டிக்டாக் மற்றும் யூடியூப் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி என்ற கிராமத்தில் சராசரியான குடும்பத்தை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. தனது யதார்த்த வட்டார வழக்கின் பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் மூலம் சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அத்தோடு கடந்தாண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை விரிவாக்கிக் கொண்டார் ஜி.பி.முத்து.
இப்படிப்பட சூழலில் ஜி.பி.முத்துவை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமான காட்சி ஒன்று இணையத்தில் வைரலானது. ஜி.பி.முத்து தனது மனைவியுடன் கடந்த 13-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், பெருமாள்புரத்தில் கீழ தெரு ஒன்று இருந்ததாகவும், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி வந்ததால், கடந்த 20 வருடங்களில் அந்த தெரு காணாமல் போய்விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
அந்த தெரு இருந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து விட்டதால், பொதுமக்களின் பாதை அடைக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த இடத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கப் போவதாக ஜி.பி.முத்து எச்சரிக்கையும் விடுத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜி.பி.முத்து வீட்டை முற்றுகையிடுவோம் என அப்பகுதி மக்கள் கூறியிருந்தனர். இதனால் உள்ள ஜி.பி.முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆக்கிரமிப்பு பிரச்னையில் தனது வீட்டை முற்றுகையிட வந்த கிராம மக்களோடு ஜி.பி.முத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கிராம மக்கள் ஜி.பி.முத்து ஒழிக என கோஷமிட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஜி.பி.முத்துவையும், கிராம மக்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.