Author: Editor TN Talks

தமிழ் வளர்ச்சிக்கு திமுக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் குழந்தைகளின் மீது மும்மொழியை திணிப்பது ஏன் என்று கேட்டிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உண்மையிலேயே அது அவரின் ஆதங்கமாக இருந்தால், அவர் குடும்பத்தினர் நடத்தும் ‘சன் ஷைன்’ பள்ளியில் இனி மும்மொழி இருக்காது என்ற முடிவை எடுக்க அப்பள்ளி நிர்வாகத்தை வற்புறுத்துவாரா? வசதி படைத்தவர்கள் மட்டும் மூன்று மொழியை கற்க வேண்டும், ஆனால், ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் கற்கக் கூடாது என்ற மலிவான எண்ணம் ஏன்? மத்திய அரசு, தமிழ் வளர்ச்சிக்கு ரூ.150 கோடியே ஒதுக்கிய நிலையில், ரூ.2,400 கோடியை செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுள்ளது புரிதல் இல்லாத ஒருவரின் ஆணவப் பேச்சையும்,…

Read More

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகம் தீவிரம் காட்டுவதால், இதுகுறித்து விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: மேகேதாட்டு அணை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருப்பது கவலை அளிக்கிறது. மத்திய நீர்வளத் துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், அதை திருப்பி அனுப்புவோம் என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு பிறகு வந்தவர்கள் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமலேயே விரிவான திட்ட அறிக்கையை ஆய்வுக்கு எடுத்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல, மேகேதாட்டு அணைக்கும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்கப்பட்டால், அரசு என்ன செய்யும்? கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்னவதி…

Read More

மத்​திய அரசு அமல்​படுத்​தி​யுள்ள 4 புதிய தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் நவ.26-ம் தேதி நாடு தழு​விய பொது வேலைநிறுத்த போராட்​டம் நடை​பெறும்என மத்​திய தொழிற்​சங்​கங்​கள் கூட்​டாக அறி​வித்​துள்​ளன. இதுதொடர்​பாக ஐஎன்​டி​யுசி, ஏஐசிடி​யுசி, எச்​எம்​எஸ், சிஐடி​யு,தொமுச உள்பட 10 மத்​திய தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்ள கூட்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஏற்​கெனவே நடை​முறை​யில் இருந்த 29 தொழிலா​ளர் நலச்சட்​டங்​களை நீக்​கி​விட்டு அவற்​றுக்கு பதிலாக புதி​தாக 4 தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​களை மத்​திய அரசு உரு​வாக்கி அவற்றை நவ.21 முதல் அமல்​படுத்​தி​யுள்​ளது. தொழிலா​ளர் விரோத, முதலா​ளி​களுக்கு ஆதர​வான இந்த சட்​டங்​களை தன்​னிச்​சை​யாக நடை​முறைப்​படுத்​தி​யிருப்​ப​தற்கு மத்​திய தொழிற்​சங்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக்​குழுசார்​பில் கடும் கண்டனத்தை தெரி​வித்​துக் ​கொள்​கிறோம். நான்கு தொழிலா​ளர் சட்ட தொகுப்​பு​களும் நவ. 21 முதல் அமல்​படுத்​தப்​படும் என ஜனநாயக விரோத, தன்​னிச்​சை​யான அறிவிக்​கை வெளியிட்டது, அனைத்து ஜனநாயக நெறி​முறை​களை​யும் மீறும் செயல். இது தொழிலா​ளர் நலன்​களை முற்​றி​லும் சிதைத்​துள்​ளது. ஏற்​கெனவே உள்ள 29…

Read More

பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் க்ரிட்டி சனோன் நடித்த “தேரே ஈஸ்ட் மெயின்” திரைப்படம் வரும் நவம்பர் 28ஆம் தேதி அன்று உலக அளவில் வெளியாகிறது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பிரமோஷன் வேலைகள் நாளுக்கு நாள் நல்ல படியாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று படக்குழு திரைப்படத்தை பிரமோஷன் செய்ய டெல்லிக்கு வந்திருந்தனர். இன்று டெல்லியில் நடந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் நகைச்சுவையாக ஒரு விஷயத்தை பரிமாறினார். “நான் என் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இடத்தில் முதலில் ராஞ்சனா, பின்னர் அட்ராஞ்சி ரே தற்போது தேரே இஷ்க் மெயின் இது போன்ற திரைக்கதையில் என்னை ஏன் தொடர்ந்து நடிக்க வைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் உங்களுடைய முகம் லவ் ஃபெயிலியர் முகம் (…

