டித்வா புயல் காரணமாக நாளை அதிகனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்திருப்பதால், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயல் வடதமிழகத்தை நோக்கி நெருங்கி வருகிறது. இதனால் நாளை மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு உத்தரவை மீறி நாளை பள்ளி – கல்லூரிகளை திறக்கக் கூடாது, அப்படி திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
