தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசியநிலையில், தனது ஆதரவை தெரிவிக்கவில்லை.

அவர் பேசியதாவது, விஜய்யின் ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும் என்றும், அவர் பதவியேற்றவுடன் மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்ட பிரேமலதா, அதே வேளையில் அடுக்கடுக்கான கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார். குறிப்பாக, இந்த ஆட்சியைத் தக்கவைக்க குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் புகார்கள் தமக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாக அவர் சபையில் பதிவு செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ரதன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “முதலமைச்சர் விஜய்யின் ராஜகுருவாகப் பார்க்கப்படும் ஒருவரை, அரசு பதவிக்கு கொண்டு வந்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய அவர், நிர்வாக ரீதியான முடிவுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம் என வலியுறுத்தினார்.

மேலும், “முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றது யார் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்” எனவும் வலியுறுத்திய பிரேமலதா, இது தொடர்பாக முதலமைச்சர் பதிலளிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version