Read More

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது தென்னாப்பிரிக்க அணி தற்பொழுது இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்து தசை பிடிப்பு காரணமாக கேப்டன் சுப்மன் கில் வெளியேறினார். டெஸ்ட் தொடரை தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் துவங்க இருக்கிறது. அதில் கேப்டன் கில் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் தொடரிலும் அவர் விளையாடப் போவதில்லை என்கிற செய்தியை சற்று முன்னர் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஒரு நாள் தொடர் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தப் போகும் கேப்டன் யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு வீரர்கள் அந்த இடத்திற்கு வர அதிக…

Read More

காமெடியில் கொடி கட்டி கலக்கிய சந்தானம், சமீப வருடங்களாக தனித்து ஹீரோவாக நடித்து வருகிறார்.அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் பாதி ஹிட் ஆவதும், பாதி சரியாக ஓடாமல் போவதுமாக உள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் அவருடைய மார்க்கெட் நிச்சயமாக குறைந்துவிடும். இதை கருத்தில் கொண்ட சந்தானம் இனிவரும் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த இருக்கிறார். சந்தானம் புதிதாக க்ரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தத் திரைப்படத்தின் கதை விவாதத்திற்கு பிரபல கிரைம் திரில்லர் நாவல் எழுத்தாளரான ராஜேஷ்குமாரை சந்தானம் கடந்த வாரம் சந்தித்திருக்கிறார். https://x.com/RajeshNovelist/status/1990012444052459986?t=qoQmsfMkbzmSKy3xAI40Lg&s=19 இது சம்பந்தமான செய்தியை எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில் “தொலைபேசியில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது ஆரம்பத்திலேயே யார் என்று கண்டு விட்டேன். சொல்லுங்கள் என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு சந்தானம், ஐயா எனது அடுத்த திரைப்படம் கிரைம் திரில்லர் சம்பந்தமான திரைப்படம். உங்களிடம்…

Read More

தமிழர் பகுதிகளில் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவ முயலும் இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இலங்கையில் புத்தரை பயன்படுத்தி தமிழர் பகுதிகளில் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவ முயலும் இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும். இலங்கையில் ஈழத்தமிழர்கள் பெரும்பகுதியாக வாழும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் கடந்த 16ஆம் தேதி அங்குள்ள  கடற்கரையோரம் திடீரென ஒன்று திரண்ட பௌத்த பிக்குகளும், பௌத்த பக்தர்களும் புத்தர் விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டி, புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளனர். அதற்கு தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல் துறையினர் அங்கிருந்து சிலையை அப்புறப்படுத்தினர். ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள, பௌத்தவாதிகள் புத்தர் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறியதையடுத்து அடுத்த நாளே காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் காவலர்களின் கைகளாலேயே கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. இந்த விவகாரம் திரிகோணமலை மட்டுமல்லாமல் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read More

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் இலக்கிய உலகில் ஒளிர்ந்த நட்சத்திரம் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் பிறந்த ந.ஜெகதீசன், கல்லூரியில் படிக்கிற நாள்களிலேயே தமிழன்பன் எனும் புனைபெயரில் கவிதைகளை எழுதினார். டாக்டர் கலைஞர் அவர்களின்  தலைமையிலான கவியரங்கில் அவர் பங்கேற்ற போது, ‘ஈரோடு தமிழன்பன்’ என கலைஞர் அழைக்கவே, அதுவே பின்னாளில் பெயராக நிலைத்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு அவர் மீது பற்று கொண்டார். கல்லூரியின் இளங்கோ மன்ற ஆண்டு விழாவிற்குத்  தலைமையேற்க, பாவேந்தரை அழைத்து வந்தார் தமிழன்பன். பாரதிதாசனின் கவிதைகள் மீதான ஈர்ப்பும், அவருடனான நட்பும் தமிழன்பனுக்குப் பெரும் ஊக்கத்தை வழங்கின. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு புரட்சிக் கவிஞரோடு பத்தாண்டுக் காலம் உடன் பயணித்தார். தமிழன்பனின் ‘நெஞ்சின்…

Read More

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரும்,  செய்தி வாசிப்பாளருமான ஈரோடு தமிழன்பன்  இன்று காலமானார் என்ற செய்தியறிந்து  மிகுந்த வருத்தமடைந்தேன். தமிழ் மொழி, இனம் மீது மிகுந்த பற்று கொண்டவராக கவிஞர் ஈரோடு தமிழன்பன் பன்முகத் திறமை கொண்டவர். நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர், படைப்பாளி, கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர் என அனைத்துத் துறைகளிலும்  முத்திரை பதித்தவர்.  வாழும் வரை தமிழுக்காக உழைத்தவர். கவிஞர் ஈரோடு தமிழன்பன்  அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Read More

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 92. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1933-ஆம் ஆண்டு பிறந்த தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன். மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் தடம் பதித்த இவரின் கவிதைத் தொகுப்பான ‘வணக்கம் வள்ளுவ’ நூலுக்காக 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். வயது மூப்பு காரணமாக அண்மையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார். ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு தலைவர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More