தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறினாலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் நம்பிக்கையுடன் உள்ளது.

தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், 180 முதல் 200 இடங்கள் வரை வெற்றி பெற்று விஜய்யின் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றும் அக்கட்சியின் மாநிலச் செயற்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது,இந்தியாவே வியக்கும் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்க என காலமாக அமையும் அதற்காகத்தான் மனிதநேய தொடர்ந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். அதுமட்டுமல்ல தியாகத்தோடு இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்கிறார். பல்வேறு சோதனைகளை கடந்து சாதனை படைப்பதற்காக இரவு பகல் பாராமல் எத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீரன் நடைபெற்றுக் கொண்டுள்ளார். நான்காம் தேதி பதில் சொல்லும் சரித்திர தமிழகத்தில் முதலிடம் பெறக்கூடியவராக விஜய் திகழ்வார். மக்கள் கருத்துக்கணிப்பு தெளிவாக இருக்கும். நீங்கள் எங்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும்.

முதல் வாக்கு அளிக்கின்ற அத்தனை பேரும் புதிய மாற்றத்தை எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார் என்ற எண்ணம் உள்ளது. அது நான்காம் தேதி பிரதிபலிக்கும். நயினார் நாகேந்திரன் தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று கூறியதற்கு, பாஜக இந்த தேர்தலுக்குப் பிறகு இருக்குமா, இருக்காதா என்பது தேர்தலுக்கு பின்பு தெரியும்.

அனைவரும் மனம் திறந்து விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்பது தான் இன்றைய செய்தி. இது மக்களுடைய பிரதிபலிப்பு. அதிகாரப்பூர்வமின்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் வேட்பாளர் பட்டியலுக்கு பதிலளிக்க முடியாது. வெற்றி பெற்றதற்கு பிறகு தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் அனைவரையும் விஜய் கட்சி அலுவலகத்திற்கு வர சொல்லியது குறித்து கேட்ட கேள்விக்கு இது தொடர்ந்து நடைபெறக்கூடிய ஒன்று.

எங்களிடத்தில் உள்ளவர்கள் தெளிவாக உள்ளனர். அவருக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளனர். இது உலக வரலாற்றில் மூன்று இரண்டு தலைவர்களுக்கு பிறகு தற்போது காணப்படுகிறது. இளம் வாக்காளர்கள் அதிகம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்துள்ளனர் என்று வைகோ கூறிய கருத்திற்கு, உண்மையிலே மனம் திறந்து வைகோ தெரிவித்துள்ளார். 150 லிருந்து 200 சீட்டுக்கு நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக அல்லது பாஜக தலைமையிலான கூட்டணியுடன் தேர்தல் பிந்தைய கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று மறுத்துள்ள த.வெ.க, ‘விஜய் தான் அடுத்த முதல்வர்’ என்பதில் உறுதியாக உள்ளது. இதற்கிடையே, ‘ஆக்சிஸ் மை இந்தியா’ (Axis My India) மற்றும் ‘டுடேஸ் சாணக்யா’ (Today’s Chanakya) ஆகிய இரண்டு முக்கியக் கருத்துக்கணிப்புகள் த.வெ.க கிங் மேக்கராக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன.

ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பின்படி த.வெ.க 98 முதல் 120 இடங்கள் வரையும், டுடேஸ் சாணக்யா கணிப்பின்படி சுமார் 63 இடங்கள் வரையும் வெல்லக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இம்முறை 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மக்களின் தீர்ப்பு யாருக்கு என்பது இன்னும் 48 மணி நேரத்தில் தெரிந்துவிடும். “தலைவர் விஜய் பல்வேறு சோதனைகளைக் கடந்து இரவு பகலாக உழைத்துள்ளார், மே 4-ஆம் தேதி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தமிழ்நாடே பார்க்கும்” என்று த.வெ.க நிர்வாகிகள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். திமுகவின் ஹாட்ரிக் வெற்றியா அல்லது விஜய்யின் புதிய அரசியல் பாய்ச்சலா என்பது திங்கட்கிழமை காலை 8 மணி முதல் தெரியத் தொடங்கும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version