Author: Editor TN Talks

பிஹார் முதல்வராக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவரது அமைச்சரவையில் இரண்டு துணை முதல்வர்கள் உள்பட 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். நிதிஷ் குமார் அமைச்சரவையில் கடந்த முறை துணை முதல்வராக இருந்த பாஜகவின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் இம்முறையும் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாஜகவைச் சேர்ந்த மங்கல் பாண்டே, திலிப் ஜெய்ஸ்வால், நிதின் நபின், ராம் கிரிபால் யாதவ், சஞ்சய் சிங் டைகர், அருண் சங்கர் பிரசாத், சுரேந்திர மேத்தா, நாராயண் பிரசாத், ரமா நிஷாத், லகேந்திர குமார் ரோஷன், ஸ்ரேயாசி சிங், பிரமோத் குமார் ஆகிய 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதன்மூலம், நிதிஷ் குமார் அமைச்சரவையில் அதிகபட்சமாக பாஜகவின் 14 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவன் குமார், அஷோக் சவுத்ரி,…

Read More

பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் என்டிஏ கூட்டணி தலைவர்கள் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் இன்று (நவம்பர் 20) பிஹார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிதிஷ் குமார் பதவியேற்ற உடனேயே, பாஜக தலைவர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ​​ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஜேடியு தலைவர்கள் விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவன் குமார், பாஜக தலைவர்கள் மங்கள் பாண்டே, திலீப் குமார் ஜெய்ஸ்வால் மற்றும் நிதின் நபின் உள்ளிட்ட பலரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னதாக, நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டப்பேரவை குழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, பாட்னாவில் உள்ள நிதிஷ்குமாரின் இல்லத்தில் நடைபெற்ற ஜேடியு சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் ​​அவர் ஜேடியு சட்டப்பேரவை கட்சியின்…

Read More

நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “விவசாயிகளிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம். கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் மோடி வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை. அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்? கன மழையால் பாதிக்கப்பட்ட…

Read More

இந்தியாவின் கிழக்கு லடா பகுதியில் சுமார் 13,000 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்-நியோமா விமானப்படை நிலையத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் (12- 13ஆம் தேதி) 2025, அன்று விமானப்படை தலைவர் மார்ஷல் ஏபி சிங் C-130J சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானத்தின் தொடக்க தரையிறக்கத்தை நிகழ்த்தினார். இந்த விமானப்படை நிலையம் இந்திய – சைனா எல்லைக்கோட்டில் இருந்து வெறும் 25 முதல் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 2.7 கிலோமீட்டர் ஓடுபாதையை கொண்ட இந்த விமானப்படை நிலையம் உலக அளவில் ஒரு சிறந்த விமானப்படை நிலையமாக பார்க்கப்படுகிறது. இது நவீன செயல்பாட்டு உள்கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்படலாம். அதுமட்டுமின்றி போர் ஜெட் பயணங்கள், கனரக-தூக்கும் போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை இந்த விமானப்படை நிலையத்தில் நம்மால் சுலபமாக இயக்க முடியும். சுமார் 218 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த விமானப்படை நிலையம் உலகின் மிக உயரமான…

Read More

சட்டவிரோத குவாரிகள் நடத்துவோர் மீது அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த காசிராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘தமிழகத்தில் சுமார் 1700 கல் குவாரிகளுக்கு அரசு உரிமம் வழங்கியுள்ளது. குவாரி உரிமம் பெறுபவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் பல மடங்கு அதிகமாக கற்களை வெட்டுகின்றனர். பலர் உரிமம் காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக கற்களை வெட்டி விற்பனை செய்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் பல்வேறு சட்டவிரோத கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. சிலர் அரசு புறம்போக்கு நிலங்களை பட்டா நிலமாக போலியாக ஆவணங்கள் தயாரித்து அந்த இடங்களில் கல்குவாரிகள் நடத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. புதுக்கோட்டையில் எழில் நகரைச் சேர்ந்த முருகேசனும், கரூர் ஆண்டாங்கோயிலில் ரங்கசாமி என்பவரும் சட்டவிரோத குவாரி நடத்தி…

Read More

தமிழகத்தில் நாளை (நவ.21) தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வருகின்ற சனிக்கிழமை (நவ.22) வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில்,…

