சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 12.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு. சென்னையில் மழை நீர்வடிகால்வாய் பணிகள் எந்த அளவில் உள்ளது என்ற கேள்விக்கு

சென்னையில் பல இடங்களில் முழுமையாக மழைநீர் வடிகால் பணிகள் திட்டமிட்டப்படி வேலைகள் முடிந்துவிட்டது. புதிதாக நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தொடங்கி இருக்கிறோம். முதல்வர் அறிவித்த திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்துள்ள எனவும் மழைநீர் வடிகால்வாய் முடியாத இடங்களில் புதிதாக மழைநீர் வடிக்கால்வாய் பணிகள் வேறு ஒரு திட்டத்தின் மூலம் மேற்கொண்டு வருகிறோம் எனவும் தண்ணீர் தேங்கிய இடங்களில் அடுத்த கட்டமாக மழை நீர் வடிகால் அமைக்கக்கூடிய பணி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.
எதனையும் எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளும் விரைவில் தொடரந்து நடைபெற்று வருகிறது அந்த பணிகளும் முடிவடையும் என தெரிவித்தார்.

முப்பெரும் விழா உள்ளிட்ட எந்த விழா எடுத்தாலும் தமிழகத்தில் திமுகவிற்கு நோ என்டிரி தான் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியது குறித்தான கேள்விக்கு

அவர்கள் முதலில் வருகிறார்களா என பாருங்கள் எனவும் முப்பெரும் விழா பற்றி பாஜக சொல்வதற்கு என்ன இருக்கிறது. மூன்று நாளில் ஒரு லட்சம் பேர் கூடி இருக்கிறார்கள். முப்பெரும் விழா வெளியே முதலமைச்சர் போகும் போது வெளியே ஒரு லட்சம் பேர் நிற்கிறார்கள். மழை வந்ததால் கூட்டம் கலைந்ததே தவிர திருச்சியில் மக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்கள் திமுக பக்கம் நிற்கிறார்கள் என கூறினார். மேடையை போட்டு மைக்கை பிடித்து கொண்டு திமுகவுக்கு நோ என்டிரி என்கிறார்கள்
அவர்களுக்கு தமிழ்நாட்டில் என்டிரி பாஸ் கொடுத்துவிட்ட்களா எனவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version