Author: Editor TN Talks
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோரான் மம்தானி சந்தித்தார். அப்போது அவரிடம், “நீங்கள் இப்போதும் ட்ரம்ப்பை ஒரு பாசிஸ்ட் என்பீர்களா?” எனக் கேள்வி எழுப்பப்பட, அதற்கு ட்ரம்ப் ரியாக்ட் செய்தவிதம் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக இந்த சந்திப்பு குறித்து ட்ரம்ப், “நியூயார்க் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோரான் மம்தானியுடனான சந்திப்பு சிறப்பானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருந்தது” என்று கூறினார். ஓவல் மாளிகையில் தனக்கு அருகில் மம்தானி நிற்கையில் அவர் இவ்வாறு கூறினார். மம்தானி – ட்ரம்ப் சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பாக நடந்தது. இந்த சந்திப்புக்குப் பின்னர் இருவருமே கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களின் குரலில் முன்பு நிலவிய எதிர்ப்பு தொனி சற்றே தணிந்திருந்ததை கவனிக்க முடிந்தது. அப்போது பேசிய ட்ரம்ப். “மம்தானி எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறாரோ நான் அவ்வளாவு மகிழ்ச்சியாக இருப்பேன். புதிய மேயர் அவர் பணிகளில் வெற்றி பெற விரும்புகிறேன். எங்களுக்குள் ஒரே ஒரு விஷயம் தான் பொதுவானது.…
துபாய் விமானக் கண்காட்சியின் போது நடந்த தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் நமன்ஷ் சியாலின் மரணத்தால் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமம் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளது. துபாயில் நேற்று நடைபெற்ற விமானக் கண்காட்சியில் சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் ‘தேஜஸ்’ போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் பைலட் விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார். இமாச்சலப் பிரதேசத்தின் தெஹ்ஸில் நக்ரோட்டா பக்வானில் உள்ள பாட்டியல்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான விமானி நமன்ஷ் சியால், அவரது மனைவியும் இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார். அவர் ஆறு வயது மகள் மற்றும் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று துபாயில் நடந்த துயரச் சம்பவத்தின் செய்தியைக் கேட்டதும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரது சொந்த ஊரில் துக்கத்தில் மூழ்கினர். இதுகுறித்து பேசிய நமன்ஷின் மாமா ஜோகிந்தர் நாத் சியால்,…
வழக்கறிஞர் மற்றும் நீதிபதியாக 40 ஆண்டு கால பயணத்தை முடித்துக்கொண்டு முழு திருப்தி மற்றும் மனநிறைவுடன் விடைபெறுவதாகவும், நீதியின் மாணவனாக விடைபெறுவதாகவும், தனது கடைசி வேலை நாளான நேற்று (நவம்பர் 21) நடந்த பிரிவு உபச்சார விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறினார். நேற்று மாலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (SCBA) நடத்திய பிரிவு உபச்சார விழாவில் உரையாற்றிய 52வது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், கிரீமிலேயர் தீர்ப்புக்காக தனது சொந்த சமூகத்தினரிடமிருந்து எதிர்கொண்ட கோபத்தை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பேசிய அவர், “அரசியலமைப்பின் தீவிர மாணவனாக, சமத்துவம், நீதி, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள் எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமானவை. அமராவதியில் ஒரு எளிய பின்னணி மற்றும் அதிகம் அறியப்படாத இடத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய என் பயணத்தில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். டெல்லியில் ஒரு சிறந்த பள்ளியில் படிக்கும் ஒரு…
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (21-11-2025) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (22-11-2025) காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.…
தென் கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய உற்பத்தி ஆலை இந்தியாவில் உள்ளது. அங்கே ஸ்மார்ட் போன்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி, குளிர்சாதனப் பொருள் என ஒரு சில வீட்டு உபயோக பொருட்களும் இங்கு தயாராகி வருகின்றன. இந்தியாவில் தயாராகும் சாம்சங் பொருட்கள் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுமதி ஆகி வருகிறது. இந்தியாவில் உள்ள உற்பத்தியாளையில் தயாரிக்கப்படும் சாம்சங் பொருட்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவில் உற்பத்தியான சாம்சங் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது மட்டுமல்லாமல் samsung நிறுவனத்திற்கு மிகப்பெரிய வருவாயும் ஈட்டி கொடுத்துள்ளது. இந்திய உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சாம்சங் பொருட்களின் ஏற்றுமதி வருவாய் : நிதியாண்டு 2023 : 37,486.5 கோடி நிதியாண்டு 2024 : 36,842.3 கோடி நிதியாண்டு 2025 : 45,930 கோடி சாப்ட்வேர் சம்பந்தமான ஏற்றுமதி வருவாயிலும் சாம்சங் நிறுவனம்…
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடர் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சகநாட்டைச் சேர்ந்த ஆயுஷ் ஷெட்டியுடன் மோதினார். இதில் லக்ஷயா சென் 23-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் சோ டியன் சென்னுடன் மோதுகிறார் லக்ஷயா சென். ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 19-21 15-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஃபஜார் அலிஃபான், முகமது ஷோகிபுல் ஃபிக்ரி ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (நவ.23) காஞ்சிபுரம் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்திக்கும் நிலையில், அதுகுறித்து முக்கிய அறிவுறுத்தல்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத்தினரும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்களை…
கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அதை விமர்சிக்கும் விதமாக தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, எக்ஸ் வலைதளத்தில், ‘இலங்கை, நேபாளம்போல தமிழகத்திலும் புரட்சி வெடிக்கும்’ என்று பதி விட்டார். இதையடுத்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து, வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டதாகக் கூறி அவர் மீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்தார். கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அதை விமர்சிக்கும் விதமாக தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா,…
தொடர் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை பூவின் விலை அதிரடியாக உயர்ந்து, கிலோ ரூ.2,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்திற்கு மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி, பாலமேடு, சோழவந்தான், மேலூர், கொட்டாம்பட்டி, வலையங்குளம், திருமங்கலம், திருப்பரங்குன்றம், கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதேபோல், மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த மதுரை மல்லியின் மணம், தடித்த காம்பு, நீடித்த தன்மை காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு புவிசார் அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் நிலவும் தொடர் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மலர் சந்தைக்கு வரும் மல்லிகை பூவின் வரத்து குறைத்துள்ளது. பூக்களின் வரத்து…
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தரிசனம் செய்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் முன்னாள் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை முன்னாள் அதிபர் ரணில் இன்று காலை விமான மூலம் மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையம் வந்த அவர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு மனைவியுடன் சென்றார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோயிலில் கிழக்கு பகுதியான அம்மன் சன்னதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, அம்மன் சன்னதியிலும் சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் 30 நிமிடங்களுக்கும் மேலாக அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். மேலும், அவர் கோயில் முன்பு நின்று தனது துணைவியாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில்,…