Author: Editor TN Talks
கட்சி தொடங்கிய உடனே லாங் ஜம்ப், ஹை ஜம்ப் என்று உலகத்தையே தாண்டுவோம் எனக் கூறும் விஜய், ஒரு தேர்தலில் நின்று தனது பலத்தை நிரூபிக்கட்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று (நவ.26) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில் இன்று (நவ.27) பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “1977 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த செங்கோட்டையன், அமைச்சராகவும் பல்வேறு பணிகளை செய்து வந்தவர். அது மட்டுமின்றி, அதிமுகவிலிருந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பதவிகளையும் பெற்றவர். 50 வருடத்திற்கு பிறகு தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக தனக்கென ஒரு வாக்கு வங்கி உள்ள கட்சி. அதில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும்…
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ புயலாக வலுப்பெற்றது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ புயலாக உருவானது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும். இன்று (நவ.,27) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் * புதுக்கோட்டை * ராமநாதபுரம் * தஞ்சை * திருவாரூர் * நாகப்பட்டினம் நாளை (நவ.,28) அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * புதுக்கோட்டை *…
தன்னை கட்சியில் சேரும்படி, திமுக அணுகவில்லை என்று தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெகவில் சேர்ந்தபிறகு பனையூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் திமுக அமைச்சர் சேகர்பாபு நேற்று சந்தித்து பேசியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த வருமாறு: நான் சபாநாயகர் அப்பாவுவை மட்டுமே சந்தித்தேன். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாகவே அவரை சந்தித்தேன். அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்திக்கவில்லை. அவரை சந்தித்தது தொடர்பான புகைப்படத்தை காட்ட முடியுமா? அதுதொடர்பான தகவலில் உண்மையில்லை. நான் அடிக்கடி கட்சி மாறும் நபர் கிடையாது. 50 ஆண்டுகளாக ஒரே கட்சியில் இருந்துள்ளேன். இதேபோல், திமுக, பாஜக ஆகியவை தூது விட்டதாக வரும் தகவலிலும் உண்மை கிடையாது. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்,
சென்னையை அடுத்த பனையூரில் தவெகவில் இன்று செங்கோட்டையன் சேர்ந்தார். அதன்பிறகு செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுகவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டவன் நான். புரட்சித் தலைவரால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவன் நான். அவர் அளித்த பணிகளை எம்ஜிஆர் பாராட்டும் அளவுக்கு செய்துள்ளேன். என்னை கட்டித் தழுவி எம்ஜிஆர் பாராட்டியுள்ளார். அப்போது எதிர்க்கட்சியினர் (திமுக) அதிமுக 100 நாள்களுக்கு கூட நீடிக்காது என விமர்சித்தனர். ஆனால் நடந்தது வேறு. அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்ஜிஆர். 3 முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோதும் தேர்தலில் வென்று நிரந்தர முதல்வர் என்ற சாதனையை படைத்தவர். அவர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றினேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சி நீடித்தது. ஆனால் பிறகு கட்சி சிதறுண்டது. இதை கருத்தில் வைத்து, கெட்சி ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் அக்கருத்து நிராகரிக்கப்பட்டது. நான் என்ற ஆணவம் கூடாது. இதை ஆண்டவர்…
தென் மேற்கு வங்கக்கடலில் 3 மணி நேரத்தில் புயல் உருவாகிறது; இந்த புயல் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடல் – இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 730 கிலோமீட்டர் தொலைவில் இந்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி நகரும். ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் புயலுக்கு சூட்டப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று…
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.,27) சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.11,770-க்கும், சவரனுக்கு ரூ.94,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான சூழல் தான் நீடிக்கிறது. இந்நிலையில் இன்று, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770-க்கும் பவுனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.94,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180-க்கும் ஒரு கிலோ ரூ.1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“செங்கோட்டையனுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: “20 வயது இளைஞராக இருந்தபோது எம்ஜிஆரை நம்பி, அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சிறிய வயதிலேயே எம்எல்ஏ என்ற ஒரு பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் மிகப்பெரிய இருபெரும் தலைவர்களுக்கு உறுதுணையாக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையனுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரையும், அவருடன் இணைந்த மற்றவர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார். முன்னதாக, சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு…
தவெகவில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சேர்ந்தது, தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அதிமுகவில் தற்போது செங்கோட்டையன் இல்லை. ஆதலால் இதுகுறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார். அதிமுகவில் மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழ் மறைக்கப்படுவதாக இபிஎஸ் மீது செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். இதையடுத்து கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக அவரை அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கினார். இதனால் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
தவெகவில் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா இன்று இணைந்தார். விஜய்யின் தவெக கட்சியில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று சேர்ந்தார். இதையடுத்து அவரின் ஆதரவாளராக கருதப்படும் திருப்பூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா மற்றும் மேலும் 100-க்கும் மேற்பட்ட ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்தனர். அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தவெக மூத்த தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சொகுசு கார் வைத்திருப்பது ஒரு சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதைக் கடந்து அந்த சொகுசு காருக்கான என் தகடு ( நம்பர் பிளேட் ) பேன்சியாக வைத்திருப்பது இன்னும் சிலருக்கு பிடிக்கும். தங்களுடைய சொகுசு கார்களில் உள்ள Number Plate எண் பார்ப்பதற்கு வித்தியாசமாக மற்றும் பேன்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் நினைப்பார்கள். அரியானாவில் ஆன்லைன் மூலம் இந்த பேன்சி மற்றும் விஐபி எண்ணுக்கான ( Number Plate) ஆன்லைன் ஏலம் ஒவ்வொரு வாரமும் நடைபெறும். வெள்ளிக்கிழமை சாயங்காலம் 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 9 மணி வரை இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் தங்களுடைய விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் புதன்கிழமை சாயங்காலம் 5 மணி வரை இந்த ஏலம் நடைபெறும். ஏலத்தின் முடிவுகள் புதன்கிழமை சாயங்காலம் 5 மணி அளவில் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் இந்த…