Author: Editor TN Talks

தங்கம் விலை கடந்த மாதம் அக்டோபர் 17-ஆம் தேதி புதிய உச்சத்தைத் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், வாரத் தொடக்கமான இன்று தங்கம் விலை உயர்ந்து, சவரன் ரூ.91 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது. கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.3,680 குறைந்தும், அதன் தொடர்ச்சியாக 28-ஆம் தேதி சவரனுக்கு ரூ.2,200 குறைந்தும் ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. இதற்குப் பிறகு, கடந்த 6-ஆம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை உயர்வைச் சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்தது. பிற்பகலிலும் இதேபோல் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,320-க்கும், ஒரு சவரன் ரூ.90,560-க்கும் விற்பனை ஆனது. இதனைத் தொடர்ந்து, 7-ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,270-க்கும்,…

Read More

திருச்சியில் இளைஞர் ஒருவர் காவலர் குடியிருப்புக்குள் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் தங்கியுள்ள சூழலில் இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது. திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கண்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இந்நிலையில் இன்று காலை சுமார் 8.20 மணி அளவில் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக வந்து அவரை ஐந்து பேர் கும்பல் அரிவாளுடன் வெட்ட துரத்தியது. அப்போது அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயன்றார். அவரை துரத்திச் சென்ற கும்பல் பீமா நகர் காவலர் குடியிருப்பு வாசலில் அவரை மறித்து வெட்டியது. வெட்டுப்பட்ட தாமரைச் செல்வன் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு காவலர் குடியிருப்புக்குள் உள்ளே ஓடினார். ஏ பிளாக்கில்…

Read More

“21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுகிறது. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள். தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என திமுகவினர் இதனை எதிர்க்கிறார்கள். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எஸ்ஐஆரை ஆதரிக்கிறோம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கோவையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள், மாணவிகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு பயமே இல்லை. இப்போது அரசாங்கம் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஒரு மாணவனும், மாணவியும் பேசிக்கொண்டிருந்தபோது, மாணவனை அனுப்பிவிட்டு, மாணவியை காவல்துறையினரே…

Read More

கோவில்பட்டி தொகுதியில், தற்போதைய எம்எல்ஏவும், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ, கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது: தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு புகார் சென்றதால், எஸ்ஐஆர் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இது ஒன்றும் புதிது அல்ல. இதற்காக ஏன் திமுக வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும். சீர்திருத்தம் என்பது குறை நிறைகளை சரி செய்யத்தான். மடியில் கனம் இருப்பதால் வழியில் பயம் என்பதை போல் அந்த நிலை தான் திமுகவுக்கு. இவர்கள் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் எஸ்ஐஆர் பணியை நிறுத்த முடியாது. தேர்தல் ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு கட்டுப்பட்டது கிடையாது. கோவில்பட்டி தொகுதியை பொருத்த வரை கடந்த 9 மாதத்துக்கு முன்பிருந்தே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தொடங்கி விட்டோம். இதில், 70 சதவீதம் பேர் இந்த தொகுதியைச்…

Read More

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்டவை ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில் அதன் ஒரு பகுதியாக திமுக செய்து வரும் “உடன்பிறப்பே வா” நிகழ்வும், அதன் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்து வந்த உள்கட்சி பூசல் நிகழ்வுகள் ஒவ்வொன்றாக வெளிவருவதும், அப்பிரச்சனைகளுக்கு தலைமை சமாதானம் பேசி முடித்து வைக்கும் வேலைகளும் தகவல்களாக வெளிவருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வழியில், முதல்வரும் திமுக தலைமையுமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தொகுதி வாரியாக பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து வருகிறார். நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வான “உடன்பிறப்பே வா” நிகழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் முன்வைக்கப்படும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் பெரும்பாலானவற்றுக்கு உடனடியாக அமைச்சர்களிடம் பேசி அதை செய்து கொடுக்குமாறு உடனடியாக உத்தரவு பிறப்பித்து வருகிறார் முதல்வர். அந்த வகையில் ஒரு எடுத்துக்காட்டாக, “ராஜபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை திறக்கப்படவில்லை” என்ற கோரிக்கையைத் தீர்க்க மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை…

Read More

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அக்கட்சி அதிருப்தியில் இருப்பதாகவும், இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் அக்கட்சி சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சி உள்ளது. இக்கட்சி தலைமையிலான கூட்டணி ஜார்க்கண்ட்டில் ஆட்சியில் உள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரண் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். பழங்குடி மக்களின் கட்சியாகக் கருதப்படும் ஜேஎம்எம்-க்கு பிஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் கனிசமான வாக்கு வங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இரண்டு எஸ்டி தனித் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஜேஎம்எம், ஆறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. அதன் பிறகும் இண்டியா கூட்டணி…

