Author: Editor TN Talks
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக தென் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழக எல்லையை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கியின் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றை விட இன்று மழை சற்றே குறைந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்து 5,135 கன அடியிலிருந்து விநாடிக்கு 3,999 கன அடியாகக் குறைந்தது. ஆனாலும், இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 138.65 அடியிலிருந்து ஒரே நாளில் 139.80 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, இன்று மாலை 6 மணி நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவும் விநாடிக்கு…
இந்த ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து மூத்த அரசியல் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்க்காக இதுவரை சட்டமன்றத் தேர்தலில் 9 முறை வெற்றி கொண்ட மூத்த அரசியல் அமைச்சர் ஆவார். மேலும் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரையில் போக்குவரத்து துறை மந்திரியாக அவர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதோடு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில், பள்ளிக்கல்வித்துறையிலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு முன்னேற்றத் துறையிலும் அமைச்சராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தற்பொழுது தளபதி விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும், இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கூடிய விரைவிலேயே அவர் விஜய் தலைமையில் தமிழக…
ஒருவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடுகள் மற்றும் உறவுகளின் இடையில் பல்வேறு பிரச்சனைகள் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே ஒருவரின் வீட்டில் தீய சக்திகள் உள்ளது என்பதை உறுதி செய்வதற்கு, மூன்று பச்சை எலுமிச்சைப் பழங்கள் மட்டும் போதும். ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சையை வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி கூடையில் வைக்கும் போது 8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சையை வைக்கவும். இப்படி செய்தால், நமது வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். நாம் அன்றாடம் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடங்களில் உள்ள மேஜையின் மீது 3 எலுமிச்சை பழத்தை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. மூன்று எலுமிச்சைப் பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி நமது வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை மஞ்சள் அல்லது…
சபரிமலை செல்லும் ஐயப்பா பக்தர்கள் அனைவரும் அனுதினமும் நம் ஐயப்ப ஸ்வாமியை நினைத்து 108 சரண கோஷங்களை நாம் படிக்கலாம்… ஐயப்ப சாமியின் அருளை பெறுவோம்… 1. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 2. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 3. ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 4. ஓம் சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா 5. ஓம் மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா 6. ஓம் வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா 7. ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 8. ஓம் பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 9. ஓம் சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 10. ஓம் வனதேவத மாறே சரணம் ஐயப்பா 11. ஓம் துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா 12. ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா 13. ஓம்…
மகளிர் கபடி உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. சர்வதேச கபடி சம்மேளனம் சார்பில் இரண்டாவது மகளிர் கபடி உலகக் கோப்பை தொடரானது வங்கதேச தலைநகர் தாக்காவில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. முதல் முறையாக இந்தியா தவிர்த்து வேறு நாட்டில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் சற்று கூடுதலாகவே இருந்தது. மொத்தம் 11 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, வங்கதேசம், ஈரான் மற்றும் சீன தைபே அணிகள் முன்னேறின. அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 33-21 என்ற கணக்கில் ஈரான் மகளிர் அணியையும், சீன் தைபே அணி 25-18 என்ற கணக்கில் வங்கதேசத்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்றைய தினம் இந்தியா மற்றும் சீன தைபே…
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்துள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது, முதல் இன்னிங்ஸில் 489 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சேனுரன் முத்துசாமி 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 109 ரன்களையும், சதத்தை நெருங்கிய மார்கோ ஜான்சன் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களையும் சேர்த்ததை…
தவெகவில் இணைவதற்கு ஏதுவாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி, அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது கட்சி பொறுப்புகள் அனைத்தையும் பறித்து உத்தரவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி மதுரையில் நடந்த தேவர் குரு பூஜை நிகழ்வில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து பங்கேற்றார் செங்கோட்டையன். இதனையடுத்து, கட்சியில் இருந்தே நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையே, செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் விஜய்யை சந்தித்து தவெகவில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையனை தவெக நிர்வாகிகள்…
‘AK64’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிலளித்துள்ளார். ’குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து படம் பண்ணவுள்ளனர். இதன் அறிவிப்பு, படப்பிடிப்பு எப்போது உள்ளிட்ட எதுவுமே தெரியாமல் இருக்கிறது. ஆனால், படப்பிடிப்புக்கான பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே விழா ஒன்றில் கலந்துக் கொண்ட ஆதிக் ரவிச்சந்திரனிடம் ’AK64’ குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ”அஜித் சார் படத்தின் முதற்கட்டப் பணிகள் கிட்டதட்ட முடிந்துவிட்டது. படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறேன். பிப்ரவரி மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கிவிடுவேன். அஜித் சார் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பதை எல்லாம் இப்போதைக்கு கூற முடியாது. ’குட் பேட் அக்லி’ படத்துக்கு பிறகு அஜித் சார் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளார். அதனால் இப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதனை மனதில் வைத்து இப்படத்தில் பணிபுரிந்து வருகிறேன். கார்…
கார்ல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் இந்தியாவின் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் சிதைப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டியுள்ளார். கம்யூனிசத்தின் தந்தை என போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ரவியின் இந்த பேச்சு கடும் விமர்சனத்தையும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது. எம்.எல்.ராஜா எழுதிய ‘கலியுக கல்வெட்டு’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நான் மாணவ பருவத்தில் இருந்த போது வீட்டில் பெரியவர்கள் சொல்லும் கதைகளை கேட்டிருக்கிறேன். ஆனால், அதே கதையை ஊரில் உள்ள சிலர் கூறும் போது, அது முரணாக இருந்தது. அதே கதையை புத்தகத்தில் படித்த போது, அது வேறு மாதிரியான அர்த்தத்தை கற்பித்தது. அப்போது தான், அதில் முழுமையான உண்மை இருக்கிறதா? என்று சந்தேகம் எழுந்தது. ஒரு உதாரணத்தை சொல்கிறேன். ஆங்கிலேயர்களால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போதைய…
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச.1 முதல் 19 வரை நடைபெறும் என்று கிரண் ரிஜிஜு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இது தொடர்பான அரசின் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் குறித்து எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் நாங்கள் ஒரு கூட்டத்தை கூட்ட உள்ளோம். நிறைவேற்றப்பட வேண்டிய நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களையும் நாங்கள் ஆய்வு செய்வோம். பின்னர், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும். அதில், எதிர்க்கட்சித்…