Author: Editor TN Talks
நவம்பர் 21, 2025 : சற்று நேரத்திற்கு முன்பு மத்திய அரசு 4 புதிய தொழிலாளர் குறியீடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது வந்த நான்கு புதிய நான்கு குறியீடுகள் இந்தியாவில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த 29 தொழிலாளர் சட்டங்களை எளிமையாகவும், வெளிப்படையாகவும் அதே நேரத்தில் எதிர்காலத்துக்கு ஏற்ற கட்டமைப்பை இணைத்து ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவான அதிகாரத்தை கொடுத்து, எதிர்கால பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. புதிய நான்கு தொழிலாளர் குறியீடுகளை எடுத்துக்கூறும் வகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், “ ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவில், இந்திய அரசு நான்கு தொழிலாளர் குறியீடுகளான – ஊதியக் குறியீடு,2019 , தொழில்துறை உறவுகள் குறியீடு,2020 , சமூகப் பாதுகாப்பு குறியீடு,2020 மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு,2020 ஆகியவை நவம்பர் 21, 2025…
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் ( அரசியல் வாழ்க்கைக்கு சென்று விட்டதால் திரை உலகில் அவருடைய கடைசி திரைப்படம் ), வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் அன்று பட்டிதொட்டி எங்கும் கோலகாலமாக வெளியாக உள்ளது. படத்தின் முதல் பாடல் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பையும் பெற்றது. தளபதி விஜய் திரைப்படம் வருவதற்கு முன்பாக திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக விமர்சையாக நடைபெறும். அதிலும் குறிப்பாக ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசும் பேச்சு அனைவரும் ரசிக்கப்படும் படியாக இருக்கும். தளபதி விஜய் நடிப்பில் அவருடைய கடைசி திரைப்படமாக அமைய இருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்குமா நடக்காதா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா ( கே…
பால் என்றாலே நிறைய ஊட்டச்சத்து அதில் உள்ளது என்றுதான் நாம் நினைத்திருப்போம். குழந்தைப் பருவத்தில், ‘தினமும் ஒரு கப் சூடான பாலை குடித்து வந்தால் எலும்புகள் வலிமைப்பெறும்’ என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் கடந்த சில தினங்களாகவே, பசும்பாலை விட இது நல்லது, அது நல்லது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீகன் பின்பற்றுவோர் இன்னும் ஒருபடி மேலே போய் ‘பசும்பாலே வேண்டாம், சோயா பால் குடியுங்கள்’ என்கின்றனர். இதற்கிடையே எருமைப்பால் முதல் ஒட்டகப்பால் வரை எல்லா பால் வகைகளும் சந்தைக்கு வந்துவிட்டன. இப்போ என்ன, பசும்பாலை குடிக்கலாமா வேணாமா என நீங்கள் யோசிக்கக்கூடும். இதுபற்றி Nutrition & Metabolism மருத்துவ இதழில் செய்யப்பட்ட ஆய்வில், மிதமான அளவில் அன்றாடம் பால் குடிப்பதன்மூலம் இதய நோய்கள், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை தடுக்கப்படும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பாலில் அதிக தரமான புரதம், கால்சியம்,…
ரூ. 1200 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி இயக்கும் வாரணாசி திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் ராஜமவுலி, நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்டோருக்கான சம்பளம் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தப் படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பாபு ருத்ரா, ராமா என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ராஜமவுலி. மகேஷ் பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாக ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறியிருந்தார். வாரணாசி படத்தில் பிரியங்கா சோப்ரா மந்தாகினி என்ற கதாபாத்திரத்திலும் பிருத்வி ராஜ், கும்பா என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். பெரிய பொருட்செலவில் இந்தப் படம் தயாராகி வருகிறது. படத்தின் பட்ஜெட் ரூ.1200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஷர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருமங்கலத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக தியாகேஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஷர்புதீனுக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து ஷர்புதீன், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் சரத், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், 10 கிராம் கஞ்சா, சுமார் 27 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
யூ டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூ டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது எனவும், சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. இது சர்வதேச சந்தையில் ஒரு கவலையளிக்கும் விஷயமாகும். ஆனால், ஒரு நாட்டில் நமது 1 இந்திய ரூபாய்க்கு 500 மடங்கு அதிக மதிப்புள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதாவது, நீங்கள் அங்கு வெறும் ரூ.1 கொடுத்தால், உங்களுக்கு சுமார் ரூ.500 கிடைக்கும். இதுகுறித்து விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானின் நாணயம், உலகின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட நாணயமாக மாறியுள்ளது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில், ஈரானில் நம் ஒரு இந்திய ரூபாய் சுமார் ரூ.490 முதல் ரூ.500 ரியால்களுக்கு சமம். நீண்ட பொருளாதாரத் தடைகள், நாள்பட்ட பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஈரானின் நாணயம் ‘ஈரானிய ரியால்’ என்று அழைக்கப்படுகிறது. நவம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி, தற்போதைய மாற்று…
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பாக்தா பகுதியில் அரிதான மற்றும் அதிர்ச்சிகரமான ஒரு நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒருவர், தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறையின் பின்னணியால் திடீரென வீட்டிற்குத் திரும்பியதால், அவரது குடும்பத்திலும், கிராமத்திலும் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 1997 பிப்ரவரி மாதம் ஒருநாள் காலை தனது வீட்டை விட்டு வெளியேறிய 55 வயதான ஜக்பந்து மண்டல் என்பவர், தனது மனைவி சுப்ரியா மற்றும் இரு குழந்தைகளை விட்டு காணாமல் போனார். பல நாட்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஒரு ஜோதிடர் அவர் இறந்துவிட்டதாக கூறியதால் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளையும் முடித்து, அவர் திரும்பி வரமாட்டார் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திங்கட்கிழமை மதியம், ஜக்பந்துவே நேரடியாக அவர்களின் வீட்டின் கதவைத் தட்டினார். திடீர்…
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் படிவத்துடன் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கி நிரப்பி அவற்றை பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். படிவங்களை தவறுதலாக பூர்த்தி செய்து முகாமிற்கு எடுத்து வரும் பொதுமக்களின் படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒயிட்னர் மூலம் திருத்தி எழுதுவதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், படிவம் சரியாக இருப்பின், ஆவணங்கள் ஏதும் பெறக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தும், ஆவணங்களை கொண்டு வரும்படி வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத்…
திருநின்றவூர் ரயில் பணிமனையில் நடைபெறும் பராமரிப்புப் பணி காரணமாக, சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கடற்கரை மற்றும் சென்ட்ரலிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, திருநின்றவூர் வரை இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் காலை 7 மணி முதல் மதியம் மூன்று நாற்பது மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எண்ணூரில் இருந்து சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், அதேபோல் ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரல், கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.