Author: Editor TN Talks
“பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாட்டு பாடும் தம்பி விஜய் கூட ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடலம்மா மாநாடு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பணகுடி பகுதியில் மேய்ச்சல் நில உரிமையை நிலைநாட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. திருநெல்வேலியில் சீமான் தங்கியிருந்த கட்சி நிர்வாகி திருமண மண்டபத்தின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் அவர் போராட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இன்று பிற்பகலில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: “பணகுடி பகுதி மலையில் உள்ள மேய்ச்சல் நிலங்களை அரசே ஆக்கிரமிக்கிறது. தமிழக சட்டப் பேரவை தலைவருக்கு அங்கே…
யாருமே எதிர்பாக்காத வகையில் இந்திய மக்களுக்கு தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் NCRTC (National Capital Region Transport Corporation) ஒரு சேவையை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. அதன் அடிப்படையில் நமோ பாரத் ரயில் நிலையங்களிலும் நமோ பாரத் ரயில்களிலும் பிறந்தநாள் கொண்டாட்ட விழா, திருமணத்திற்கு முன்பாக மற்றும் பின்பாக எடுக்கப்படும் போட்டோ சூட் நிகழ்வு, இதை மட்டுமன்றி தனிப்பட்ட நிகழ்வுகளையும் நடத்திக் கொள்ளலாம். இதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். NCRTC வெப்சைட்டில் சென்று மக்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம். நமோ பாரத் ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் நிகழ்வுகளை நடத்த ஒரு மணி நேரத்திற்கு 5000 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பும் பின்பும் 30 நிமிடங்கள் கூடுதல் கால அவகாசமாக ( நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டிற்காகவும் மற்றும் நிகழ்வு முடிந்த பின்னர் புறப்பாட்டிற்காக ) கொடுக்கப்படும். இந்த நிகழ்வுகள் நடத்தும் வேளையில் அலங்காரம் மற்றும் பாதுகாப்புக்கான விதிமுறைகளை…
பிரேமம் திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலி பாடும் ஆளுவா பொலியிட தீரத்து பாடலை நினைத்துப் பார்த்தாலே இந்த நடிகையின் முகம் தான் ஞாபகத்துக்கு வரும். அவர் வேறு யாருமில்லை கேரளாவைச் சேர்ந்த அனுபாமா பரமேஸ்வரன் தான். பிரேமம் திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலி காதல் வயப்படும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அனுபவமா பரமேஸ்வரன் நடித்திருப்பார். அதுதான் அவருக்கு முதல் திரை உலகில் திரைப்படமுமாகும். அந்தப் படத்தில் இருந்து அனுபமா பரமேஸ்வரன் கேரளா திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரையுலகிலும் பிரபலமானார். பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து அதற்கு அடுத்த வருடமே (2016) தமிழில் நடிகர் தனுஷுக்கு கதாநாயகியாக கொடி திரைப்படத்தில் அவர் தமிழில் அறிமுகமானார். பிரேமம் திரைப்படத்திலிருந்து தொடர்ந்து ரசிகர்கள் அனைவரையும் கவரும் விதத்தில் நல்ல கதையை தேர்ந்தெடுத்து அனுபமா பரமேஸ்வரன் நடித்துக் கொண்டு இருக்கிறார். இதுவரையில் இந்த வருடத்தில் அவர் நடித்து வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை மொத்தம் 6. அதுமட்டுமல்ல…
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் இந்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே மற்றும் நிவேதித் ஆல்வா மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வாயில்களும் இன்றிரவு (நவ. 22) முதல் நாளை (நவ. 23) இரவு வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால், இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர் நீதிமன்றத்தை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். இதனை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை மக்கள் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மூடப்படும் என்று அறிவித்தது. இந்த நடைமுறை ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் இறுதி வாரத்தின் சனிக்கிழமையில் கடைப்பிடிப்பது வழக்கம். அதன்படி இன்று (நவ. 22) சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நாளை (நவ.…
தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர், தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து தேனி நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பவுளசியா பானு. இவர் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு முறையாக கட்டணம் செலுத்தி, குடிநீர் இணைப்பு பெற்றிருந்தநிலையில், ஊராட்சி நிர்வாகத்தால் இவரது வீட்டில் இருந்த குடிநீர் இணைப்பு சட்டவிரோதமாக துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் குடிநீர் இணைப்பை வழங்கக்கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் அவர் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்தநிலையில், இதுகுறித்து தேனி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் கடந்த 23.04.2024ல் பவுசியா பானு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தேனி நுகர்வோர் குறைதீர் ஆணையம் பவுசியா பானுவிற்கு குடிநீர் குழாய் இணைப்பை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும், மன உளைச்சலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரமும்…
தெலங்கானா மாநிலத்தில் நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 37 பேர் இன்று (நவ. 22) ஒரே நாளில் ஆயுத நடவடிக்கையை கைவிட்டுவிட்டு, அமைதி வாழ்க்கைக்காக சரணடைந்தனர். நாடு முழுதும் உள்ள நக்சல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக நக்சல் செயல்பாடுகள் அதிகமுள்ள மாநிலங்களில் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறது. பீகார், ஜார்க்கண்ட், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பாட்டில் இருக்கும் நக்சல் அமைப்பினர் தங்களின் ஆயுத நடவடிக்கையை கைவிட்டு, சரண் அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் தெலங்கானா மாநிலத்தில் இன்று (நவ. 22) ஒரே நாளில் நக்சல் அமைப்பின் நிர்வாகிகள் உள்பட 37 பேர் ஆயுத நடவடிக்கையை கைவிட்டு சரணடைந்துள்ளனர். அமைதியான, பாதுகாப்பான, அன்றாட வாழ்க்கைச் சூழலை அனுபவிக்கும் எண்ணத்தில் நக்சல்களின் சரண் நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாவர். நவீன ஏகே 47 ரக துப்பாக்கிகள், எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள், 330 ரக…
ஜெர்மனியை சேர்ந்த 70 வருட பாரம்பரிய நிறுவனமான “லாடா” புனேவில் தன்னுடைய புதிய கிளையை திறந்துள்ளது. இந்த நிறுவனம் துல்லியமான வெப்பக் கட்டுப்பாட்டு உபகரணங்களை தயாரிக்கும் உலகளாவிய முன்னணி நிறுவனம் ஆகும். ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கான வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்புகள், தெர்மோஸ்டாட்கள், மற்றும் குளிரூட்டிகள் போன்றவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது.இது மறைந்த ஆஸ்திரிய பந்தய கார் ஓட்டுநர் நிக்கி லாடாவால் நிறுவப்பட்ட முன்னாள் லாடா ஏர் மற்றும் லாடாமோஷன் விமான நிறுவனங்களுடனும் தொடர்புடைய நிறுவனமும் ஆகும். இந்த நிறுவனம் தயாரிக்கும் உபகரணங்களில் வெப்பநிலையை – 150° முதல் 550 டிகிரி செல்சியஸ் வரை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் தயாரிக்கும் உபகரணங்களில் 365 KW வரை குளிரூட்டும் திறனும் இருக்கும். அதோட மட்டுமல்லாமல் இந்த உபகரணங்களில் அதிநவீன நெட்வொர்க் திறன்கள் மற்றும் அதிநவீன உள்ளுணர்வு செயல்பாடுகளும் அடங்கும். நிலையான நீர் குளியல் தொட்டிகள், குறைந்த மற்றும் உயர்…
கவுகாத்தி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில், 2வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் உள்ள பர்சாபரா மைதானத்தில் இன்று (நவ. 22) தொடங்கி உள்ளது. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்க்ரம், ரிக்கெல்டன் சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். அந்த அணியின் ஸ்கோர் 82 ரன்னாக இருந்த போது, மார்க்ரம் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரிக்கெல்டன் 35 ரன்களும், ஸ்டப்ஸ் 49 ரன்களும், பவுமா 41 ரன்களும் என தங்களின் பங்களிப்பை…
உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான குழுவை அமைக்க வேண்டும் என்று ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு இன்று (நவ. 22) தொடங்கி உள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா தலைமையில் உச்சி மாநாடு தொடங்கி உள்ளது. இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு உள்ளது. ஜி20 உறுப்பு நாடுகள் உள்பட 42 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். முதல் முறையாக ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர், அதனை உற்சாக…