Author: Editor TN Talks
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றஞ்சாட்டினர். இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும், வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு நவம்பர் 10ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கும் ஜாமீன் வழங்கக் கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும், 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை…
விஜய்யின் தவெக கட்சியில் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகர், அம்பேத்கர் திடலில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவரது கட்சியில் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் இருக்கிறது. மேலும் ஊடுருவல்கள் நிகழ்ந்தால் அவருடைய அரசியல் கேள்விக்குறியாகும். இனி எந்த அரசியல் கட்சியும் ரோடு ஷோ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதே விசிகவின் நிலைப்பாடு. அதிமுகவில் உள்ள செங்கோட்டையன் தவெகவில் இணைவதாக வரும் செய்திகள் எந்த அளவுக்கு உறுதியானது என்று தெரியவில்லை. அவர் தன்னிச்சையாக இந்த முடிவு எடுத்திருக்கிறாரா அல்லது இதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எந்த அரசியல் கட்சியும் இனி ரோடு ஷோ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி சென்னை அசோக் நகர், அம்பேத்கர் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதனைதொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மதவாத சக்திகளின் முயற்சிகளிலிருந்து அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜனநாயகச் சக்திகளுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் விசிக சார்பில் அனைத்து மாவட்டங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் மாற்றி எழுதப்படும் சூழலில் ஈழத்தமிழர்களின் கோரிக்கையான கூட்டாட்சி நிர்வாக முறை மற்றும் தமிழர்…
உடலின் எந்தப் பகுதியிலும் தங்கத்தை அணியலாம், ஆனால் உடலின் சில பாகங்களில் தங்கத்தை அணிவது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும். தங்கம் அணிவது ஒரு நபரின் செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், அந்த நபரின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. சிம்மம், துலாம், கன்னி, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு தங்கம் அணிவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. தங்கத்தை எந்த நாளிலும் அணியலாம், ஆனால் ஞாயிறு, புதன் அல்லது வெள்ளி போன்ற நாட்களில் தங்கம் அணிவதால் சிறப்பு நன்மைகள் உள்ளன. ஒருவர் காதில் தங்க நகைகளை அணிந்தால், அவர்களின் கேது கிரகம் வலுவடையும். இதன் பொருள் தங்க காதணிகள், பதக்கங்கள் மற்றும் கன்னத்தில் ஊசிகளை அணிவது இந்த வகையான பலனை அளிக்கும். உங்கள் வாழ்க்கையில் பணம் தொடர்பான பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் வந்தால், உங்கள் மூக்கில் தங்கத்தை அணியுங்கள். கணவன் மனைவி இடையே தேவையற்ற…
நல்லதே நடக்கும் 27.11.2025 விசுவாவசு 11 கார்த்திகை வியாழக்கிழமை திதி: சப்தமி நள்ளிரவு 12.31 வரை. பிறகு அஷ்டமி. நட்சத்திரம்: அவிட்டம் பின்னிரவு 2.30 வரை. பிறகு சதயம். நாமயோகம்: துருவம் நண்பகல் 12.05 வரை. பிறகு வியாகாதம். நாமகரணம்: கரசை நண்பகல் 12.22 வரை. பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9. யோகம்: சித்தயோகம் பின்னிரவு 2.30 வரை. பிறகு மந்தயோகம். சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை. சந்திராஷ்டமம்: பூசம். சூரிய உதயம்: சென்னையில் காலை 6.13. அஸ்தமனம்: மாலை 5.39. ராகு காலம்: மதியம் 1.30-3.00 எமகண்டம்: காலை 6.00-7.30 குளிகை: காலை 9.00-10.30 நாள்: வளர்பிறை அதிர்ஷ்ட எண்: 4, 9 பரிகாரம்: தைலம் (தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
மேஷம்: எதிர்காலத்தைப் பற்றிய முடிவெடுக்கும்போது, பொது அறிவுடன் சிந்தித்து செயலாற்றுவது நன்மை தரும். திட்டங்களை தீட்டவும், கணக்கீடுகளை உருவாக்கவும் ஜோதிட கணிப்பை அறிவுறுத்தலாக எடுத்துக்கொண்டு பொது அறிவின் அடிப்படையில் இறுதி முடிவை எடுப்பது நல்லது. ரிஷபம்: இன்றைய தினம் வாதங்களும் விவாதங்களும் நிறைந்திருக்கும். பிற்பகலில் நண்பர்களுடன் வணிக விவாதங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. மாலையில் மனதிற்கு நெருக்கமானவர்களிடமிருந்து சிறப்பான கவனிப்பு கிடைக்கும். மிதுனம்: பிரச்சினைகளை தீர்ப்பது கடுமையாக இருந்தாலும், உங்களால் அதை செய்துமுடிக்க முடியும். அதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், நம்பிக்கையை இழக்கவேண்டாம். உறுதியும் கடின உழைப்பும் பலனளிக்கும். காதல் துணையை வெளியே அழைத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். கடகம்: இன்று நீங்கள் கடுமையாக நடந்துகொள்ள நேரிடலாம். பிற்பகலில் தொழில் கூட்டாளிகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் அதிகாரத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினால், முக்கியமான ஒப்பந்தத்தை முடிக்க முடியும். சிம்மம்: உங்கள் கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டாம். அதன் விளைவாக உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். அதேபோல், இணக்கமான அணுகுமுறையை கைவிட வேண்டாம்.…
