Author: Editor TN Talks

திமுகவின் ஊழல் பணத்தை டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷின் தான் செந்தில் பாலாஜி என்று கரூரில் பேசிய தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். கரூரில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது.. என்னை பாதுகாப்பாக அழைத்து வந்த காவல்துறைக்கு நன்றி. அமராவதி ஆற்றங்கரையில் உள்ள ஊர் கரூர். ரொம்ப முக்கியமான டெக்ஸ்டைல் மார்க்கெட் இது, மிகவும் சிறப்பு வாய்ந்தது. கரூரை பெருமையாக சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு. அதுல எந்த மாற்றக் கருத்தும் இல்ல. ஆனா சமீபத்தில் ஒரு விஷயத்துக்கு ரொம்ப பேரு வாங்குச்சு. அதுக்கு யார் காரணம்? அதை பின்னாடி பேசுறேன். இப்போ தமிழ்நாடு அரசு கரூருக்கு கொடுத்த வாக்குறுதிகளை பார்ப்போம். பேரீச்சை வளர்ப்பு சிறப்பு திட்டம்.  தேர்தல் வாக்குறுதி எண் 81. பேரீச்சை மரத்தை விடுங்க, குறைந்தபட்சம் பேரீச்சை விதையாச்சும் கண்ணுல காட்டுனாங்களா?. துபாய் குறுக்கு சந்தை கதைதான். அடுத்தபடியா கரூரில் விமான நிலையம் கொண்டு…

Read More

தவெக-வா, திமுகவா இரண்டில் ஒரு கை பார்த்து விடுவோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாமக்கல்லில் பேசியுள்ளார். தவெக தலைவர் விஜய், மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களைத் தொடர்ந்து இன்று (27/09/2025) நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பி.கே.புதூர் பகுதியில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது.. நம்முடைய நாமக்கல் மாவட்டம் இங்க லாரி பாடி காட்டுகிற தொழிலில் இருந்து இன்னும் நிறைய தொழில்கள் செய்யக்கூடிய மாவட்டம் நம்முடைய நாமக்கல் மாவட்டம் அது மட்டுமல்லாமல் நாமக்கல் மாவட்டத்தினுடைய இந்த முட்டை உலகமும்( Egg city)  கூட பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டு மக்களுக்கு சத்தான முட்டை கொடுக்கின்ற ஊர் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சிகளை ஊட்டுகின்ற மண்ணும் கூட நாமக்கல் மாவட்டம். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் இரண்டு…

Read More

தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கலில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற விஜய் அங்கிருந்து, சாலை மார்க்கமாக நாமக்கல் சென்றார். விஜய் வருகையை ஒட்டி வழிநெடுகிலும், பிரச்சாரம் நடைபெறும் இடத்திலும் மக்கள் அதிகளவில் குவிந்தனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்த பிரச்சார வாகனத்தில் நாமக்கல் நோக்கி விஜய் புறப்பட்டு சென்றார். அப்போது தொண்டர்கள், ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், விஜய்யின் பவுன்சர்கள், செய்தியாளர்கள் என ஏராளமானோர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்த பவுன்சர்களின் கார் விபத்தில் சிக்கியது. முன்னாள் சென்ற காரின் மீது பவுன்சர்கள் சென்ற கார் மோதியது. கார் முழுவதும் சேதமான நிலையில், பவுன்சர்கள் யாருக்கும் எந்தவித…

Read More

விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வ கோளாறில் திருட்டுத்தனமாக வந்த ரசிகரை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி முனையில் பிடித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பிரச்சாரத்திற்காக நீலாங்கரை வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் தவெக தலைவர் விஜய் புறப்பட்டார். அவரது விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வருவஹை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டன. விஜய்யின் விமானம் திருச்சிக்கு வந்ததும் ஒருவர் வேகமாக விமான நிலையத்திற்குள் வந்தார். விமான நிலைய ஊழியர் போல் இருந்த அந்த நபரை பார்த்த விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள் அவர் மீது சந்தேகப்பட்டு பிடித்தன.ர் அந்த நபரை சோதனை செய்ததில் அவர் தனது கழுத்தில் டேக் மட்டுமே போட்டிருந்தார். ஆனால், அதில் ஐடி கார்டு இல்லை. இதனால் சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி முனையில் அந்த நபரிடம் விசாரித்தனர். அப்போது அவர் விமான நிலைய ஊழியர் இல்லை என்றும், விஜய் ரசிகர்…

