நடிகர் விஜய்யின் பொது நிகழ்ச்சிகளின்போது, அவருடன் வரும் பாதுகாவலர்கள்  கையில் எப்போதும் ஒரு கருப்பு நிறப் பையை வைத்திருப்பதைப் பலரும் கவனித்திருப்பீர்கள். பார்ப்பதற்குச் சாதாரண லேப்டாப் பேக் போல இருக்கும் இது, உண்மையில் ஒரு Ballistic Briefcase எனப்படும் மடிக்கக்கூடிய துப்பாக்கிக் குண்டு துளைக்காத கேடயமாகும். எதிர்பாராதத் தாக்குதல்கள் அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற அவசர காலங்களில், விஐபியைப் பாதுகாக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பையில் உள்ள சிறப்பு ‘சிந்தடிக் பைபர்’ (UHMWPE அல்லது Kevlar) இழைகள், இரும்பை விட 5 மடங்கு அதிக வலிமை கொண்டவை. ஆபத்தான நேரங்களில் இந்தப் பையில் உள்ள ஒரு பிடியை (Handle) இழுத்தாலோ அல்லது பட்டனை அழுத்தினாலோ, அது அடுத்த நொடியே தலை முதல் கால் வரை மறைக்கக்கூடிய ஒரு பெரிய பாதுகாப்புச் சுவராக விரிந்துவிடும். இது கைத்துப்பாக்கி குண்டுகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தும் திறன் கொண்டது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கூட்ட நெரிசலில் எளிதாகக் கையாளவும் இத்தகைய அதிநவீன உபகரணங்களை விஜய் போன்ற முன்னணி பிரபலங்களின் பாதுகாவலர்கள் பயன்படுத்துகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version