Author: Editor TN Talks
சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சொகுசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்தநிலையில், அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மதீனா அருகே டீசல் டேங்கர் லாரி மீது புனிதப் பயணம் சென்றவர்கள் சொகுசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால், பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தநிலையில், விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 20 பெண்கள், 11 குழந்தைகள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது. விபத்தில் சிக்கியவர்கள் குறித்து தகவல்களை சேகரிக்க தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்…
வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், 15ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று…
மண்டல கால- மகர விளக்கு பூஜைகளுக்காக பக்தர்களின் சரண கோஷங்கள் முழங்க சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் துவங்கும் மண்டல கால, மகர விளக்கு பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி, 18 படி ஏறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வழிபடுவர். இந்தநிலையில், இந்தாண்டு கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி சபரிமலையில் இன்று முதல் மண்டல கால, மகர விளக்கு பூஜை துவங்கி உள்ளது. இதையொட்டி 16ம் தேதி மாலை 5 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி சபரிமலை கோயில் நடை திறந்தார். அப்போது, ‘சுவாமியே சரணம் ஐயப்பா…’ என பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி, மனமுருகி ஐயப்பனை பிரார்த்தித்தனர். இரவு, 11:00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டநிலையில், இன்று (17.11.2025) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி…
‘விஜய்க்கும் ராகுலுக்கும் இடையே தற்போது கூட்டணி ரீதியாக நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என கசிந்துள்ள தகவல் தான் அறிவாலயத்தினரையும் சத்தியமூர்த்திபவனில் ஒரு பிரிவினரையும் அப்செட் ஆக்கியிருக்கிறது. அந்த அத்தகவலின் முழு பின்னணி என்ன என்பதை பார்க்கலாம். சமீப நாட்களாகவே திமுக மீதான அதிருப்தியை கே.எஸ்.அழகிரி, கிரீஷ் சோடங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே கட்சிக்கூட்டத்திலும் பொது வெளியிலும் பேசி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதன் காரணம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் படிப்படியாக தேய்ந்து வருவதே. வெற்றிக்காக ‘கதரை’ பயன்படுத்திக்கொள்ளும் ‘கருப்பு சிவப்பு’, அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் ‘கம்பி நீட்டி விடுவது’ வழக்கமாகி விட்டது. “திமுக மட்டும் கடந்த காலத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு பெறுவார்களாம்; ஆனால் மாநிலத்தில் காங்கிரசுக்கு பங்கு தரமாட்டார்களாம்!” என பாயிண்ட்டாக பேசும் கதர்ப்புள்ளிகள், இந்த முறை இருக்கும் அரசியல் சூழலை பயன்படுத்தி அதிகாரத்தில் பங்கு பெற்றுவிட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அறிவாலயத்திலோ…
‘மக்களைக் காப்போம்; தமிழகம் மீட்போம்” எனும் பெயரில் இதுவரை சுற்றுப்பயணம் மேற்கொண்ட தொகுதிகளில் ஒரு விரிவான சர்வே எடுக்கச்சொல்லியிருக்கிறாராம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியாரின் திடீர் உத்தரவின் பின்னணியை இங்கு பார்க்கலாம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுமைக்குமான தேர்தல் பிரச்சாரத்தை ‘மக்களைக் காப்போம்; தமிழகம் மீட்போம்’ எனும் பெயரில் துவக்கி தற்போது வரை 173 தொகுதிகளில் முடித்துள்ளார். இந்த தொகுதிகளில் மக்கள் சந்திப்பு, விவசாயிகள் சந்திப்பு, நெசவாளர்கள் உடனான சந்திப்பு, மீனவர்களுடன் சந்திப்பு என பல்வேறு வகையான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இத்தகைய சந்திப்புகளும், மழையில் நெல்மணிகளை பறிகொடுத்த விவசாயிகளை களத்தில் இறங்கி சந்தித்து ஆறுதல் அளித்தது உள்ளிட்ட செயல்பாடுகளால் அவர்களது ஆதரவை பெற்று வருகிறார். மேலும், இதுவரை மேற்கொண்ட பிரச்சாரத்தில் வாக்குறுதிகளாக அவர் அறிவித்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,500, பொங்கலுக்கு மீண்டும் ரூ.2,500, தீபாவளிக்கு பெண்களுக்கு பட்டுச்சேலை உள்ளிட்ட சில…
