Author: Editor TN Talks

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் காணொலி பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் அந்த பதிவில் இணைத்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தங்களது நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி ‘மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் சார்பில், “கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகளால், ஆகஸ்ட் 3-ஆம்…

Read More

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான விசாரணைக்காக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு 2வது நாளாக புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், வழக்கறிஞர் அரசு உள்ளிட்டவர்கள் ஆஜராகினர். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியும், போன் மூலம் அழைத்தும், நேரில் சென்றும் அக்.30ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான விசாரணைக்காக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு 2வது நாளாக புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், வழக்கறிஞர் அரசு உள்ளிட்டவர்கள் ஆஜராகினர். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த…

Read More

“கணவனைப் பிரிந்து வாழ்ந்து வரும் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து 6 மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி வரும் வானூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளரை உடனடியாகக் கைது செய்திட வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 54 மாத கால திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. காவல் துறையின் செயல்பாடுகள் முற்றிலுமாக செயலிழந்துவிட்டது. இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம். விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த, கணவனைப் பிரிந்து வாழ்ந்து வரும் பெண் ஒருவர், தன்னை வானூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து 6 மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமை…

Read More

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றிப் பாதுகாத்து, சமூக நீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனிற்காக அயராது பாடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் பொதுநலத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம் ஆகும். கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்குட்பட்டு, மாநில சுயாட்சியே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். தமிழ்நாடு அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளர்ச்சி நோக்கி தொடர்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.…

Read More

திருடுப்போன நகைகளைக் காவல்துறையினர் கண்டுபிடிக்கத் தவறினால், பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தனது வீட்டில் திருடுபோன 75 பவுன் நகையைப் பல ஆண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி, மதுரையைச் சேர்ந்த சுஜா சங்கரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்  இந்த வழக்கின் விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி, திருடுபோன நகையை கண்டுபிடித்துத் தர உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் காவல்துறையினர் வழக்கை முடித்துவைக்கும் நாளிலிருந்து 12 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட நபருக்குத் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். திருடுபோன நகையின்…

Read More

காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது. 101 முதல் 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 முதல் 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 301 முதல் 500 வரை இருந்தால் மிகவும் அபாயகரமானதாகும். டெல்லியில் நேற்று நிலவரப்படி காற்று மாசு அளவு 450 புள்ளிகளாக இருந்தது. கடந்த சில வாரங்களாக இதே நிலை நீடிக்கிறது. இந்த சூழலில் டெல்லியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற டெல்லி அரசு நேற்று உத்தரவிட்டது. பள்ளிகள், கல்லூரிகளில் திறந்தவெளி மைதானத்தில் மாணவ, மாணவியர் விளையாட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Read More

கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான, விவசாயிகளுக்கு விரோதமான, பாரம்பரிய விதை இறையாண்மையை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் விதை மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் வகையில் மத்திய அரசு விதை மசோதா – 2025ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்தை அழித்து விவசாயிகள் விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. கட்டாய கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் தரக்கட்டுபாட்டு விதிமுறைகள் போன்றவற்றை அறிமுகம் செய்து விதை விற்பனையை தனியார் மயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விதைகள் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவவோ அல்லது தன்னளவில் பொருளாதார பலன்களை அடையவோ…

Read More

முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவாகக் கருதப்படுகிறது. இதில் புரதம், வைட்டமின்கள் (ஏ, டி, ஈ, கே, பி), தாதுக்கள் (இரும்பு, செலினியம், துத்தநாகம்) மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற விழிப்புணர்வு பெருகி வருவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் இதனைத் தங்களது தினசரி உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். இருப்பினும், “தினமும் முட்டை சாப்பிடலாமா? கொழுப்பு அதிகரிக்குமா? சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?” என்ற கேள்வி பலரிடையே எழுவது இயற்கையே. இந்த விவாதமானது, முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் அதன் பலன்கள் பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் எழுகிறது. எனவே, தினமும் முட்டை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா, அதன் மூலம் உடல் எடை குறைப்பு, தசை வளர்ச்சி, கண் ஆரோக்கியம் போன்ற நன்மைகள் ஏற்படுமா அல்லது கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படுமா என்பதைப் பற்றி விரிவாக அறிவது அவசியமாகிறது. அத்தியாவசிய…

Read More

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (தனி) தொகுதி விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாகும். இங்கு, 2011-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ப.தனபால் தமிழக சட்டப்பேரவை தலைவரானார். அதேபோல், 2016-ல் இங்கு வென்ற அதிமுக வேட்பாளர் வி.சரோஜா சமூகநலத்துறைக்கு அமைச்சரானார். அடுத்ததாக, 2021-ல் இங்கு வெற்றிபெற்ற திமுக-வின் மா.மதிவேந்தன், இப்போது ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார். ராசிபுரத்துக்கு இப்படியொரு ‘ராசி’ இருப்பதால் இம்முறை இங்கு போட்டியிட இரண்டு முக்கிய கூட்டணியிலும் போட்டி கடுமையாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில், கடந்த முறை அவினாசியில் போட்டியிட்டு வென்ற முன்னாள் சபாநாயகர் தனபால் இம்முறை தனது பழைய தொகுதியான ராசிபுரத்துக்கு மாறிவிடும் யோசனையில் இருக்கிறார். தனபாலுக்குப் போட்டியாக, கடந்த முறை சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராசிபுரத்தைத் தவறவிட்ட முன்னாள் அமைச்சர் சரோஜாவும் இம்முறை, விட்ட இடத்தைப் பிடிக்கும் முடிவில் இருக்கிறார். திமுக தரப்பில் அமைச்சர் மதிவேந்தனே மீண்டும் ராசிபுரத்தில் போட்டியிடுவார் என தகவல்…

Read More

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் ரூ.208.50 கோடி மதிப்பிலான செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.25) திறந்து வைத்தார். கோவையில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தொடர்ந்து கோவை மத்திய சிறை வளாகத்தை இடம் மாற்றிவிட்டு அங்கு 165 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல் கட்டமாக தற்போதைய தமிழக அரசின் சார்பில் கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 208.50 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 18.12.2023 அன்று கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் திட்ட பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மாநகராட்சியின் சார்பில் செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டப்பணிகள்…

Read More