Author: Editor TN Talks
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அப்போது, அங்கு ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வந்தன. சேலத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் ஒரு ஆம்புலன்ஸை வழிமறித்து, ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மணிகண்டன், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார். இது தொடர்பான மற்றொரு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் நிபந்தனை ஜாமீன் பெற்றனர். இந்நிலையில், இந்த 7 பேரும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மாஜிஸ்திரேட் பரத்குமார் முன்னிலையில் சரணடைந்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் சேலம் திரும்பினர். அவர்கள் இன்று (நவ.20) முதல் சேலம் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுவர். 2-வது முறையாக விசாரணை: கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் கடந்த 13-ம்…
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (நவ.20) கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இருமுறை உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு என சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் தங்கம் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது. தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால், நகை தயாரிப்புத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் மாதங்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு…
ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் சவால்விடும் கட்சியாக தேமுதிக உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சார பயணம் மேற்கொண்ட பிரேமலதா அங்கு பேசியதாவது: 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேமுதிக பெறும். ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் சவால்விடும் வகையில் தமிழகத்தில் வாக்குச் சாவடி முகவர்களை நியமித்துள்ளோம். அடுத்ததாக கடலூரில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாட்டை நடத்த இருக்கிறோம். அதற்காக அனைவரும் கடலூரை நோக்கி வரவேண்டும். அந்த மாநாட்டின் வெற்றிதான் நமது 2026 தேர்தல் வெற்றிக்கான அச்சாரம். வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியை அமைப்போம். எஸ்ஐஆர் பணிகளின் போது நமது வாக்கு இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். அப்படி உறுதிப்படுத்தி விட்டால் நமது வாக்கை யாரும் திருடமுடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
விளையாட்டுத் துறையில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பில் சர்வதேச தரம் வாய்ந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. அதேபோன்று அதே வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் மேஜைப்பந்து விளையாட்டுக்கான முதன்மை நிலை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நீச்சல் குளம் மற்றும் மேஜைப்பந்து முதன்மை நிலை மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…
பாமக சார்பில், திமுக ஆட்சியின் தொழில் முதலீடுகள் குறித்த உண்மை நிலை என்ன என்பதை விளக்கும் வகையில் ஆவண புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கி, ‘திமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்’ என்ற ஆவண புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அன்புமணி பேசியதாவது: தமிழகத்தில் ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் நடந்திருக்கிறது என்றும், அதன்மூலம் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் தொடர்ந்து ஒரு பொய்யைச் சொல்லி வருகிறார்கள். அது பொய் என்று இந்த ஆவணம் மூலம் நிரூபித்திருக்கிறோம். குறிப்பாக, 2025 செப்டம்பர் மாதம் வரை ரூ.11,32,575 கோடியில் 1,059 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், இதன்மூலம், 34,02,998 வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அரசு தரப்பில் கூறப்படுள்ளது. அதாவது, 2021-22-ம் ஆண்டில் ரூ.68,405 கோடி மதிப்பீட்டில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…
தேசியக் கட்சியான பாஜக கூட புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து, பி டீமை உருவாக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பாரம்பரியமாக அங்கே அரசியல் செய்து வரும் அதிமுக-வின் நிலைதான் அந்தோ பரிதாபமாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்த புதுச்சேரி அதிமுக, 10 இடங்களில் போட்டியிட்டு ஐந்தில் வென்றது. அப்போது அந்தக் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனக்குத் தேவையான 15 இடங்கள் கிடைத்துவிட்டதால் ரங்கசாமி தந்திரமாக அதிமுக-வை கழற்றி விட்டார். இதனால் அப்போது ஜெயலலிதா ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார். இதனால் அடுத்த தேர்தலில் தனித்தே களம் கண்ட அதிமுக, 4 இடங்களைப் பிடித்தது. கடந்த முறை, ரங்கசாமியையும் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட அதிமுக, அனைத்திலும் தோற்றது. இந்தத் தோல்விக்குக் காரணம் பாஜக தான் என தமிழகத்தை போலவே முடிவெடுத்த புதுச்சேரி அதிமுக,…
