Author: Editor TN Talks

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உட்பட 4 பேரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரளிக்கோட்டையைச் சேர்ந்த கே.ஆர்.பெரியகருப்பன் கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.ஆர்.பெரியகருப்பன், அவரது மனைவி பிரேமா, தாயார் கருப்பாயி அம்மாள், மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் ஆகிய 5 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே கருப்பாயி அம்மாள் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அறிவொளி, போலீஸார் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உட்பட 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து…

Read More

தவெகவில் மேலும் 2 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் இணைந்துள்ளனர். அதிமுக முன்னாள்  அமைச்சர் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்தார். அவருடன் சேர்ந்து அவரது ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர். அவர்களில் முன்னாள் எம்பி சத்யபாமா குறித்த விவரம் முதலில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், மேலும் 2 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர், தாம் சார்ந்திருந்த கட்சியின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர், அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர் மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இன்று முதல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட எனது கண்காணிப்பில் இயங்கும் தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின்…

Read More

’ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய காட்சிகளை கோவாவில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு. இதில் ரஜினியுடன் கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சின்ன கதாபாத்திரம் என்றாலும், நெல்சன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் தனது விருப்பதினை தெரிவித்திருந்தார் விஜய் சேதுபதி. அதன் மூலம் இப்படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். ரஜினி – விஜய் சேதுபதி இருவருமே ‘பேட்ட’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதற்குப் பிறகு ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிகிறது. இதற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளன்று ‘ஜெயிலர் 2’ படத்தின் டீஸர் வெளியாகும் என தெரிகிறது. இதில் ரம்யாகிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மோகன்லால்…

Read More

இந்திய அணி தென்னாப்பிரிக்கா எதிரான தோல்வியில் இருந்து வலிமையாக மீண்டு வரும் என இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக வெற்றி பெற்றது. இந்த தொடரின் இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதல் போட்டியில் 30 ரன்களில் தோற்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரை முழுமையாக இழந்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரையும் இழந்துள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில்…

Read More

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி அசத்தியுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எப்போது என்பதை பார்ப்போம். 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனை கடந்த ஜூனில் இங்கிலாந்து நாட்டில் தொடங்கியது இந்திய கிரிக்கெட் அணி. இங்கிலாந்து அணி உடனான இந்த தொடரை பெரிய மாற்றங்களுடன் எதிர்கொண்டது இந்தியா. அனுபவ வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் ஷுப்மன் கில், அணியின் கேப்டன் ஆனார். அந்த தொடரை 2-2 என்ற கணக்கில் இந்தியா டிரா செய்தது. தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், அண்மையில் தென் ஆப்பிரிக்க அணி உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியது. கொல்கத்தா மற்றும் குவாஹாட்டியில் நடைபெற்ற இந்த தொடரின்…

Read More

ஃபிடே உல​கக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வந்தது. இதன் இறு​திப் போட்​டி​யில் உஸ்​பெகிஸ்​தானின் 19 வயதான ஜாவோகிர் சிந்​தரோவ், சீனா​வின் வெய் யி மோதினார்கள். முதலில் இவர்​கள் விளை​யாடிய 2 கிளாசிக்​கல் ஆட்​டங்களும் டிரா​வில் முடிவடைந்​திருந்​தன. இதையடுத்து வெற்றியை தீர்​மானிப்​ப​தற்​கான டைபிரேக்​கர் ஆட்​டங்​கள் நேற்று நடை​பெற்​றன. இதில் முதல் ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​திருந்​தது. இதைத் தொடர்ந்து நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் ஜாவோகிர் சிந்​தரோவ் வெற்றி பெற்​றார். முடி​வில் ஜாவோகிர் சிந்​தரோவ் 2.5-1.5 என்ற புள்​ளி​கள் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றார். இதன் மூலம் இளம் வயதில் உலக கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்​டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்​தார் ஜாவோகிர் சிந்​தரோவ். சாம்​பியன் பட்​டம் வென்ற அவருக்கு விஸ்வ​நாதன் ஆனந்த் கோப்​பை​யுடன் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்​கப்​பட்​டது.

Read More

இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மத்திய மாகாணத்தில் தேயிலை அதிகம் பயிரிடப்படும் மலைப் பகுதி மாவட்டமான பதுல்லாவில் 18 பேர் உயிரிழந்ததாக நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. கேகாலை மற்றும் நுவரெல்லா மாவட்டங்களிலும் சிலர் உயிரிழந்தனர். மேலும், இந்த மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக 14 பேர் காணாமல் போயுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இலங்கை கடுமையான மழையால் பாதிக்கப்பட தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. வார இறுதியில் பெய்த கனமழையால் வீடுகள், வயல்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது. இலங்கையின் மலைப்பிரதேச மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் பாறைகளும் மரங்களும் தண்டவாளங்களில் விழுந்ததை அடுத்து பல இடங்களில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், கடும் வெள்ளம்…

Read More

பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக ராமதாஸும், தன்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என அன்புமணியும் கூறி வருகின்றனர். புதிய கட்சியை அன்புமணி தொடங்கினால், அந்தக் கட்சிக்கு நல்ல ஒரு பெயரை தானே தெரிவிப்பதாக ராமதாஸ் அடிக்கடி கூறி வரும் நிலையில், ‘அய்யா பாமக’ என்ற புதிய கட்சியை நிறுவனர் ராமதாஸ் தொடங்க போகிறார் என்ற தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. ‘அன்புமணி தரப்பினரின் திட்டமிட்ட செயல் இது’ என ராமதாஸ் அணி குற்றஞ்சாட்டி வருகிறது. இதுகுறித்து பாமக (ராமதாஸ் தரப்பு) இணை பொதுச் செயலாளரான, சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் கூறும்போது, “தேர்தல் ஆணையம் நல்ல முடிவை தரும். பாமகவை நிறுவியவர் மருத்துவர் அய்யா. தற்போது தலைவராகவும் உள்ளார். டிச. 12-ம் தேதி அய்யா நடத்தக் கூடிய ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்து…

Read More

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி சரக டிஐஜியாக இருந்தவர் வருண்குமார். இவர், “தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தூண்டுதலின் பேரில் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலை தளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக சீமான் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி சீமான் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது சீமான் மீதான அவதூறு வழக்கு…

Read More

2026 தேர்தலில் வெல்வோம் 200, படைப்போம் வரலாறு என்பதே நமது இலக்கு என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும், அன்னதானம் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. 49-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இதனை தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பெரியார் திடலில் நடைபெற்ற பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”இந்த நிகழ்ச்சியில் நான் யாரையும் வாழ்த்த…

Read More