Author: Editor TN Talks
கொடைக்கானலில் நல்ல பனிமூட்டம் நிலவி வருவதால், இரண்டு நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், திரைப்பட நடிகருமான கமல்ஹாசன் அங்கு சென்றுள்ளார். ‘மலைகளின் இளவரசி’ என்று செல்லமாக அழைக்கப்படும் கொடைக்கானலில், தற்போது கடும் குளிரும், பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால், தன் வசம் வசீகரித்து இழுக்கும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இந்த நேரத்தில் கொடைக்கானலுக்கு வருகை தருவது வழக்கம். அதன்படி, பல நாடுகளுக்கு ஓய்வுக்காக சுற்றுலா செல்லும் நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், கொடைக்கானல் அழகை ரசிக்க இரண்டு நாட்கள் அங்கு சென்றிருக்கிறார். தனது சொந்தத் தோட்டத்தில் நேற்று பகல் முழுவதும் ஓய்வெடுத்த அவர், இன்று காலையில் இருந்து கொடைக்கானலின் அழகிய கிராமப்புறச் சாலைகளில் கார் மூலம் உலா வந்தார். குறிப்பாக, வில்பட்டி சாலைப் பகுதி, பிரபலமாகி வரும் பெப்பர் அருவி செல்லும் வழித்தடம்…
ஹாலிவுட் என்ற வார்த்தையை நினைவு கூறும் பொழுது அதிலும் குறிப்பாக சண்டை காட்சிகள் என்று வந்துவிட்டால் டாம் குரூஸின் பெயர் நிச்சயம் அனைவரது எண்ணத்திலும் வந்து நிற்கும். பார்க்கும் பார்வையாளர்கள் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சண்டைக் காட்சி உண்மையில் தத்ரூப வடிவமா அல்லது ஏதேனும் கிராபிக்ஸ் வடிவமா என்று யோசிக்கும் அளவிற்கு எந்தவித டூப்பும் இல்லாமல் தன் உயிரை பணயம் வைத்து சண்டைக் காட்சிகளில் வித்தை காட்டும் கெட்டிக்காரர். பொதுவாக நடிகர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஆஸ்கார் விருது வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 63 வயதான டாம் குரூஸின் பெயர் இதுவரை நான்கு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பார்ன் ஆன் தி போர்த் ஆப் ஜூலை மற்றும் ஜெரி மகுயர் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்காகவும், மேக்னோலியா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்காவும், டாப் கன்:மாவெரிக் திரைப்படத்திற்காக சிறந்த தயாரிப்பாளருக்காகவும் இவரது பெயர்…
பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் உகந்ததாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. அதனைத்தொடர்ந்து தமிழக அரசு கடந்த 6ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில், எழுத்துப்பூர்வமாக கருத்துகளை வழங்குமாறு அரசின் சார்பில் கட்சிகளிடம் கோரப்பட்டது. அதன் அடிப்படையில், தலைமைச் செயலாளரை சந்தித்து எழுத்துப்பூர்வமாக கடிதத்தை வழங்கினோம்” என்றார். தொடர்ந்து, “பொதுக்கூட்டம், பரப்புரைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை தமிழக அரசு ஏற்கக்கூடாது. அந்த உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனு அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டியதுதான்…
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளால் (SIR) பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. ஆனால், தகுதியுள்ள நபர்களின் வாக்குகள் நீக்கப்படக்கூடாது என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டத்துறை செயலாளரும், மாநிலங்களை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தல் ஆணையம் முறையான தயாரிப்பு வேலைகளுடன் SIR-ஐ அணுகியுள்ளார்களா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “ஒருநாள் நடைபெறும் தேர்தலுக்கு பல்வேறு விதிகளை கடைபிடிக்கும் தேர்தல் ஆணையம், ஒரு மாதம் நடத்தும் SIR பணிகளை எந்த காலத்தில் நடத்த வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். முழுக்க முழுக்க BLO-க்களை (வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள்) நம்பி மேற்கொள்ளப்படும் இந்தப் பணியில், அவர்களுக்கு ஒருநாள் மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் அழுத்ததால் BLO-க்கள் சிரமப்படுகின்றனர்,” என பதில் அளித்தார். BLO-க்கள் அனைவரும்…
மார்வெல் சினிமேடிக் யுனிவர்ஸ் வரிசையில் 2018 ஆம் ஆண்டு பிளாக் பேந்தர் திரைப்படம் வெளியானது. சாட்விக் போஸ்மேன் நடிப்பில் வெளியான திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி சுமார் ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூல் சாதனை செய்தது. பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்த கதையின் நாயகன் சாட்விக் அதன் பின்னர் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் இயற்கை எய்தியது நம் அனைவரும் அறிந்த செய்தி. பிளாக் பேந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தின் தங்கை சூரி கதாபாத்திரத்தில் நடித்த லெட்டிட்டா ரைட் இரண்டாம் பாகத்தின் கதையின் நாயகனாக நடித்தார். வகாண்டா ஃபார்எவர் என்கிற தலைப்பில் அத்திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படமும் முதல் பாகத்தைப் போன்று நல்ல வரவேற்பையும் சுமார் 800 மில்லியன் டாலருக்கு மேல்…
