Close Menu
    What's Hot

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆட்சியே முடியப்போகுது; அந்த 356வது தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?. அண்ணாமலை தாக்கு!
    தமிழ்நாடு

    ஆட்சியே முடியப்போகுது; அந்த 356வது தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?. அண்ணாமலை தாக்கு!

    Editor web3By Editor web3December 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin annamalai 065212183 16x9 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பணி நிரந்தரம் கோரி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய 1,500 க்கும் மேற்பட்ட செவிலியர்களை, மாலையில் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டில் கொண்டு போய் விட்டிருக்கிறது திமுக அரசு. இதனால், அதிகாலை நான்கு மணி வரை, கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டில், செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    திமுக தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 356 ல், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று கூறியிருந்தது.

    ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரைக் குறித்துக் கூடக் கவலைப்படாமல், பொதுமக்கள் நலனுக்காக முன்னின்று பணியாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களும்.

    நான்கரை ஆண்டுகளாக, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய, அவர்கள் கோரிக்கை வைக்காத இடமே இல்லை. ஆனால், திமுக அரசு, அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. செவிலியர்கள் கேட்பது, ஆட்சிக்கு வருவதற்காக திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான். அவர்களை தலைமைச்செயலகத்தில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை கேட்டுக்கொள்ளும் அடிப்படை மரியாதையைக் கூட, சுகாதாரத்துறை அமைச்சர் கொடுக்க மறுக்கிறார் என்பது, பொதுமக்களை திமுக எப்படி நடத்துகிறது என்பதற்கு உதாரணம்.

    கடந்த 2023ம் ஆண்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 2,472 செவிலியர்களைப் பணிநீக்கம் செய்ததை நாம் கண்டித்துக் குரல் கொடுத்திருந்தோம். தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற செவிலியர்களின் கோரிக்கைக்கு எப்போதும் துணை நிற்போம். செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனி UPI-யிலும் கிரெடிட் கார்டு பெறலாம்!. கூகுள் பே அசத்தல் அப்டேட்!
    Next Article எம்ஜிஆர் புகழ் பாடாமல், அரசியலில் செல்வாக்கு பெற முடியாது!. விஜய்யை சாடிய செல்லூர் ராஜு!.
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிதான் – கமல்ஹாசன்

    May 17, 2026

    உடனே களமிறங்குங்கள்; அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு!. முதல்வர் விஜய் அதிரடி!

    May 17, 2026

    அமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சியா? – சிபிஐ  மாநிலச் செயலாளர் பதில்

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிதான் – கமல்ஹாசன்

    உடனே களமிறங்குங்கள்; அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு!. முதல்வர் விஜய் அதிரடி!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    May 17, 2026

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    May 17, 2026

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிதான் – கமல்ஹாசன்

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.