Author: Editor TN Talks

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி 20 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வரும் 21 முதல் 23ம் தேதி வரை 3 நாட்கள் ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்வதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநாட்டில் நடைபெற உள்ள 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளதாகவும், அந்த அமர்வில் காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். மேலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா தலைவர்கள்…

Read More

சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி கும்​பிடும் போது, மருத்துவ கல்​லூரி மாண​வி​யிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்ட அரசுத்துறை ஓட்​டுநர் கைது செய்​யப்​பட்​டார். பூந்​தமல்​லி, நசரத்​பேட்டை பகு​தி​யில் உள்ள தனி​யார் ஆயுர்​வேத கல்​லூரி​யில் 4-ம் ஆண்டு படித்து வரும் 21 வயது மருத்துவ மாணவி ஒரு​வர், கடந்த 16-ம் தேதி மயி​லாப்​பூரில் உள்ள கபாலீஸ்​வரர் கோயிலுக்கு வந்தார். அவரை 45 வயது மதிக்​கத்​தக்க ஆண் நபர் ஒரு​வர் பின் தொடர்ந்​தார். பின்​னர், அந்த பெண் சாமி தரிசனம் செய்து கொண்​டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த நபர் தவறான நோக்​கத்​தில் உரசி பாலியல் தொல்லை கொடுத்​தார். அதிர்ச்சி அடைந்த அந்த மாண​வி, சம்​பந்​தப்​பட்ட நபரை கண்​டித்​துள்​ளார். இதனால், கோபம் அடைந்த அந்த நபர் “இப்​படி​தான் செய்​வேன். உன்​னால் முடிந்​ததை செய்” என கூறிய​வாறு அங்​கிருந்து தப்​பிச் சென்​றார். வேதனை அடைந்த அந்த மாண​வி, இது தொடர்​பாக மயி​லாப்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார்…

Read More

வேளாண் துறையில் பாரதம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கோவை வந்தார். கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, இயற்கை விவசாயம் தனது இதயத்திற்கு நெருக்கமானது என்றார். விவசாயிகள் பேசியதை உணர முடிந்ததாகவும், ஆனால், புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.  தான் மேடை ஏறும் போது, விவசாயிகள் துண்டை சுழற்றியதை பார்க்கும் போது, பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என தனது மனம் எண்ணியதாக பிரதமர் மோடி தெரிவித்தார். கோவை மருதமலையில் குடிகொண்டிருக்கும் மருதமலை முருகனுக்கு தலைவணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். தென் மாநிலங்களின் தொழில்துறையின் சக்தி பீடமாக கோவை…

Read More

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது ஸ்பெயின் கால்பந்து அணி. இதன் 17-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறது அந்த அணி. நடப்பு யூரோ சாம்பியன், முன்னாள் உலக சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்த தொடரில் ஸ்பெயின் பங்கேற்கிறது. கடந்த 2010-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது ஸ்பெயின். அப்போது துடிப்பான வீரர்கள் அதிகம் நிறைந்த அணியாக ஸ்பெயின் விளங்கியது. இப்போது மீண்டும் கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு அணியை ஸ்பெயின் கட்டமைத்துள்ளது. அதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது 2024-ல் யூரோ சாம்பியன் பட்டமும், 2025 நேஷனல் லீக் தொடரில் இரண்டாம் இடம் பிடித்ததும். 2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெற்று வரு​கின்றன.…

Read More

தமிழில் ஜி.வி பிரகாஷ் உடன் பேச்சுலர் திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்த திவ்யபாரதி தற்பொழுது தெலுங்கு திரையுலகில் கோட் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் இயக்குனராக நரேஷ் குப்பிலி முதலில் நியமனம் செய்யப்பட்டார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நரேஷ் குப்பிலி இந்த திரைப்படத்திலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளார். திரைப்படத்தின் தயாரிப்பாளரே மீதமுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிப்பதாக முடிவு எடுத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தை இயக்க முதலில் ஒப்பந்தமான நரேஷ் குப்பிலி தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு சில பதிவுகளை பதிவு செய்து வருகிறார். அதில் படத்தின் கதாநாயகி திவ்யா பாரதியை கிண்டல் செய்யும் நோக்கில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கதாநாயகி திவ்யா பாரதியை சில்லாக்கா என்று குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு வட்டார வழக்கில் சில்லாக்கா என்பது பறவையை குறிக்கும் அது மட்டுமின்றி இரண்டாம் கட்ட கதாநாயகி செய்ய வேண்டிய வேலையை இந்தக் கிலியோட( சில்லாக்கா என்று…

