Author: Editor TN Talks
பீகார் தேர்தல் முடிவு அடுத்தடுத்து தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் காங்கிரசின் திட்டங்களையெல்லாம் சுக்குநூறாக்கி இருக்கிறது. காங்கிரசை மையப்படுத்தி அந்தந்த மாநிலங்களில் அரசியல் சூழலும், கூட்டணி திட்டங்களும் கூட மாறியிருக்கின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டிலும் மாறியிருக்கும் அரசியல் நிலவரங்கள் மாறியிருக்கின்றன. அது பற்றி பார்க்கலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது பிரிக்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்த நிலையில், “திமுகவை விட்டுவிட்டு காங்கிரஸ் தவெக பக்கம் தாவப்போகிதோ?” என்கின்ற எண்ணத்தை கொடுக்குமளவுக்கு மூத்த கதர் புள்ளிகளின் பேச்சுகளும் செயல்பாடுகளும் இருந்தன. இங்கிருக்கும் கே.எஸ்.அழகிரி முதல் மேலிடத்தில் இருக்கும் கிரிஷ் சோடங்கர் வரை ஒரு சாரார் காங்கிரசை பலப்படுத்த வேண்டுமென்ற வேலையில் திமுகவை டென்ஷானாக்கி வந்தனர். “சாறு அவங்களுக்கு சக்கை எங்களுக்கா?” என்ற கே.எஸ்.அழகிரியின் வசனம், “125 தொகுதிகளில் முக்கிய கவனத்தை செலுத்துங்கள்” என்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான கிரிஷ் சோடங்கரின் உத்தரவு மூலமான மறைமுக மெசேஜ், எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான திமுக…
தூத்துக்குடியில் மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம்டைந்தனர். கோவை பிஎன் புதூர் சாஸ்திரி 1-வது தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சாரூபன் (23), புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை பரிசுத்தம்மன் மகன் ராகுல் ஜெபஸ்டியான் (23), திருப்பத்தூர் மந்தவெளி குறும்பேறியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முகிலன் (23), தூத்துக்குடி தெர்மல் நகர் ரவிக்குமார் மகன் கிருத்திக்குமார் (23) மற்றும் சரண் (23) ஆகிய 5 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இன்று (நவ.19) அதிகாலை 3 மணியளவில் 5 பயிற்சி மருத்துவர்களும் காரில் புதிய துறைமுகம் கடற்கரைக்கு சென்றனர். காரை சாரூபன் ஒட்டி சென்றார். கார் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த மழை பெய்தால் சாலை சரியாக தெரியாததால் கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் நிற்கும் வேப்ப மரத்தில் வேகமாக மோதி…
திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினி அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற மனித மிருகத்தால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவி ஷாலினியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் தம்மை காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், அவரைக் காதலிக்க ஷாலினி மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த முனியராஜ், இன்று காலை மாணவி ஷாலினி பள்ளிக்கு செல்லும் வழியில் மறித்து கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார். பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல்…
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் துபாய் விமான கண்காட்சி கடந்த நவம்பர் 17 தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விமான கண்காட்சி 17 தொடங்கி வருகிற 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விமான கண்காட்சியில் உலக அளவில் இருந்து பல்வேறு முக்கிய முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தியா தரப்பில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட், டி.ஆர்.டி.ஓ, கோரல் டெக்னாலஜீஸ், டேண்டல் ஹைட்ராலிக்ஸ், இமேஜ் சினர்ஜி எக்ஸ்புளோரர், எஸ்.எப்.ஓ டெக்னாலஜீஸ் ஆகிய முக்கிய நிறுவனங்கள் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. நடைபெற்றுக் கொண்டிருக்கும் விமான கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் ரஷ்யாவை சேர்ந்த போர் விமானமான SU-57E ஈர்த்துள்ளது. தற்பொழுது அந்த SU-57E போர் விமானத்தை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்க முன் வந்துள்ளது. ஆம், வருகிற டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புது டெல்லிக்கு வர இருக்கிறார். விளாடிமிர் புதினின்…
குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது அவர்கள் உண்ணும் உணவில் தான் உள்ளது. அவர்கள் தினமும் எடுத்துக் கொள்ளும் சில பொதுவான உணவுகள் கூட அவர்களின் வளர்ச்சிக்கும் நீண்ட கால ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கலாம் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. அந்த வகையில், உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கவே கூடாத 5 அன்றாட உணவுகள் மற்றும் அதனை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களையும் தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நிறைந்த பானங்கள்: சோடா, கடைகளில் கிடைக்கும் பழச்சாறுகள், சுவை சேர்க்கப்பட்ட பால் போன்றவற்றில் அதிக அளவு சேர்க்கப்பட்ட சர்க்கரை உள்ளது. இவை எந்த ஊட்டச்சத்து மதிப்பையும் கொடுக்காமல் வெறும் காலரிகளை அதிகரிக்கின்றன. அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் குழந்தைகளின் பற்களை சேதப்படுத்துவதுடன், உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் (Type 2 Diabetes) மற்றும் எதிர்காலத்தில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இது ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தி,…
பொதுவாக, நீண்ட நேரம் கால்களைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருப்பது, நீண்ட பயணம் அல்லது முதுமை போன்ற காரணங்களால் ஈர்ப்பு விசையின் விளைவாகக் கீழ் முனைகளில் திரவம் தேங்கி கணுக்காலில் வீக்கம் ஏற்படுவதைக் காணலாம். இருப்பினும், சில சமயங்களில், இந்த எளிய கணுக்கால் வீக்கமானது அதாவது கணுக்கால் எடிமா (Ankle Edema) இதய செயலிழப்பு, ரத்தக் கட்டிகள், கல்லீரல் கோளாறுகள் போன்ற பல கடுமையான அடிப்படை உடல்நலப் பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியான திரவம் திசுக்களில் குவியும்போது வீக்கம் ஏற்படுகிறது. இது பொதுவாக ஈர்ப்பு விசை அல்லது ரத்த ஓட்டம் குறைவதால் கீழ் கால்களில் ஏற்படுகிறது. கணுக்கால் வீக்கம் ஏற்படுவதற்கு நீர் கோர்ப்பது தான் காரணம் என நினைத்து அலட்சியமாக இருக்காமல், அதற்கு பின்னால் உள்ள காரணத்தை தெரிந்து கொள்வதும் அவசியம். எனவே, வழக்கத்தை விட வீக்கம் அதிகமாக இருந்தாலோ அல்லது பிற அறிகுறிகளுடன் சேர்ந்திருந்தாலோ, காரணத்தைக்…
இந்திய பிக்கிள்பால் சங்கத்தின் ஆதரவுடன் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள் விளையாட்டு அரங்கில் வரும் டிசம்பர் 1 முதல் 7 வரை இந்தியன் பிக்கிள்பால் லீக் (ஐபிபிஎல்) போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் அணிகளின் அறிமுக நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், குர்கான் ஆகிய நகரங்களை மையமாக கொண்ட மும்பை ஸ்மாஷர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், சென்னை சூப்பர் வாரியர்ஸ், ஹைதராபாத் ராயல்ஸ், குர்கான் கேப்பிடல் வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியன் பிக்கிள்பால் லீக்கில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. மீதம் உள்ள ஒரு அணி பின்னர் அறிவிக்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னையில் இன்று (நவ.19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 என உயர்ந்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 என உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு என சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் தங்கம் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,500-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.92,000-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,00,368…
இந்தியா – வங்கதேசம் மகளிர் அணிகள் இடையே நடைபெற இருந்த ஒருநாள் போட்டி மற்றும் டி 20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொல்கத்தா, கட்டாக்கில் போட்டிகளை நடத்த ஏற்பாடு நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. டிசம்பரில் மாற்றுத் தொடரை நடத்த முயற்சித்து வருகிறோம் எனவும் வங்கதேச தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாது எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “தொடர் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பிசிசிஐ-யிடமிருந்து எங்களுக்கு கடிதம் வந்துள்ளது. புதிய தேதிக்காக காத்திருக்கிறோம்” என்றனர். கடந்த ஆகஸ்ட்டில் இந்திய ஆடவர் அணி, வங்கதேசம் சென்று விளையாட இருந்த தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. கடைசி போட்டியின் 21-வது ஓவரில் பாகிஸ்தான் அணியின் சீனியர் பேட்ஸ்மேனான பாபர் அஸம் ஆட்டமிழந்தார். அப்போது விரக்தியில் அவர், மட்டையால் ஸ்டெம்புகளை தாக்கிவிட்டு சென்றார். ஐசிசி விதிமுறைகளின் படி இது குற்றமாகும். இது தொடர்பாக களநடுவர்கள் அளித்த புகாரின் பேரில் பாபர் அஸமுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 10 சதவீதத்தை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. மேலும் பாபர் அஸமுக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.