாக குகன், அன்புநிதி, பாஸ்கர், விஜயா உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version