Read More

மோடியால் தான் பாகிஸ்தான் பிரச்சினையே வந்தது என்றும், டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு குறித்து முன்பே எப்படி தெரியாமல் போனது என்றும் வைத்திலிங்கம் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் வைத்திலிங்கம் எம்பி பேசியதாவது: இன்றைக்கு நகர்ப்புற உச்சவரம்பு, நில உச்சவரம்பு ஆகியவற்றை எடுத்துவிட்டனர். வங்கிகளை தனியாரிடம் கொடுத்துவிட்டனர். இப்படி இந்திரா காந்தி செய்த எல்லாவற்றையும் தலைகீழாக பாஜக அரசு மாற்றிவிட்டது. நீதிமன்றம், தேர்தல் துறை என அனைத்து துறைகளிலும் பாஜக சொல்வது தான் நடக்கிறது. ஆனால் அன்றைக்கு இந்திரா காந்திக்கு எதிராக அலகாபாத் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை கொடுத்தது. இன்றைக்கு பிரதமர் மோடிக்கு எதிராக…

Read More

புதுச்சேரி அதிமுக மாநில செயலரின் சகோதரரான முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கட்சியிலிருந்து திடீரென்று இன்று விலகியுள்ளார். புதுவை மாநில அதிமுகவில் புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர். இவர் 2011, 2016-ம் ஆண்டுகளில் புதுவை முதலியார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார். இருப்பினும் அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திடீரென இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரின் அண்ணன் அன்பழகன் புதுவை மாநில அதிமுக செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

செங்கோட்டை முதல் காஷ்மீர் காடுகள் வரை இந்தியாவை தாக்கியுள்ளதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னாள் ‘பிரதமர்’ என அறியப்படும் பாகிஸ்தான் அரசியல் பிரமுகர் சவுத்ரி அன்வர் உல் ஹக் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்குகிறது பாகிஸ்தான். இந்தச் சூழலில் கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் அண்மையில் டெல்லி – செங்கோட்டையில் நடந்து கார் குண்டு வெடிப்பு தற்கொலை படை தாக்குதலை சுட்டிக்காட்டி சவுத்ரி அன்வர் உல் ஹக் பேசியுள்ளார். “பலூசிஸ்தானில் அமைதியற்ற சூழல் தொடர்ந்தால் இந்தியாவை செங்கோட்டை முதல் காஷ்மீர் காடுகள் வரை தாக்குவோம் என நான் முன்பே சொல்லி இருந்தேன். இறைவனின் அருளால் நாம் அதை செய்துள்ளோம். அவர்கள் இன்னும் உயிரிழந்தவர்களின் உடல்களை எண்ணிக் கொண்டுள்ளனர். ஆயுதத்துடன் டெல்லிக்குள் நுழைந்த நபர், இந்த தாக்குதலை நடத்தினார்” என சவுத்ரி அன்வர் உல் ஹக் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் பகுதியில் நிலவும்…

Read More

தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால் எங்கோ போய் எங்கோ முடிகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அந்த அப்பா அந்த சிறுவனிடம், ‘உனக்கு பிடித்த கரு கரு கருப்பாயி பாடல் இருக்கிறது அல்லவா? அதற்கு இவர்தான் மியூசிக்’ என்று என்னை காட்டுகிறார். உடனே அந்த சிறுவன் எனக்கு கைகொடுத்தான். இது போன்ற சின்ன பசங்களுக்கு கூட என் பாடல் தெரிகிறது என்பதற்காகத்தான் நான் காப்புரிமை கேட்பதில்லை” என்று தேவா கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் தேவா இசையில் வெளியான ‘கரு கரு கருப்பாயி’ பாடல் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த பாடல் யூடியூப், இன்ஸ்டா போன்ற சமூக…

Read More

நடிகர் தனுஷ் குறித்த தனது பேட்டி சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். தனுஷ் மற்றும் அவரது மேலாளர் ஷ்ரேயாஸ் குறித்து மான்யா ஆனந்த் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது. இது இணையத்தில் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக மான்யா ஆனந்த் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மான்யா ஆனந்த், “வணக்கம், இது சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள். அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன். மேலும், அந்த நபரிடமே, அவருடைய எண்ணை தனுஷ் சார் குழுவினருடன் பகிர்ந்து சரிபார்ப்பேன் என்றும்…

Read More