1991 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் மீடியம் சைஸ் எஸ்யூவி கார் மாடலான சியராவை வெளியிட்டது. இந்த கார் அப்பொழுது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 12 வருடங்களாக டாடா நிறுவனம் உற்பத்தி செய்து வந்த இந்த மாடல் காரை 2003 ஆம் ஆண்டு நிறுத்தி வைத்தது. தற்பொழுது 22 வருடங்கள் கழித்து மீண்டும் டாடா நிறுவனம் சியரா எஸ் யூ வி மாடல் காரை புது பொலி உடனும், புது அம்சங்களுடனும் வருகிற நவம்பர் 25ஆம் தேதி வெளியிட உள்ளது. டாட்டா வெளியிட இருக்கும் புது சியரா எஸ் யூ வி கார் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்சின் என இரண்டு மாடல்களில் வெளியாக போகிறது. காரின் விலை சுமார் 12 முதல் 18 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியரா காரின் சிறப்பம்சங்கள் குறித்து சிலவற்றை காண்போம். முதன்முறையாக, சியரா கார் டேஷ்போர்டு…
கடந்த வார சனிக்கிழமை ( நவம்பர் 15 ) எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவர இயக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு வெளியானது. எஸ் எஸ் ராஜமவுலி என்றாலே பிரம்மாண்டம் தான். இந்த முறை அவரது அடுத்த திரைப்படத்தின் தலைப்பை வெளியிடுவதிலேயே நமக்கு பிரம்மாண்டத்தை காண்பித்து விட்டார். 130 அடி உயர எல் இ டி ஸ்கிரீன்களை செட் செய்து ராமோஜி ஃபிலிம் சிட்டியில் சுமார் 27 கோடி ரூபாய் செலவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.மகேஷ் பாபு பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்திவிராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இவ்விழாவில் இம்மூவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பிரித்திவிராஜ் சுகுமாரன் கும்பா என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். மந்தாகினி என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயினாகவும் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். படத்தின் தலைப்பு “வாரணாசி”.சுமார் 3 நிமிடம் 41 நொடி…
சொந்த மண்ணில் சிறந்த ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர் புரிந்து கொள்வார் என நம்பவுதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. 124 ரன்கள் என்ற குறைந்த இலக்கை அடைய முடியாமல், 30 ரன்கள் வித்தியாசத்தில் 3வது நாளிலேயே இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், ஆடுகளம் குறித்தும் இந்திய அணியின் வீரர்கள் குறித்தும் அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார். சொந்த மண்ணில் விளையாடும் போது, சிறந்த ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என கங்குலி தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜ், ஷமி உள்ளிட்டோர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் டெஸ்ட்…
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு செயல் அலுவலர்கள் நியமித்து பிறப்பித்த உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 45,809 கோயில்களை 668 செயல் அலுவலர்கள் நிர்வகித்து வருவதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அளித்த பதிலில், 3,250 செயல் அலுவலர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நியமிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர்களின் நியமன உத்தரவுகளை இணையதளங்களின் பதிவேற்றம் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்த போது, கடந்த 2022ம் ஆண்டு இதே கோரிக்கையுடன்…
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை இறக்குமதியை இந்தியா நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த இந்தியா, ஏற்றுமதிக்கான திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்தது. இதையடுத்து, இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, வர்த்தக ஒப்பந்த தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில், ரஷ்யாவுடனான இந்தியாவின் தொடர்புகளால் வர்த்தக பேச்சுவார்த்தையில் சில தடைகளை சந்தித்ததாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்துள்ளார். தாங்கள் நல்ல நண்பர்கள் என்றும் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை…