Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விஜய் முதல்வர் வேட்பாளர்!. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சிறப்பு குழு!. தவெக கூட்டத்தில் தீர்மானம்!
    தமிழ்நாடு

    விஜய் முதல்வர் வேட்பாளர்!. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சிறப்பு குழு!. தவெக கூட்டத்தில் தீர்மானம்!

    Editor web3By Editor web3December 11, 2025Updated:December 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7il2srfg actor vijay ani 625x300 28 October 24
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்று அவரது தலைமையில் கூட்டணியை ஏற்போரை வரவேற்போம் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    சென்னை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக்கழக சார்பில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெக தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டை, நாஞ்சில் சம்பத் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    அதில், ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து தலைவர் விஜய்யே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, நம் தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து தலைவர் விஜய் முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    alliance negotiations Chief Ministerial candidate special committee TVK TVK meeting
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleSIR-ல் பெயர் நீக்கப்பட்டால்… சமையலறை ஆயுதங்களுடன் தயாராக இருங்கள்!. மம்தா பானர்ஜி அதிரடி!
    Next Article திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்: ஐகோர்ட் அனுமதி
    Editor web3
    • Website

    Related Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.