டியூட் (Dude) திரைப்படத்தில் ‘கருத்த மச்சான்’ பாடலை பயன்படுத்தியதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தீபாவளிக்கு வெளியான டியூட் (Dude) திரைப்படத்தில் தன்னுடைய இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘கருத்த மச்சான்’ மற்றும் பணக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு’ பாடல்கள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு பாடல்களையும் நீக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கானது நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போதும் கூட கேட்டு ரசிக்கின்றனர். இதனால் இளையராஜா எவ்வாறு பாதிக்கப்படுகிறார்?” என்றும், பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது” என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்து வாதிட்ட…
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்திக்கொள்ள காமன்வெல்த் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ஒலிம்பிக்கிற்கு அடுத்ததாக காமன்வெல்த் திகழ்கிறது. முதன்முதலில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930 ஆம் ஆண்டு கனடாவின் ஹாமில்டனில் நடைபெற்றது. இந்நிலையில், வரும் 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் தனது நூற்றாண்டை நிறைவு செய்கிறது. இதனையொட்டி, 2030 ஆம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா திட்டமிட்டது. அதன்படி, காமன்வெல்த் கூட்டமைப்புக்கு விண்ணப்பித்த இந்தியா அகமதாபாத்தை முன்மொழிந்தது. இதுபோன்ற பல்வேறு விண்ணப்பங்களை 74 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழு மதிப்பீடு செய்தது. இந்நிலையில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த கூட்டத்தில், 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவின் அகமதாபாத்தில் நடத்த ஒப்புதல் அளித்து இன்று (நவ.26) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடைசியாக 2010 ஆம்…
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா குறித்து இப்பொழுது பெரிய விவாதம் நடந்து வருகிறது. இந்த ஹெச்- 1பி விசா திட்டத்தில் நிறைய மோசடி நடப்பதால் தான் டிரம்ப் அவர்கள் அந்த விசாவிற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருந்தார். இந்திய மதிப்பில் ஒரு ஆண்டிற்கான இந்த விசாவின் கட்டணம் 90 லட்சத்திற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விசாவிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் 2024ல் சுமார் 2.2 லட்சம் H-1B விசாக்களை கையாண்டது. தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு முக்கிய தென் மாநிலங்களுக்கான விண்ணப்பங்களை இந்தத் தூதரகம் தான் கையாண்டு கொண்டு வருகிறது. இதன் மூலம் அதிக உலகில் அதிக H-1B விசாக்களை கையாண்டு வரும் மையமாக இது உருவெடுத்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு பாட்காஸ்ட் உரையாடலில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் எம்பி மற்றும் பொருளாதார வல்லுநர் டாக்டர்…
வருகிற 29, 30-ம் தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்திருப்பதால், தமிழக மக்கள் பீதியில் உள்ளனர். வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும். இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரிதும் சிரமத்தை சந்திப்பர். ஆனால் இந்தாண்டு கனமழை போதிய அளவு பெய்யாததுடன் வெயில் அடிக்கத் தொடங்கியது. எனவே மழைக்காலம் முடிந்து விட்டதாகக் கருதி, மக்கள் நிம்மதியுடன் இருந்தனர். இந்நிலையில், வருகிற 29-ம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களுக்கும், 30-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கும் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் பல மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போதே அந்த மாவட்ட மக்கள், அதி கனமழையை நினைத்து பீதியில் உள்ளனர். மழைநீர் தேங்காமல் இருக்க போதிய…