சென்னை மாநகராட்சி மக்களின் தாகம் தணிக்க ஒரு புரட்சிகரமான திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார்.

 

முதற்கட்டமாக, கடற்கரை, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைப் பகுதிகள் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் இந்த குடிநீர் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளன.

 

இந்த ஏடிஎம் இயந்திரங்கள், பாதுகாப்பு, ஆரோக்கியம், நீண்ட கால பயன்பாடு மற்றும் எளிதான நிறுவுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏடிஎம்மிலும் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என இரண்டு அளவுகளில் குடிநீர் பெற்றுக் கொள்ள முடியும். பொதுமக்கள் தங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்களில் சுத்தமான நீரைப் பிடித்துப் பருகும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் சென்னை மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version