Author: Editor TN Talks
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் இலக்கைக்கூட எட்ட முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்ட ஆடுகளத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக திணறினார்கள். இதனால் இந்திய அணியின் ஆட்ட அணுகுமுறையும், கவுதம் கம்பீரின் பயிற்சி திட்டங்களும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. போட்டியை 3 நாட்களில் முடிக்கும் வகையில் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி குவாஹாட்டியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள்…
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 21 ஆம் தேதி ஊர் காவல் தெய்வமான துர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து 24 ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலில் சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றம் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகம் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், ”அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 24 இடங்களில்…
மாதவிடாய் என்றாலே பெண்களுக்கு ஏற்படும் பெரும் சவால்களில் முதன்மையானது கடுமையான வயிற்று வலி மற்றும் இடுப்பு வலி. இது பொதுவானது என்றாலும், மாதவிடாய் நாட்களில் அல்லது அதற்கு ஒரு வாரத்திற்கு முன் முதல் கால்களில் ஏற்படும் ஒருவித கனமான, குத்துவது போன்ற வலி பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. வயிற்றில் ஏற்படும் வலியை புரிந்து கொண்டாலும், கால்களில் வலி ஏற்படுதற்கான காரணம் என்ன என்பது பெரும்பாலான பெண்களின் எழும் கேள்வியாகும். இந்த வலி வெறும் சோர்வு அல்லது மோசமான உடல் நிலை காரணமாக வருவதில்லை. உண்மையில், ஹார்மோன் மாற்றங்கள், ரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆழமான உயிரியல் செயல்முறையே இந்த மாதவிடாய் நாட்களின் கால் வலிக்குக் காரணம். இந்த வலி எதனால் ஏற்படுகிறது, இதற்கு எப்படி நிவாரணம் பெறுவது மற்றும் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் கால்களில் ஏற்படும் வலிக்கு…
‘சுவரொட்டி’ என்ற வார்த்தையை கேட்டால், பலருக்கும் சுவரில் ஒட்டப்படும் விளம்பரத் தாள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இது ஆட்டு மண்ணீரலை குறிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. பச்சையாக இருக்கும்போது சுவரில் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பதாலேயே இதற்கு இந்த பெயர் வந்திருக்கலாம். இது மனித உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் உணவாக இருக்கிறது. குறிப்பாக, ரத்த சோகை (Anemia) என்னும் இரும்புச்சத்து குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கும், தங்கள் உடலில் ரத்தம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் அதிகரிக்கும் கர்ப்பிணிகளுக்கும் சுவரொட்டி ஒரு வரப்பிரசாதமாகும். நமது ஊர்களில் சுவரொட்டிக்கு மவுசு அதிகம். மட்டன் கடைகளில் ஃப்ரீ ஆர்டர் செய்தால் தான் இதனை சாப்பிட முடியும் என்ற அளவிற்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. “உடலில் ரத்தத்தை கடகடவென உயர்த்தும் தன்மை கொண்டது” என்று மருத்துவர்களே பரிந்துரைக்கும் அளவிற்கு மக்கத்துவம் கொண்டது என்பது தான் இதன் மவுசுக்கு காரணம். சுவரொட்டி, ஆட்டின் ஒரு சிறிய…
வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால் குமரிக்கடல் பகுதியில் நிலவியது. அடுத்த 24 மணி நேரத்தில், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில், மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 22ம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…
கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆண்டு சென்சஸ் முடிவில் கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரண்டு பெரு நகரங்களில் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளதாக கூறி மெட்ரோ ரயில் சேவையை இந்த இரண்டு பெரு நகரங்களுக்கு தர இயலாது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்து வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை எக்ஸ் வலதளத்தில் கூறியுள்ளார். அவர் பதிவுத்துள்ள பதிவில் “அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல.…
தேவயானிக்கு பதில் விஜயலட்சுமி வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் நல்ல ப்ரோமோஷனாக இருந்து இருக்கும் என, விஜயின் ‘ப்ரண்ட்ஸ்’ படம் ரீ ரிலீஸ் விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார். சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஸ் திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் நவம்பர் 21 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக உள்ள நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் அரங்கில் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்த திரைப்படத்தை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் வெளியிடக் கூடிய விநியோகஸ்தர்கள், படத்தில் பணியாற்றிய ரமேஷ் கண்ணா மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் ரமேஷ் கண்ணா பேசியதாவது: ஒரு திரைப்படம் மீண்டும் ரிலீசாவதற்கு இவ்வளவு…
லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2023 முதல் நடைபெற்ற இஸ்ரேல், காசா போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காசாவுடனான போர் தொடங்கியதில் இருந்தே தனது வடக்கு எல்லையான யாரோன் பகுதியை இஸ்ரேல் பலப்படுத்தி வருகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள லெபனான் அதிபர் ஜோசப் அவுன், தங்களின் எல்லையைத் தாண்டி இஸ்ரேல் வருவதாகவும், அந்தப் பகுதியில் சுவர் எழுப்பும் பணிகளை இஸ்ரேல் மேற்கொள்வதாகவும் அவுன் குற்றம்சாட்டி உள்ளார். லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து ஆயுதங்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் குறைக்க வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்து இருந்தது. இந்தநிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது…
சாலையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் பொதுமக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை (நவ.18) தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துணை கமிஷனர் கௌதம், உதவி ஆணையர் பிரதீப் குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அந்த பகுதியில் குப்பை சேகரிக்கும் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. சாலையில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கடைகள்,…
மோடி பீகாரில் ரூ.10 ஆயிரம் தந்தது போல் இங்கு 15 ஆயிரம் ரூபாய் தரவும் வாய்ப்பு உள்ளது என்பதால் தாய்மார்கள் தயாராக இருக்க சீமான் அறிவுறுத்தி உள்ளார். ‘செக்கிழுத்த செம்மல்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் 89 ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: இப்படி பணநாயக கொள்ளை கூட்டத்திடம் எங்கள் பிள்ளைகளை விட்டுச் செல்லவா? முன்னோர்கள் போராடிச் செத்தார்கள். எங்களுக்கு இருக்கக் கூடிய கடைசி உரிமை வாக்கு தான். அதையும் பறிக்கிறார்கள். அதைப் போராடிப் பெற வேண்டிய நிலைமைக்கு எங்களைத் தள்ளியுள்ளது நாடு. பகத்சிங் முன் வைத்த முழக்கம் விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டுகளாகியும் அப்படியே உள்ளது. வருவாய் துறையில் பணியாற்றுபவர்கள் கல்வி அறிவு…