தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் அதிமுக – பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பாமக, தமாக, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், ”ஜனநாயகம் திரைப்படம் ஏன் வெளியாகவில்லை என்று சாலையில் செல்லும் பெண்மணிக்கு கூட தெளிவாக தெரியும். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இளைஞர்கள் எல்லாம் அரசியல் பேச ஆரம்பித்து விட்டனர்.

“சுதந்திரத்துக்காக போராடிய வரலாறு இருக்கிற கட்சி, தற்போது நீர்த்துப் போயிருப்பதற்கு காரணம் என்ன..? ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, ஆதரவு கொடுத்து தேய்ந்து போய் கொண்டே இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு நாம் பவர் கொடுப்பதாக கூறுகிறோம். அவ்வாறு செய்தால் மீண்டும் அந்த வரலாறை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதனால், இந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகரின் கருத்துக்கு பதிலளித்துள்ள அளித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, “எங்களுக்கு யாரும் பூஸ்ட் தர தேவை இல்லை எங்கள் தலைவர் ராகுல் காந்தி எங்களுக்கு பூஸ்ட் ஹார்லிக்ஸ் என எல்லாம் தருகிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version