Author: Editor TN Talks
கரூர் அசம்பாவிதத்திற்கு பிறகு அமைதியாக இருந்த தவெக தலைவர் விஜய் இன்று மாலை தவெக அலுவலகம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி தவெக தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் கரூரில் நடந்த விஜய் பிரச்சாரத்தின் போது 41பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குறுகலான இடத்தில் நடந்த விஜய் பிரச்சாரத்தில் ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகினர். இது பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் விஜய்க்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. பிரச்சாரத்தின் போது கூட்டநெரிசல் ஏற்பட்டதால் விஜய் அங்கிருந்து அவசரமாக புறப்பட்டார். திருச்சிக்கு வந்த விஜய் அங்கிருந்து விமானம் மூலம் அன்றிரவே சென்னை திரும்பினார். இதையடுத்து விஜய்யின் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்த தவெக நிர்வாகிகள் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டனர். நடந்த உயிரிப்புகள் தனக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக விஜய் எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார். நேற்று உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கும்…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதற்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்று தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் 3ஆம் கட்ட பயணமாக நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்து இருந்தார். விபத்து தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து, தனது…
தவெக தலைவர் விஜய் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய ஊர்களில் தனது இரண்டு கட்ட பிரசாரங்களை விஜய் முடித்திருந்தார். மேலும், டிசம்பர் 20, 2025 உடன் முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த சுற்றுப்பயண அட்டவணை, தற்போது 2026 பிப்ரவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை (செப். 27) தனது 3ஆம் கட்ட பயணமாக நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின்…
கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த நிலையில், 34 மணி நேரத்திற்கு பிறகு விஜய் தனது நீலாங்கரை வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய ஊர்களில் தனது இரண்டு கட்ட பிரசாரங்களை விஜய் முடித்திருந்தார். மேலும், டிசம்பர் 20, 2025 உடன் முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த சுற்றுப்பயண அட்டவணை, தற்போது 2026 பிப்ரவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை (செப். 27) தனது 3ஆம் கட்ட பயணமாக நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20…
ஆசியக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக தொடங்கிய 17ஆவது ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் பிடித்தன. இதனையடுத்து இரண்டு அணிகளுக்கும் இடையேயான இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. ஆசியக்கோப்பை 2025 தொடரில் இரண்டு அணிகளும் மோதிக்கொள்வது இது மூன்றாவது முறையாகும். லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்று இரண்டிலும், இந்திய அணியே வென்றிருந்தது. இதனால், பாகிஸ்தான் அணியினர் தக்கப் பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியினர் தொடக்கம் முதலே, அதிரடியாக ஆடினர். ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டினர். சாஹிப்சதா ஃபர்ஹான் மற்றும் ஃபஹர்…
கரூரில் நடந்த தவெக மாநாட்டில் 41 உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட சதி என தவெகவினர் அளித்த தவெகவின் முறையீடு இன்று பிற்பகலில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது. கடந்த 27ம் தேதி கரூர் வேலாயுதபுரத்தில் விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தால் விஜய்யின் அடுத்த பிரச்சாரங்கள் நடைபெறுவதில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே கரூர் அசம்பாவிதம் திட்டமிட்ட சதி என தவெக கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் தவெகவின் வழக்கறிஞர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தண்டபாணியிடம் முறையிடுவதற்காக சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். நீதிபதியை சந்தித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், “ கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது விபத்து போல் தெரியவில்லை. அது திட்டமிட்ட சதிபோல் தெரிகிறது. பிரச்சாரத்தின்…
கரூர் தெவக பிரச்சாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரை பார்க்க ஏராளமான பெண்கள், இளைஞர்கள் என பலர் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் விஜய் உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது, மக்கள் கூட்டத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததால் தள்ளூமுள்ளு ஏற்பட்டது. பலர் கூட்டநெரிசலில் சிக்கியும், மயக்கம் ஏற்பட்டும் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்று ஆறுதல் கூறினர். இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனால் தவெக பிரச்சாரத்தில் இருந்த வேலுசாமிபுரத்தை சேர்ந்த 65 வயதான பெண் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…
கரூரில் நடந்த தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை ஒட்டி கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் மயக்கம் அடைந்து விழுந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் இதயத்தை நொறுக்கியதை தொடர்ந்து இரவோடு இரவாக முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் விரைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மிகுந்த துயரத்துடன், மிகவும் கனத்த இதயத்தோடு நின்று கொண்டிருக்கிறேன். ஒரு அரசியல் கட்சி நடத்தின கூட்டத்தில், இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் இதுவரை நடக்காதது. இந்த சம்பவம்…
கரூர் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் நாளை காலை முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரம் கரூரில் நடைபெற்றது. விஜய்யின் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் வருகை தந்தனர். அளவுக்கு அதிகமாக கட்டுக்கடங்காமல் கூட்டம் வருகை தந்ததால் நெரிசல் ஏற்பட்டது. மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலருக்கு மூச்சுத்திணறலும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. பெண்களும், குழந்தைகளும் கூட்ட நெரிசலில் சிக்கியதால் சுமார் 31 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சம்பவ இடத்திற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டம் ஒழுங்கு டிஜிபி உள்ளிட்டோர் விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிகப்பட்டு வரும் நிலையில் கரூரில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூருக்கு நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளதாக…
கரூரில் நடந்த தவெக மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரம் கரூரில் நடைபெற்றது. விஜய்யின் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் வருகை தந்தனர். அளவுக்கு அதிகமாக கட்டுக்கடங்காமல் கூட்டம் வருகை தந்ததால் நெரிசல் ஏற்பட்டது. மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலருக்கு மூச்சுத்திணறலும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. பெண்களும், குழந்தைகளும் கூட்ட நெரிசலில் சிக்கியதால் சுமார் 29 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சம்பவ இடத்திற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டம் ஒழுங்கு டிஜிபி உள்ளிட்டோர் விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிகப்பட்டு வரும் நிலையில் கரூரில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.