அதிமுக-வை ஒருங்கிணைப்பதற்காக தொண்டர்கள் மீட்புக் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் ஓபிஎஸ் 24-ம் தேதி சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார். இதில் என்ன ‘புரட்சிகரமான’ முடிவை எடுக்கப் போகிறார் என்று தெரியாத நிலையில், அவரது அடுத்த மூவ் குறித்து கலர் கலராய் செய்திகள் பத்திரிகைகளில் இடம் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இபிஎஸ்ஸை பகைத்துக் கொண்டு ஓபிஎஸ் பின்னால் அணி வகுத்த முக்கிய தலைகளில், ஒரத்தநாடு வைத்திலிங்கமும், முதுகுளத்தூர் ராமர் எம்பி-யும் தான் தற்போது மிஞ்சி நிற்கிறார்கள். அதிலும் வைத்திலிங்கம் எந்த நேரத்திலும் எந்தப் பக்கமும் சாயலாம் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம், யாரைச் சேர்த்தாலும் ஓபிஎஸ், தினகரனை கட்சிக்குள் விடவே மாட்டேன் என்று கறாராய் நிற்கிறார் இபிஎஸ். என்றாலும் இவர்கள் இருவரையும் கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சிகளை இன்னமும் கைவிடவில்லை பாஜக. இதனால் இன்னும் காலம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் இபிஎஸ், மெதுவாகவே அடி எடுத்து வைக்கிறார். இந்த நிலையில், ஓபிஎஸ்…
எதிர்க்கட்சிகள் எல்லாம் எஸ்ஐஆரை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க அலுப்பில்லாமல் மக்களுக்கு அரசாங்கப் பணத்தை திட்டம் என்ற பெயரில் எடுத்துக் கொடுத்து பிஹாரில் ஆட்சியை தக்கவைத்திருக்கிறது நிதிஷ் – பாஜக கூட்டணி. பிரதமர் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் சுமார் 75 லட்சம் மகளிருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதே பிஹார் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்ததற்கும் ஆளும் கூட்டணி அமோக வெற்றி கண்டதற்கும் காரணி என்கிறார்கள். இதே ஃபார்முலாவை தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வேறு ரூட்டில் பரீட்சித்துப் பார்ப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் பாஜக கூட்டணி விவாதித்துக் கொண்டிருக்கிறது. இதை சமாளிக்கும் விதமாக தமிழகத்தில் ஆளும் திமுக-வும் கஜானா பணத்தை தேர்தல் களத்தில் இறக்கி ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். பிஹார் லெவலுக்கு ’வாரி வழங்க’ இங்கே கஜானா ’வெயிட்டாக’ இல்லை என்றாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு…
சோசியல் மீடியா மற்றும் வலைதளங்கள் அனைத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பற்றிதான். நேற்று இரவு சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவின் மேல் சவுதி அரேபியா முதலீடு செய்யப்பட்டிருந்த 600 பில்லியன் டாலர்களை இப்பொழுது 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்துப் போவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் இரு நாட்டின் பாதுகாப்பு முதல் சிவில் அணுசக்தி கூட்டு ஒப்பந்தம் வரையிலான பேச்சு இந்த விருந்தில் நடந்து முடிந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருந்தில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இலான் மஸ்க், டிம் குக், கால்பந்தாட்ட பிஃபா ப்ரெசிடெண்ட் என பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுள் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ…
தனுஷ் மற்றும் அவரது மேலாளர் ஸ்ரேயஸ் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும், தனது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கமளித்துள்ளார். சின்னத்திரையில் ‘வானத்தைப் போல’, ‘அன்னம்’, ‘மருமகள்’ போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மான்யா ஆனந்த். அண்மையில் இவர் அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளாகி, வைரலானது. தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை தொடர்பு கொண்ட நபர், தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டார். அந்த படத்தில் நடிக்க, அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என அவர் கூறியதாக மான்யா பேசியது பேசு பொருளானது. இந்தநிலையில், தனது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளதாக மான்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், தனுஷின் மேலாளர் என ஒருவர் தன்னை அணுகியதாகவும், ஆனால், அது அவரா அல்லது தன்னை ஏமாற்ற வேறு யாரேனும் அவ்வாறு செய்தார்களா என தெரியவில்லை என மான்யா குறிப்பிட்டுள்ளார். தன்னைப் பற்றி தவறான தகவல்களை…