இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபவமா பரமேஸ்வரன் , ரஜிஷா விஜயன், பசுபதி, மதன் குமார், லால், அமீர் என பல்வேறு துறை நட்சத்திரங்கள் நடித்து வெளியான பைசன் காளமாடன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி வணிக ரீதியில் நல்ல லாபத்தையும் பெற்றது. மிகத்தேர்ந்த இயக்கம் நடிப்பு இசை என அனைத்து ஏரியாக்களிலும் சிறப்பாக திரைப்படம் இருந்த பொழுதிலும் இந்த திரைப்படம் இன்னும் சற்று நல்ல வரவேற்பையும் கூடுதலாக லாபங்களையும் எடுத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.

தற்பொழுது இந்த திரைப்படம் நெட் பிக்ஸ் என்கிற ஓட்டிடி பிளாட்பார்மில் வெளியாகி உள்ளது. Netflix OTT வலைதளத்தில் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை பாராட்டும் ரசிகர்கள் மத்தியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இணைந்திருக்கிறார்.

பைசன் காளமாடன் திரைப்படம் மிக அற்புதமான திரைப்படம். எனக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. இயக்குனர் மாரி செல்வராஜ் படங்கள் என்றாலே அழுத்தம் வாய்ந்த மற்றும் சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்களை முன்வைக்கும் படமாக இருக்கும் அது இந்த திரைப்படத்திலும் இருந்தது. துருவ் விக்ரம் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்காக தன்னை மிக நேர்த்தியாக உருமாற்று இருக்கிறார். மேலும் திரைப்படத்தில் நடித்த மற்றும் உழைத்த அனைத்து நபர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்”, என்று தினேஷ் கார்த்திக் தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவு மூலம் பைசன் காளமாடன் திரைப்படத்தை வெகுவாக பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

