வாக்குச்சாவடிக்குள் புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறிய தவெக ஆதரவாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் nadesangpkns என்னும் ஐடியைப் பயன்படுத்தும் இளைஞர் ஒருவர், வாக்குச் சாவடியில், தான் செங்கம் தொகுதியில் தவெக தரப்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு விசில் சின்னத்துக்கு வாக்களித்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

வாக்குச் சாவடிக்குள் புகைப்படமோ, வீடியோ எடுக்கக் கூடாது எனவும், மீறினால் தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ள நிலையில், அதனை மீறி எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தேர்தல் ஆணைய விதிகளை மீறிய இந்த இளைஞருக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிப்பதோடு, அடுத்து வரக்கூடிய 10 தேர்தள்களில் இவர் வாக்களிக்க தடைவிதிக்க வேண்டும் என நெட்டிசன்கள் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version