Author: Editor TN Talks

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டிகளில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் அரங்கில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, இந்நிலையில் ஐசிசி விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராவுஃப் 4 தகுதியிழப்புப் புள்ளிகளுடன் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவுக்கு 2 தகுதியிழப்புப் புள்ளிகளும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை முழுதுமே இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கடைசி இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை வென்றது, ஆனாலும் இருதரப்புமே ஆட்ட உணர்வு, ஸ்போர்ட்ஸ்மென்களுக்கு உண்டான நாகரிகத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் உட்ப்ட பலரும் இரு அணிகள் மீதும் அதிருப்தியை தெரியப்படுத்தினர். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான லீக்கில் வெற்றி பெற்ற பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ‘பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுடன் நிற்கிறோம்,…

Read More

தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், திருவிடைமருதூர் வட்டம், 69-சாத்தனூர் திருமூலர் கோயிலில் நடைபெற்ற திருமூலர் குருபூஜை விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய சவால். 2-வது பெரிய கட்சியான அதிமுக, பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு அஸ்தமனத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆக இருக்கும். தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது ஆனால் வளராது. ஜிஎஸ்டி வரி குறைத்து விட்டதாக கூறுகிறார்கள். அவர்களுக்கு வாக்கு வங்கி இருப்பதால் சப்பாத்திக்கு குறைத்து விட்டார்கள். இட்லிக்கு 5 சதவீதம் வரி போடுகிறார்கள். மீனவர் எல்லைப் பிரச்சினை கைது நடவடிக்கை தொடர்கிறது. வல்லரசாக தங்களை பறைசாற்றிக் கொள்பவர்கள் அத்துமீறும் முயற்சியை தடுக்காமல் இருப்பதால் அவர்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். நடிகர் விஜய் தவெக தலைவராக மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.…

Read More

தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுச்செயலாளர் அருள்ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அகமது ஃபயஸ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப செப்.1 முதல் 15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட அளவில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கிய பிறகு காலியுள்ள கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பலாம். ஏற்கெனவே கிராம நிர்வாக அலுவலர்களின் முதுநிலை பட்டியலை கருத்தில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த தேதி அடிப்படையாகக் கொண்டு மாவட்ட மாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவது தவறு எனக் கூறி உயர்…

Read More

விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது எனவும் தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தை அவருக்கு வழங்குவது எனவும் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தை கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் வாசித்தார். மேடைக்கு வந்த மதியழகனை விஜய் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். “தமிழகத்தில் புதிய மற்றும் நேர்மையான அரசியல் அதிகார மாற்றத்தை ஏற்படுத்தும் உன்னத லட்சிய நோக்கத்தின் செயல்வடிவத்தின் முதல்படியாக நம் தலைவர் விஜய், மக்கள் சந்திப்புப் பயணத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய ஊர்களில் நம் தலைவரின் அனல் பறக்கும் பேச்சும் ஆளும் தரப்பை நோக்கிய கேள்விகளும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஒவ்வொரு…

Read More

திமுக அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று கூடியது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவின் இறுதியாக விஜய் தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நமது குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையுடனும், வலியுடனும் இத்தனை நாட்களாக நாம் இருந்தோம். அந்தச் சூழலில் அவர்களுடன் சேர்ந்து அமைதி காத்து வந்தோம். அமைதி காத்து வந்த நேரத்தில் நம்மைப் பற்றி வன்ம அரசியல் வலைகள், அர்த்தமற்ற அவதூறுகள் பிண்ணப்பட்டன, பரப்பப்பட்டன. இவை அனைத்தையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணைக் கொண்டு நாம் துடைத்தெறியத்தான் போகிறோம். அதற்கு…

Read More

காங்கிரஸ் வாரிசு அரசியலை பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டுபவர்களால், எங்கள் முன்னோர்கள் செய்த தியாகங்களை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என பிரியங்கா காந்தி எம்.பி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சம்பாரண் மாவட்டத்தின் வால்மிக நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, “நாங்கள் உங்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறோம். நாட்டின் செல்வம் உங்களுக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். எங்கள் முன்னோர்கள் சுதந்திரத்துக்காகப் போராடினர். உங்கள் முன்னோர்களில் பலரம் சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகங்களை செய்துள்ளனர். இங்குள்ள மண் உங்கள் ரத்தத்திலும் எங்கள் ரத்தத்திலும் ஊறியுள்ளது. ஆனால், வாரிசு அரசியல் இருப்பதாக மேடைகளில் கதறுபவர்களால், எங்கள் முன்னோர்கள் புரிந்த தியாகங்களை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. இது வாரிசு அரசியல் அல்ல. மாறாக, நாட்டுக்கான எங்கள் தர்மம். காலை முதல் மாலை வரை பாஜக தலைவர்கள் நேருவை அவமதிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நாட்டை பாதிக்கும் அனைத்து தீமைகளுக்கும்…

