மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, விசிக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி விமர்சித்துள்ளது, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே காளவாக்கம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங்,கரப்ஷன் இருந்ததாகவும், கூட்டணி தர்மத்திற்காக இதுவரை அதுகுறித்துப் பேசவில்லை. இப்போது கூட்டணியில் இல்லை; அதனால் பேசுகிறோம் எனவும் கூறினார். இதில் செய்தியாளரின் கேள்வியை எதிர்கொள்ளமுடியாமல் டென்ஷனான வைகோ, அவரை ஒருமையில் பேசியதால் அந்த சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் வைகோவின் இந்த பேட்டியை விசிக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி விமர்சித்துள்ளார்.

கூட்டணி தர்மம் என்பதற்காக கூட்டணியில் இருக்கும்போது தவறுகளை பொறுத்து கொண்டோம் இப்போது அதை சொல்கிறோம் என்பது மக்களுக்கான தர்மம் ஆகுமா? என அவர் வினவியுள்ளார்.

நேற்றைய கூட்டணியை பற்றி இன்றுதான் சொல்லமுடியும் என்றால் இன்றைய கூட்டணியை பற்றி நாளைதான் சொல்ல வேண்டி வரும் என்றாகாதா? எனவும் விமர்சித்துள்ளார்.

“ANYONE CAN BE ACCUSED EVERYONE ACCUSED DESERVE A FAIR TRAIL” நேர்மையான அரசியல் என்பது சார்ந்துள்ள கூட்டணி நலனை முன்னிறுத்துவதா ? அல்லது தன்னை நம்பி சேர்ந்த மக்களின் நலனை முன்னிறுத்துவதா?

ALLIANCE INTEREST ? OR THE INTEREST OF PEOPLE ? WHICH MUST BE THE LARGER INTEREST ? எனக் கூறியுள்ளார்.

முன்னதாக , “தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் (TNPCB) சமீபத்தில் வெளியிடப்பட்ட மற்றும் விரைவில் வெளியாகவுள்ள பணியிட மாற்றப் பட்டியலில் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாக எஸ்.எஸ்.பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார்.

தற்போது வைகோவின் பேச்சை விமர்சித்துள்ளார்.

அண்மையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோ, தவெக ஆட்சிக்கும், விஜய்கும் பாராட்டு தெரிவித்து வருகிறார். தவெக கூட்டணியில் ஐக்கியமாகும் வகையில் வைகோ செயல்பட்டு வருவது பிடிக்காமல்தான், இப்போதே விசிக இதுபோன்ற விமர்சனங்களை முன்னெடுப்பதாகக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version