சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போாராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்றும் 8-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே போராடி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்றும் அவர்களை கைவிட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசு ஒரு கட்டத்தில் நிற்பதாக கூறிய அவர், போராட்டம் நடத்துபவர்கள் மற்றொரு கட்டத்தில் இருப்பதாகவும் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version