Close Menu
    What's Hot

    91 டாலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் பரபரப்பு!

    தீவிரமடையும் போர்!. “ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை”!. டிரம்ப் திட்டவட்டம்!

    நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து கோர விபத்து!. 41 பேர் பலி; கடல் சீற்றத்தால் மீட்புப் பணியில் பெரும் சவால்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிரடியாக உயர்ந்த மதுரை மல்லிகை – கிலோ ரூ.2800க்கு விற்பனை
    தமிழ்நாடு

    அதிரடியாக உயர்ந்த மதுரை மல்லிகை – கிலோ ரூ.2800க்கு விற்பனை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025Updated:November 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    du 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொடர் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை பூவின் விலை அதிரடியாக உயர்ந்து, கிலோ ரூ.2,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்திற்கு மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி, பாலமேடு, சோழவந்தான், மேலூர், கொட்டாம்பட்டி, வலையங்குளம், திருமங்கலம், திருப்பரங்குன்றம், கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    அதேபோல், மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த மதுரை மல்லியின் மணம், தடித்த காம்பு, நீடித்த தன்மை காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு புவிசார் அந்தஸ்து வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மதுரையில் நிலவும் தொடர் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மலர் சந்தைக்கு வரும் மல்லிகை பூவின் வரத்து குறைத்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்ததால், விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லி விலை அதிகபட்சமாக கிலோ ரூ.2 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பாக மதுரை மல்லி கிலோ ரூ.800-க்கும் விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ.2 ஆயிரத்து 800-க்கும் விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், “பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. மதுரை மல்லிகை வரத்து குறைவாக உள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாக உள்ளது. வரத்து குறைவால் விலையும் அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் இதே விலை நிலவரமே நீடிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தரிசனம்
    Next Article வன்முறையை தூண்டும் வகையில் வலைதளத்தில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து
    Editor TN Talks

    Related Posts

    91 டாலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் பரபரப்பு!

    July 22, 2026

    தீவிரமடையும் போர்!. “ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை”!. டிரம்ப் திட்டவட்டம்!

    July 22, 2026

    நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து கோர விபத்து!. 41 பேர் பலி; கடல் சீற்றத்தால் மீட்புப் பணியில் பெரும் சவால்!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    91 டாலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் பரபரப்பு!

    தீவிரமடையும் போர்!. “ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை”!. டிரம்ப் திட்டவட்டம்!

    நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து கோர விபத்து!. 41 பேர் பலி; கடல் சீற்றத்தால் மீட்புப் பணியில் பெரும் சவால்!

    18 வயதில் விபத்தில் பறிபோன இளம் நடிகையின் உயிர்..!! சோகத்தில் திரையுலகம்..!! யார் தெரியுமா..??

    பரபரப்பின் உச்சத்தில் டெல்லி..!! போராட்டங்களுக்கிடையே இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.