Read More

“எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்களின் வாக்கு உரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பிஹாரும், இன்று வெளியாகியுள்ள ஹரியானா ஃபைல்ஸுமே சான்று” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்மைக் காலமாக பாஜக பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத் தன்மை குறித்து மீண்டும் ஒருமுறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ‘பச்சையான ஆதாரங்கள்’ அதிர்ச்சியூட்டுகின்றன. வெறுப்பினை மூட்டி, பொய் வாக்குறுதிகளைக் கூறி 2014-ல் ஆட்சிக்கு வந்த பாஜகவின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. இதன் அடுத்த கட்டம்தான் எஸ்ஐஆர்…

Read More

“தமிழ்நாட்டில் எந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க முடியாது. அதிமுகவும் அதை விடாது. திமுக வைக்கின்ற வாதம் அர்த்தமற்றது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சட்ட விதிகளின்படி வாக்காளர்களுக்கு படிவத்தை பிஎல்ஓ-க்கள்தான் (வாக்குச்சாவடி அலுவலர்) வழங்கவும், திரும்பப் பெறவும் வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் ஆளும் கட்சியினர் பிஎல்ஓக்களை மிரட்டி, அவர்களே வாக்காளர்களிடம் படிவங்களை வழங்குகின்றனர். இது எந்த வகையில் நியாயம்? அரசியல் கட்சியினர் பிஎல்ஓக்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அவர்களே படிவங்களை கொடுக்கக் கூடாது. இது மாதிரி நடப்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை வரும். தமிழ்நாட்டில் எந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க முடியாது. அதிமுகவும் அதை விடாது. எஸ்ஐஆர் மூலம் சிறுபான்மையின வாக்குகளை நீக்கிவிடுவார்கள் என்பது தவறான கருத்து. திமுக வைக்கின்ற வாதம் அர்த்தமற்றது. தேர்தல் அதிகாரிகளை மிரட்டி படிவங்களை திமுகவினர் பறிக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார். தவெக…

Read More

த்ரிஷா, மணிரத்னம் வீடு உட்பட 8 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்​திருப்​பது குறித்து சைபர் க்ரைம் போலீ​ஸார்  விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். சென்னையில் உள்ள டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது. அதில், கோபாலபுரத்​தில் உள்ள ஒரு தனி​யார் பள்​ளி, அண்ணா சாலை​யில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம், ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள திரைப்பட இயக்​குநர் மணிரத்​னம் வீடு, ராயப்​பேட்டை சென​டாப் சாலை​யில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, அண்​ணாநகரில் நடிகர் விஷால் வீடு, வேளச்​சேரி​யில் உள்ள பிரபல வணிக வளாகம், உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள சிபிஐ நீதி​மன்​றம் உள்​ளிட்ட 8 இடங்​களில் வெடி குண்டு வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இதையடுத்து வெடிகுண்​டு கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​களும், போலீ​ஸாரும் அங்கு சென்று சோதனை நடத்​தினர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனை​யில், அங்​கிருந்து எந்த வெடி பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. இதனால் அந்த மின்​னஞ்​சல், வதந்​தியை பரப்​பும் நோக்​கத்​தில் வந்​திருப்​பது தெரிய​வந்​தது. இதுகுறித்து சைபர்…

Read More

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் முதல் சிங்கிள் நாளை (வரும் வியாழக்கிழமை) வெளியாகிறது. சுதா கொங்காரா இயக்கி வரும் படம் ‘பராசக்தி’. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘அடி அலையே’ என்ற பாடலை வரும் வியாழக்கிழமை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்பாடல் வெளியாக உள்ளது. இதனை ஷான் ரோல்டன் மற்றும் தீ இணைந்து பாடியுள்ளனர். தெலுங்கில் எல்.வி.ரேவந்த், தீ பாடியுள்ளனர். இது தொடர்பாக சிறிய ப்ரோமோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விண்டேஜ் பின்னணியில் சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா டூயட் பாடுவது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது.

Read More