அண்ணா எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களை யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம் ஆனால் மக்கள் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போடுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் நான்கு தொகுதிகள் போட்டியிடுவதற்கான விருப்பம் மனுவை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று இருக்கும் ஆட்சி யாருக்கும் பாதுகாப்பு இல்லை, ஊடகங்களுக்கு பாதுகாப்பு இல்லை நீதி அரசர்களுக்கு பாதுகாப்பு இல்லை, மக்களுக்கும் பாதுகாப்பில்லை என்று குற்றம்சாட்டினார்.
எம்ஜிஆர் ஜெயலலிதாவை நாங்கள பின்பற்றுகிறோம் என்று சொல்கிறார் விஜய் ? யார் வேண்டுமானாலும் சொல்லலாம், எம்ஜிஆரை புகழ் பாடாமல், அரசியலில் செல்வாக்கு பெற முடியாது. அது விஜயாக மட்டுமல்ல யாராக இருந்தாலும், முதலமைச்சரே இன்று எம்ஜிஆர் தன் பெரியப்பா என்று சொல்கிறார். எம்ஜிஆரை எதிர்க்கட்சிகளும் சரி புதிதாக கட்சி தொடங்கும் கட்சிகளும் சரி தங்கள் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றால், எம்ஜிஆர் ஜெயலலிதா புகழை பாடியாக வேண்டும் என்று கூறினார்,
எம்ஜிஆர் ஜெயலலிதா அபிமானிகள் அவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்று எண்ண மாட்டார்களா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிச்சயமாக என்ன மாட்டார்கள், எம்ஜிஆர் உருவாக்கிய கட்சிகளுக்கு இரட்டை இலை சின்னம் இருக்கிறது, அவர்கள் வழியில் கட்சியை வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
திமுகவின் பத்து ரூபாய் கான்செப்ட்கள் வேலை எப்ப யாத்தே..! கலைஞர் சர்க்காரி கமிஷன், – 2ஜி ஆளை கற்ற ஊழல் வானத்திலேயே போகிற ஒலி அலையை வைத்து ஊழல். இப்போது டாஸ்மார்க் கடையில் பத்து ரூபாய் ஒரு ஊழல் அடேங்கப்பா …! திமுக மாதிரி ஊழல் பண்ணா விஞ்ஞான ரீதியாக ஊழல் பண்ண யாராலும் முடியாது எந்த கட்சியாலும் முடியாது என்று விமர்சித்தார்.
திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி என்று சொல்கிறாரே விஜய் என்ற கேள்விக்கு, அவர் ஏன் சொல்கிறார் என்றால், ஆளும் கட்சி திமுக அந்த கட்சியை, எதிர்த்தால் தான் தன்னுடைய கட்சியை, மக்கள் இடையே முன்னிரக்க முடியும் என்று சொல்கிறார். எங்கள் கொள்கை தான் அவர் கடைபிடிக்கிறார் ஆனால், மக்கள் மத்தியில் யார் இருக்கிறார்கள் மக்கள் மனசுல யாரு இருக்கிறார்கள் என்பது தான் பெரிது.
எங்கள் ஒரே எதிரி திமுக, திமுகவை ஒழிக்கும் வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது என்று எம்ஜிஆர் சொன்னார். அதே தான் ஜெயலலிதா சொன்னார், அதே வழியில் தான் இன்று எடப்பாடி பழனிச்சாமி பயணித்து வருகிறார் என்று கூறிய அவர், செங்கோட்டையன் யாராக இருந்தாலும் சரி தனி மனிதன் போவதால், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
செங்கோட்டையன் ஜெயலலிதா எம்ஜிஆரின் விசுவாசி என்று சொன்னால், இந்த வயதுக்கு பின்னர் ஒரு கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினராக போய், இன்னொரு கட்சித் தலைவரை வாழ்த்த வேண்டுமா ? இன்னொரு கட்சியை புகழ வேண்டுமா ? அதிமுகவிலேயே இருந்து அவர் நிலைநாட்டி இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் ஒவ்வொரு அண்ணா திமுகவின் தொண்டனின் மனதிலும் அவர் இடம்பெற்று இருப்பார் இன்று அவர் தூக்கி எறியப்பட்டு இருக்கிறார் என்று கூறினார்.
