Author: Editor TN Talks
ராஞ்சியில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 349 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், ரோஹித் சர்மா 57 ரன்களும், கே.எல். ராகுல் 60 ரன்களும் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 18, கெய்க்வாட் 8, வாசிங்டன் சுந்தர் 13, ரவீந்திர ஜடேஜா 32 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் 350 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. முதல் 3 விக்கெட்டுகள் வேகமாக சரிந்தபோதிலும், பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடினர். குறிப்பாக, போஸ் கடைசி வரை போராடினார். எனினும் அவர், 49.2 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 332 ரன்கள் எடுத்திருந்தபோது, 67 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.…
24 வயதில், பிரின்ஸ் சுக்லா (Prince Shukla) பெங்களூரில் வேலை செய்யத் தொடங்கியிருந்தபோது, சுவிட்சர்லாந்தில் இருந்து உதவித்தொகை பெற தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் கோவிட்-19 எல்லாவற்றையும் நிறுத்தியது. இதனால் பீகாரில் உள்ள தனது சிறிய கிராமத்திற்கு சென்றார். வீடு திரும்பிய பிரின்ஸ், பல ஆண்டுகளாக பண்ணைகளைத் தடுத்து நிறுத்தியிருந்த இடைவெளிகளைக் கண்டார். காலாவதியான நுட்பங்கள், பலவீனமான சந்தை அணுகல், தரமற்ற விதைகள் மற்றும் அடிப்படைக் கருவிகளின் கடுமையான பற்றாக்குறை ஆகியவற்றை பல இடங்களில் பல குடும்பகளால் பின்பற்றி வருவதை கண்டார். இதை மாற்றத் தீர்மானித்த அவர், தனது தந்தையிடமிருந்து ரூ. 1 லட்சம் கடன் வாங்கி, ‘AGRATE’ என்ற நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் மூலம் சிறு விவசாயிகளுக்கு தரமான விதைகள், சொட்டு நீர் பாசன முறைகள் போன்ற மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க முடிவு செய்தார். உபகரணங்களை வழங்குவது தீர்வின் ஒரு பகுதி மட்டுமே…
திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. டிட்வா புயலை கருத்தில் கொண்டு, அந்த 2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் எனக்கூறி, இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில், இன்று மாலை 6.30 மணியளவில் அந்த எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெற்றது. புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாகவும், ஆதலால் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு, ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு பதிலாக, கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படமான இதன் அடுத்த பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் 2022ம் ஆண்டு, 160 மொழிகளில் வெளியானது. இதன் 3-ம் பாகம் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ என்ற பெயரில் தற்போது உருவாகியுள்ளது. சாம் வொர்த்திங்டன், ஸோயி சல்டானா, சிகோனி வீவர், ஸ்டீபன் லங் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். டிச.18-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்க்க, புக் மை ஷோ செயலியில் 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த எண்ணிக்கை ரிலீஸ் நெருங்கும்போது அதிகரிக்கும் என்கிறார்கள். “‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தில் அதிகமான பண்டோராவை பார்ப்பீர்கள்; சாகசங்களைக் கொண்ட இந்தப் படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகளும்…
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தென் மண்டலத் தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”புதுச்சேரி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல் வடதிசையில் நகர்ந்து, இன்று காலை 11.30 மணி அளவில் கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 100 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு வடகிழக்கே 110 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 100 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 170 கிமீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. அப்போது புயலுக்கும், வடதமிழக-புதுச்சேரி கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 80 கிமீ ஆக இருந்தது. டிட்வா புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம் புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகரக்கூடும். அவ்வாறு நகரும்போது டிட்வா புயலின் மைய பகுதி வடதமிழகம்-புதுச்சேரி கடற்கரையிலிருந்து குறைந்தபட்ச தூரம்…
“பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை” என ஆளுநர் மாளிகைகள் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மாநிலங்களில் உள்ள ராஜ் பவன்கள் இனி லோக் பவன் (மக்கள் பவன்) என்று அழைக்கப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதாவது, 2024 ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், ‘மக்கள் மாளிகை’ எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை. சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் இல்லத்தின் பெயர் ராஜ்பவன் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ‘லோக் பவன்’ (மக்கள் பவன்) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆளுநர் மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் 25 ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி ஆளுநர் இல்லத்தின் பெயர் ‘லோக் பவன்’ (மக்கள் பவன்) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ‘ராஜ்பவன்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஆளுநர் இல்லம் இனி லோக் பவன் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய பிரதேசங்களில் உள்ள ஆளுநர் மாளிகை லோக் நிவாஸ் என அழைக்கப்படும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நோக்கத்தின் கீழ் ஜனநாயக அமைப்புகளில் மக்களின் பங்கேற்பை வலியுறுத்துவதே இந்தப் பெயர் மாற்றத்தின் நோக்கம் என்று மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆளுநர் இல்லம் பொதுமக்கள் அணுகக்கூடியதாகவும், மக்களின் ஆளுகைக்கு…
இந்திய மட்டும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று ராஞ்சியில் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார். அவருக்கு அடுத்தபடியாக அணியின் கேப்டன் கே எல் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர். ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் ஷர்மா இன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷாஹித் அப்ரீடியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்…
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரரான ஆண்ட்ரே ரஸல் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரே ரஸல், கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து கேகேஆர் அணிக்காக விளையாடி வந்தார். 37 வயதான இவரை கேகேஆர் நிர்வாகம் இந்த ஆண்டு அணியிலிருந்து விடுவித்திருந்த நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்தே ஓய்வுபெறுவதாக ரஸல் அறிவித்துள்ளார். சிஎஸ்கே போன்ற மற்ற அணிகள் அவரை தங்களது அணியில் சேர்க்க திட்டமிட்டிருந்த நிலையில், மினி ஏலத்திற்கு முன்பு ரஸல் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். தன்னுடைய இந்த முடிவு குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், “நான் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறேன். இந்த முடிவை அவ்வளவு எளிதில் எடுத்துவிடவில்லை. 12 சீசன்களின் நினைவுகள் மற்றும் கேகேஆர் குடும்பத்தின் அபரிமிதமான அன்புடன் வெளியேறுகிறேன். ஐபிஎல்லில் இல்லாவிட்டாலும் உலகின் மற்ற நாடுகளில் நடைபெறுகிற லீக்குகளில் விளையாடுவேன். நான் விளையாட்டில் இருந்து…
ராஞ்சியில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணிக்கு 350 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் 18, ரோஹித் சர்மா 57, கெய்க்வாட் 8, வாசிங்டன் சுந்தர் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் 52வது சதத்தை பதிவு செய்தார். 102 பந்துகளில் 103 ரன்களை கோலி அடித்தார். இதில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் ஆகியவையும் அடங்கும். சதத்தை பதிவு செய்தபிறகு அதிரடியாக கோலி விளையாடினார். அடுத்தடுத்து…