மிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக, கிராமத்து மண்வாசனையை உலகறியச் செய்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், அங்கு நடந்த ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது.

பாரதிராஜாவின் நீண்டகாலத் திரையுலகப் பயணத்திலும் வாழ்விலும் நெருங்கிய நண்பராக விளங்கிய இயக்குநர் கங்கை அமரன், பாரதிராஜாவின் உடலைப் பார்த்துக் கதறி அழுததோடு, அவரது மனைவியிடம் ஆவேசமும் ஆதங்கமுமாகக் கேள்வி எழுப்பிய சம்பவம் அங்கிருந்தோரை உருக வைக்கிறது.

பாரதிராஜா மனைவியிடம் வெடித்த கங்கை அமரன்

பாரதிராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு, தேனியில் இருந்து பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா, தனது கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். கணவரின் உடலைப் பார்த்துக் கலங்கி நின்ற சந்திரலீலாவைக் கண்டதும், அங்கிருந்த இயக்குநர் கங்கை அமரன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் வெடித்தார்.

நெருங்கிய நண்பனை இழந்த சோகத்தில் இருந்த கங்கை அமரன், சந்திரலீலாவைப் பார்த்து, “கடைசியாக யாரும் இல்லாமல் ஓடிப் போய்விட்டீர்கள்… அவரை இப்படி அனாதையாக விட்டு விட்டீர்களா?” என்று மிகுந்த ஆதங்கத்துடனும் ஆவேசத்துடனும் அழுதுகொண்டே கேட்டார். ‘எப்படி வாழ்ந்த மனுஷன்… இப்படி அனாதையாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டீர்களா?’ என பாரதிராஜாவின் வாழ்நாளின் கம்பீரத்தை நினைவுகூர்ந்து அவர் எழுப்பிய கேள்வி, அங்கிருந்த ஒட்டுமொத்தச் சூழலையும் உலுக்கியது.

கங்கை அமரன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைக் கண்ட அங்கிருந்த நபர் ஒருவர், நிலைமையைக் கட்டுப்படுத்த நினைத்து, “இத்தருணத்தில் அப்படிப் பேசாதீர்கள்” என்று கங்கை அமரனை வார்த் தைகளால் தடுக்க முயன்றார். ஆனால், நண்பனைப் பிரிந்த துயரத்தில் இருந்த கங்கை அமரன், “போயா… அப்படித்தான் நான் பேசுவேன்!” என்று கோபத்துடன் கூறிவிட்டு, தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பாரதிராஜாவும், இளையராஜா-கங்கை அமரன் சகோதரர்களும் திரையுலகிற்கு வரும் முன்பிருந்தே, தேனி மாவட்ட மண்ணில் இருந்தே ஆழமான நட்பு கொண்டவர்கள்.

’16 வயதினிலே’ தொடங்கிப் பல காவியப் படங்களில் பாரதிராஜாவின் அக்மார்க் கிராமத்துக் கதைகளுக்குக் கங்கை அமரனின் பாடல்களும், வசனங்களும், இசையும் பெரும் பலமாக இருந்தன. திரையுலகத் தாண்டி குடும்ப உறவுகளாக வாழ்ந்தவர்கள் என்பதால், பாரதிராஜாவின் இறுதித் தருணங்களில் ஏற்பட்ட ஒரு சில தனிப்பட்ட இடைவெளிகள் கங்கை அமரனை இவ்வளவு பெரிய ஆதங்கமாக வெடிக்கச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணர்ச்சிப் பெருக்கான காட்சி தற்போது சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version