1970ம் ஆண்டு ஒரு பைசா மின் கட்டண உயர்வுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த ராமசாமிகவுண்டர், மாரப்பகவுண்டர், ஆயிக்கவுண்டர் என்ற மூன்று விவசாயிகளின் நினைவாக பெருமாநல்லூரில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று (19.06.2025) நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கலந்து கொண்டு, நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசுகையில் விவசாயிகள் ஒன்று பட்டால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்றார். விவசாயிகள் ஒருங்கிணைந்து நின்றால் அரசுக்கு அழுத்தம் கொடுத்து கள் இறக்க அனுமதி பெற முடியும் அப்போதுதான் தென்னை விவசாயிகள் மற்றும் பனைமரம் விவசாயம் செழிக்கும் எனவும் கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்து வெளியே பேசுவது தவறான விஷயம் எனவும் அது கட்சிகளுக்கு இடையே நடக்கக்கூடிய ஒன்று என தெரிவித்தார் மேலும் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்வது தவறான விஷயம் எனவும் எங்களை விட ஆன்மீகத்தில் சிறந்தவர்கள் யாரும் இல்லை என தெரிவித்தார்.