Author: Editor TN Talks
தமிழகம், புதுச்சேரியில் நாளை (நவ.29) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு மாவட்ட அரசு நிர்வாகங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு வந்தன. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் முன்பு வெளியிடப்பட்ட அட்டவணை மீண்டும் வெளியிடப்பட்டது. அதில், ஏற்கெனவே…
2026ல் புதிய வகையில் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடந்த தேமுதிகவின் வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூரில் ஜனவரி 9ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு இருக்கும் என்றார். கட்சியைப் பலப்படுத்தி, மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். தான் செல்லும் இடமெல்லாம் மகத்தான வரவேற்பு உள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என 2026ல் புதிய வகையில் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீத வாய்ப்பு உள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். திமுக ஆட்சிக்கு 50/50 என மதிப்பெண் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வடமாநில மக்கள் அதிகளவில் திருப்பூரில் உள்ளதாக தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், இங்குள்ளவர்கள் வாக்கை…
தனக்கு வந்த முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்ததாக தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வராக இருந்த ஓபிஎஸ், சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கூவத்தூரில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு அந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். இந்நிலையில், தவெகவில் சேர்ந்தபிறகு கோபிசெட்டிபாளையத்திற்கு முதல்முறையாக செங்கோட்டையன் இன்று வந்தார். அங்கு அவருக்கு தவெகவினரும், ஆதரவாளர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் புதிய மாற்றம் வர வேண்டும். அதற்காகவே தவெகவில் சேர்ந்துள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு இணைந்து நான் பணியாற்றியுள்ளேன். எனது அனுபவத்தை வைத்து விஜய்க்கு வழிகாட்டியாக இருப்பேன். என்னை பற்றி, யார் எது சொன்னாலும் பரவாயில்லை. கோபி தொகுதி மக்கள் எப்போதும் என்னுடன்தான் இருப்பார்கள். டிசம்பர் மாதத்தில் தவெக கூட்டணி வலுவடையும். தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு தவெக ஆட்சியமைக்கும். தமிழக…
ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை செயலி மூலம் மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. அரசின் திட்டங்கள், வங்கிகள் தொடர்பான சேவைகள் முதல் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் எண் அவசியமாகி உள்ளது. பான் கார்டு முதல் பல்வேறு திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆவணமாக மாறி உள்ள ஆதாரில் பெயர், முகவரி, செல்போன் எண் என முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென்றால், ஆதார் மையங்கள், வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களுக்கு மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு செல்லும் காலங்களில், அலுவலகங்களில் ஆதார் திருத்தம் மேற்கொள்ள வேண்டி வந்தவர்களின் கூட்டம் காரணமாக பல மணி நேரம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், புதிய அறிவிப்பு ஒன்றை ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை, செல்போன் செயலி மூலமாக மாற்றிக் கொள்ளும்…
கோவாவில் 77 அடி உயர பிரம்மாண்ட வெண்கல ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தெற்கு கோவாவின் பர்தகாலி பகுதியில் அமைந்து உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில், பிரம்மாண்ட 77 அடி உயர வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. மடத்தின் 550வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆசியாவிலேயே உயரமான ராமர் சிலையை திறந்து வைத்தார். மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண பூங்காவையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் அசோக் கஜபதி ராஜூ மற்றும் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். ராமர் சிலை திறப்பு விழாவையொட்டி பத்ரிநாத்தில் இருந்து கோவா வரை பிரம்மாண்ட ஸ்ரீராம யாத்திரை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீராமரை தரிசித்தனர். நொய்டாவைச் சேர்ந்த சிற்பி ராம் சுதரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ராமர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பு…
அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தை கீதை நமக்கு கற்பிப்பதாகவும், மக்களை பாதுகாக்க புதிய இந்தியா தயங்காது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் உடுப்பி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி இன்று (நவ. 28) வழிபாடு நடத்தினார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடகா வந்த பிரதமர் மோடி, உடுப்பி நகரில் சாலை வலம் சென்று மக்களை சந்தித்தார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், உடுப்பி நகரில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து மடத்தில் நடந்த லட்சகாண்ட கீதை பாராயண நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார். பின்னர், கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ஸ்ரீபுட்டிகே…
இந்தியா – ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக டிச.4-ம் தேதி இந்தியா வருகிறார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 23-வது இந்தியா – ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அரசு முறைப் பயணமாக டிச. 4ல் இந்தியா வருகிறார். டிச.5-ம் தேதி வரை அவரது பயணம் இருக்கும். இந்த பயணத்தின்போது, அதிபர் புதின், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். ரஷ்ய அதிபர் புதினை வரவேற்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்தளிக்கிறார். இந்த அரசுமுறைப் பயணம், இருதரப்பு உறவுகளில் நிலவும் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யவும், சிறப்பான, சலுகையுடன் கூடிய இருதரப்பு மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கவும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள்…
டெல்லி உள்பட வட மாநிலங்களில் நிலவும் காற்று மாசு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் சந்திக்கும் ஒவ்வொரு தாயும் என்னிடம் ஒரே விஷயத்தைச் சொல்கிறார்கள். எனது குழந்தை நச்சுக் காற்றை சுவாசித்து வளர்கிறது, சோர்வடைகிறது, அச்சம் கொள்கிறது, கோபப்படுகிறது என்பதே அது. மோடி அவர்களே, இந்தியக் குழந்தைகள் நம் கண் முன்பாக மூச்சுத்திணறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும்? உங்கள் அரசாங்கத்திடம் ஏன் எந்த அவசரமும் இல்லை, திட்டமும் இல்லை, பொறுப்புக்கூறல் இல்லை? காற்று மாசுபாடு குறித்தும், இந்த அவசர நிலையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய கடுமையான செயல் திட்டம் குறித்தும் நாடாளுமன்றத்தில் உடனடியாகவும் விரிவாகவும் விவாதிக்க வேண்டியது அவசியம். நமது குழந்தைகளுக்கு சுத்தமான காற்று தேவை. சாக்குப்போக்குகளும் கவனத்தை திசைதிருப்பும் முயற்சிகளும் அல்ல.”…
சமீப ஆண்டுகளாக இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய ரயில்வே பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு அதி முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்படுகின்றன. ரயில் பாதைகள் துவங்கி எஞ்சின்கள், ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள், நவீன அம்சங்கள் கொண்ட ரயில்களின் சேவை என அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ரயில்களின் சராசரி வேகத்தை அதிகரிப்பதும், பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கு விரைவாக சென்று சேர்வதை உறுதி செய்வதும் இந்திய ரயில்வேயின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. அதே நேரம் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை மக்களுக்கு வழங்குவதற்கும் இந்திய ரயில்வே நிர்வாகம் முன்னுரிமை அளிக்கிறது. இந்த காரணங்களுக்காக பழைய ICF பெட்டிகள் படிப்படியாக புதிய LHB பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இது பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரயில்களின் வேகமாக செல்லும் திறனையும் மேம்படுத்துகிறது. LHB ரயில் பெட்டிகள் பொருத்தப்பட்ட ரயில்கள் அதிகபட்சமாக…
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவைகள், 18 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த 7-ம் தேதி அன்று தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள், அந்த மாநில போக்குவரத்து துறையால் சிறைபிடிக்கப்பட்டு 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கர்நாடக மாநில போக்குவரத்து துறையும் 60க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ.1.15 கோடி வரை வசூலித்துள்ளது. இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம், 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மீட்டின்படி தமிழ்நாட்டில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள். எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த நவம்பர் 7ஆம்…