காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் மேஜை மீது வைத்திருந்த செல்போனை இளைஞர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

 பேருந்து நிலையத்தில் பொருட்கள் வாங்குவதுபோல் வந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள செல்போன் கடை ஒன்றில் கண்ணாடி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த செல்போனை, கடைக்காரருக்கு தெரியாமல் லாவகமாகத் திருடிச் சென்றுள்ளார்.  

சிறிது நேரம் கழித்து அந்த போனை தேடும் போது காணாமல் போகவே சிசிடிவி காட்சியை ஆராய்ந்த போது இந்தக் காட்சிகள் பதில் பதிவாகி இருந்துள்ளது.

தற்போது இந்த வீடியோ காட்சி, உத்திரமேரூர் பகுதியில் வேகமாகப் பரவி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version