Read More

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ‘திமுக -75 அறிவுத் திருவிழா’ நிகழ்ச்சியில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “நான் இன்றைக்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கலாம். ஆனால் 1971-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு ஒரு நாள் கருணாநிதியும், நானும் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது அவர், “துரை, இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறாயா?” என்று கேட்டார். “நான் வக்கீலாக இருக்கிறேன். அதுதான் எனக்கு பிடிக்குது” என்று அவரிடம் சொன்னேன். “வேண்டாமா உனக்கு” என்று சொல்லிவிட்டு கருணாநிதி சென்றுவிட்டார். பின் சாப்பிட்டுவிட்டு கைகழுவ சென்றேன். அப்போது தயாளு அம்மாள் என்னிடம், “ஏன் சீட்டு வேண்டாம் என்று கூறினாய்?” எனக் கேட்டார். அவரிடம், “செலவு பண்ண முடியாது” என்றேன். “அதெல்லாம் அவர் கொடுப்பார், நீ நில்” என்று சொல்லிவிட்டு ரூ.10 ஆயிரத்தை எடுத்து என்னிடம் தந்தார். நான் எம்எல்ஏவாக, அமைச்சராக, திமுகவின் பொதுச்செயலாளாரக இருக்கிறேன் என்றால், அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தயாளு அம்மாள்…

Read More

இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​தியா ‘ஏ’ அணி 255 ரன்​களும், தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்​களும் எடுத்​தன. 34 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 24 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 78 ரன்​கள் எடுத்​தது. அபிமன்யு ஈஸ்​வரன் 0, தேவ்​தத் படிக்​கல் 24, சாய் சுதர்​சன் 23 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். கே.எல்​.​ராகுல் 26 ரன் களு​ட​னும், குல்​தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்​காமலும் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 89.2 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 382 ரன்ள் குவித்த நிலை​யில் டிக்​ளேர் செய்​தது. கே.எல்​.​ராகுல் 27, குல்​தீப் யாதவ்…

Read More

31-வது சுல்​தான் அஸ்​லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​பர் 23 முதல் 30 வரை மலேசி​யா​வின் இபோ நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான இந்​திய ஹாக்கி அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் பெரும்​பாலான சீனியர் வீரர்​களுக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங், அனுபவம் வாய்ந்த நடுகள வீர​ரான மன்​பிரீத் சிங், ஸ்டிரைக்​கர் மன்​தீப் சிங், கோல் கீப்​பர்​களான கிருஷ்ணன் பகதூர் பதக், சுராஜ் கார்​கீரா ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் டிபன்​ட​ரான சஞ்​சய் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருடன் அனுபவம் வாய்ந்த் ஜுக்​ராஜ் சிங், அமித் ரோஹி​தாஸ் இடம் பெற்​றுள்​ளனர். தமிழகத்தை சேர்ந்த முன்கள வீர​ரான செல்​வம் கார்த்​திக்​கும் இடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நவம்​பர் 23-ல் கொரி​யா​வுடன் மோதுகிறது. அணி விவரம்: பவன், மோஹித் ஹொன்​னஹள்ளி சசிகு​மார் (கோல்​கீப்​பர்​கள்), சந்​துரா பாபி, நீலம் சஞ்​சீப், யஷ்தீப் சிவாச், சஞ்​சய், ஜுக்​ராஜ் சிங், அமித் ரோஹி​தாஸ் (டிபன்​டர்​கள்),…

Read More

பிரபல இந்தி நடிகை மவுனி ராய். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். ‘நாகினி’ தொடரில் நாகினியாக நடித்து புகழ்பெற்றார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமாவில் தனது ஆரம்பக் காலகட்டத்தில் மோசமான அனுபவத்தைச் சந்தித்தேன்’ என்று தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “எனக்கு அப்போது 21 வயது. ஒரு படத்துக்கான கதையைக் கேட்பதற்கு ஒருவர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு சிலர் அமர்ந்திருந்தனர். அப்போது ஒருவர் ஒரு காட்சியை விளக்கினார். கதைப்படி, கதாநாயகி நீச்சல் குளத்தில் விழுந்து மயங்கி விடுவார். நாயகன் அவருக்கு வாயில் ஊதி சுவாசம் கொடுத்துக் காப்பாற்றுவார். இந்தக் காட்சியை விளக்குவதாகக் கூறி, அவர் திடீரென என் முகத்தைப் பிடித்துக் கொண்டு, முகத்துக்கு அருகில் நேராக வந்தார். அவர் செயலைக் கண்டு உறைந்து போனேன். என் உடல் நடுங்கத் தொடங்கியது. உடனடியாக அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். இச்சம்பவம் நீண்டகாலமாக எனக்குப் பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது” என்று தெரிவித்துள்ளார். அவர் இயக்குநரா, நடிகரா, காஸ்டிங் ஏஜென்டா?…

Read More