“கூட்டணி அமைப்பதற்கு முன் பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என லேசாக கொதிக்கும் எடப்பாடி பழனிசாமி தற்போது பாஜகவுக்கு சொன்னதை செய்யச்சொல்லி அழுத்தம் கொடுக்கிறாராம். அது என்ன வாக்குறுதி? என்ன அழுத்தம்? பார்க்கலாம். 2026 அதிமுகவுக்கு ஒருவகையில் வாழ்வா? சாவா? என்பதான தேர்தல் தான் என அரசியல் வட்டார பேச்சுக்கள் பரபரக்க, தன்னுடையதா தலைமையிலான அதிமுக ஒரு மிகப்பெரும் வெற்றியாக இந்த 2026 தேர்தலை வென்றே ஆக வேண்டும் என முழு முனைப்போடு அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பம்பரமாய் சுழன்று வருகிறார். அந்த வகையில், பாஜவுடனான கூட்டணி அதிமுகவுக்கு பெரும் சாதகமாக இருக்க வேண்டும் என கணக்கு போட்ட எடப்பாடியார், டெல்லி நகர்வுகள் மூலம் தமிழ்நாட்டில் திமுகவை சரிகட்ட வேண்டும் என்பதற்காக பாஜகவுக்கு சில அசைன்மெண்ட்டுகளை கோரிக்கைகளாக வலுயுறுத்தியே கூட்டணியை முடிவு செய்தார். ஆனால், அவர் கேட்டுக்கொண்டதை பாஜக இன்று வரை சொன்னபடி செய்து கொடுக்கவில்லை என அப்செட்டில்…
டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்துள்ள கார் வெடிவிபத்து தலைநகரையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. தலைநகர் புது டெல்லியிலுள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில்நிலைய வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் இருந்த மர்மப்பொருள் வெடித்து சிதறியது. திங்கட்கிழமையான இன்று சரியாக இரவு 6.55 மணிக்கு இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அருகிலுள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களில் தற்போதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெடிவிபத்து சம்பவத்தின் போது அடுத்தடுத்து மூன்று முறை வெடி சத்தங்கள் கேட்டதாக அப்பகுதியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். வெடி விபத்தால் தீப்பிடித்து எரிந்த வாகனங்களின் தீயினை தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு அணைத்துள்ளனர். அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விரைந்துள்ள நிலையில், வெடிவிபத்து…
ஏதென்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஏதென்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜோகோவிச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டியை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். அவர் வெல்லும் 101-வது பட்டமாகும் இது.
இந்திய ஏ அணி வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் அணியின் கேப்டனுமான ரஜத் பட்டிதார் காயம் அடைந்துள்ளார். நடுவரி வரிசை ஆட்டக்காரன ரஜத் பட்டிதார், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இந்தியா ‘ஏ’- தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணியில் ரஜத் பட்டிதார் இடம் பிடித்திருந்தார். முதல் போட்டியில் விளையாடும்போது, ரஜத் பட்டிதாருக்கு காயம் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு காயம் குணமாக சுமார் 4 மாதங்களாகும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் எஞ்சிய ரஞ்சி போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடர் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக ரஜத் பட்டிதார் தயாராகி விடுவார்…
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி நெல்சன் பகுதியிலுள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணியின் டெவன் கான்வே 56, டிம் ராபின்சன் 23, ரச்சின் ரவீந்திரா 26, டேரில் மிட்செல் 41, மைக்கேல் பிரேஸ்வெல் 11 ரன்கள் எடுத்தனர். 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 19.5 ஓவர்களில் 168 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அமிர் ஜாங்கு 5, அலிக் அத்தனாஸ் 31, ஷாய் ஹோப் 1, அகீம் ஆகஸ்ட் 24, ஷெர்பான் ருதர்போர்ட் 2, ரோமன் பாவெல் 2, ஜேசன் ஹோல்டர் 3, ரொமாரியோ ஷெப்பர்ட் 49, மேத்யூ போர்ட் 4…