Read More

நடிகை ரெஜினா காஸண்ட்ரா தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் ‘கண்ட நாள் முதல்’ படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் 2005-ம் ஆண்டு நவ.18ம் தேதி வெளியானது. அவர் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சிப் பதிவில், “முதல் முறையாக ஒரு படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றது, நேற்று நடந்தது போல இருக்கிறது. அந்த முதல் நாளில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத பதற்றத்தை உணர்ந்தேன். படங்களில் வரும் கதாபாத்திரங்களின் மூலம் பல வாழ்க்கைகளை வாழ்ந்திருக்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுத்தது. சந்தேகம், பைத்தியக்காரத்தனம் போன்ற தருணங்களும் இருந்தன. இதை முழுவதும் கடந்து வர என்னுடன் பார்வையாளர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு உற்சாகமும், ஒவ்வொரு அன்பின் துளியும் என் பலமாக மாறியது. அதுதான் என்னை வழி…

Read More

பிரபலங்களில் பெயரில் நடக்கும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், நடிகை அதிதி ராவ் ஹைதாரி, தன் பெயரில் போலி வாட்ஸ்-அப் கணக்கை உருவாக்கி, புகைப்படக் கலைஞர்களிடமிருந்து பணம் பறிக்க முயன்றவர்கள் பற்றி எச்சரிக்கை செய்திருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ரேயா பெயரில் போலி வாட்ஸ்-அப் கணக்கைத் தொடங்கி மர்மநபர்கள் சிலர் ஏமாற்றி வருவதாக அவர் எச்சரிக்கை செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில், செல்போன் எண்ணுடன் கூடிய ஸ்கிரீன் ஷாட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “யாரோ ஒருவர் என்னைப் போல ஆள்மாறாட்டம் செய்ய முயல்வதாக நண்பர்களிடமிருந்து அழைப்புகள் வருகின்றன. இது யார் என்று தெரியவில்லை. இது என்னுடைய எண்ணும் இல்லை. இந்த போலி எண்ணிலிருந்து விலகி இருங்கள். துரதிர்ஷ்டவசமான விஷயம் என்ன வென்றால் அந்த போலி நபர், நான் போற்றும் நபர்களிடமும் நான் பணியாற்ற விரும்புவர்களையும் தொடர்பு கொண்டிருக்கிறார். இதுபோன்ற மோசடி வேலைகளைச் செய்து ஏன் உங்கள் நேரத்தை…

Read More

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – உத்​தரபிரதேசம் அணி​கள் இடையிலான ஆட்​டம் கோவை​யில் நடை​பெற்று வந்​தது. தமிழ்நாடு அணி முதல் இன்​னிங்​ஸில் 455 ரன்​கள் குவித்து ஆட்டமிழந்​தது. இதையடுத்து பேட் செய்த உத்​தரபிரதேச அணி 3-வது நாள் ஆட்டத்​தின் முடி​வில் 113 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 339 ரன்​கள் எடுத்​தது. ரிங்கு சிங் 98, ஷிவம் சர்மா 18 ரன்​களு​டன் களத்தில் இருந்​தனர். நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய உத்​தரபிரதேச அணி 145.1 ஓவர்​களில் 460 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. ரிங்கு சிங் 247 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 17 பவுண்​டரி​களு​டன் 176 ரன்​கள் விளாசி​னார். ஷிவம் சர்மா 22, கார்த்​திக் யாதவ் 20, குனால் தியாகி 5 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். தமிழக அணி சார்பில் வித்​யூத் 4, சாய் கிஷோர் 3, சரவண குமார் 2 விக்கெட்களை வீழ்த்​தினர்.…

Read More

“அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை கொண்டு மேற்கொள்வதால் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளது” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ராமேசுவரத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. கவுரவ கொலையை தடுக்க சட்டம் கொண்டு வந்ததுபோல, கட்டாயக் காதல், கட்டாய திருமணத்தை தடுக்க சட்டமியற்ற வேணடும். தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியின மக்கள் வாழும் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணித்துள்ளனர். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஒரு மாதத்தில் செய்து முடிக்க முடியுமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை கொண்டு இந்தப் பணியை மேற்கொள்வதால் முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளது. எனவே, வாக்குசாவடி நிலை அலுவலர்களைக் கொண்டு இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும். இப்பணியில் மாநில அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மத்திய…

Read More