Read More

நாமக்கல்லில் விஜய் மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் ரசிகர்களுக்கு 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. திருச்சி, நாகை மாவட்டங்களை தொடர்ந்து நமக்கல்லில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக செல்லும் அவருக்கு வழி நெடுக்கிலும் ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். விஜய் பிரச்சாரம் நடத்த இருக்கும் நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.தியேட்டர் எதிரே விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்தில் காலை முதல் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர். விஜய்யின் இந்த பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்த போலீசார் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு 20 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதாவது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும், பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கையில் குச்சி, கம்பு போன்ற ஆயுதங்களை வைத்திருக்க கூடாது, பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் முன்னெச்சரிக்கை…

Read More

தவெக தலைவர் விஜய் நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்திருந்த நிலையி காலை 11 மணி வரை பிரச்சாரம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் செய்ய காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பிரச்சாரத்திற்கு ஒதுக்கிய பகுதிக்கு விஜய் சாலை மார்க்கமாக வர தாமதம் ஏற்பட்டது. வழி நெடுகிலும் திரண்ட மக்கள் கூட்டத்தால் விஜய் வாகனம் ஊர்ந்து சென்றது. விஜய்யை பார்க்க வந்த பெண்கள், குழந்தைகள், மற்றும் இளைஞர்கள் அதிகளவில் வந்துள்ளதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. பிரச்சாரத்தை ஒட்டி ஆம்புலன்ஸ் வசதியும், போலீசார் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் விஜய் பேச தொடங்காத நிலையில் அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளாக சுட்டிக்காட்டி…

Read More

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆரை அநாகரீகமாக பேசிய சீமானுக்கு அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜய் மாற்றம் பறித்து சொல்லவே இல்லை. அவர் திமுகவில் இருந்து இரண்டு இட்லியையும், அதிமுகவில் இருந்து இரண்டு தோசையையும் எடுத்து ஒன்றாக பிச்சி போட்டு உப்புமா கிண்டி விட்டார். ஒரு பக்கம் அண்ணாவையும், ஒரு பக்கம் எம்ஜிஆரையும் வைத்து கொண்டார். இதில் என்ன மாற்றம் வரப்போகிறது. இது ஒரு சனியன், அது ஒரு சனியன். இரண்டு சனியனையும் சேர்த்து ஒரு சட்டை தைத்து விட்டார். சனிக்கிழமை கிளம்பி விட்டார். மாற்றம் என்றால் எப்படிப்பட்ட மாற்றம் வரும் என்பதை அவர் சொல்லவே இல்லை” என பேசியுள்ளார். இந்த நிலையில் முன்னாள் தலைவர்களை அநாகரீகமாக பேசிய சீமானுக்கு அதிமுக கண்டனத்தை தெரிவித்துள்து. இது தொடர்பாக அதிமுக மாநில ஐடி…

Read More

நானும், ரஜினியும் மீண்டும் இணைந்து நடிப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன், ரஜினி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய ரஜினி, நல்ல கதை இருந்தால் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிப்பேன், அவருடன் நடிக்க ஆசை இருக்கிறது என்றார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஜினியுடன் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ரஜினியும், நானும் இணைந்து படம் நடித்து இருக்கிறோம். மீண்டும் நடிப்போம் என கூறியுள்ளார். இதன் மூலம் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க போவது உறுதியானதாக இருவரின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இவர் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்…

Read More

தவெக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய், 3வது நாளாக இன்று நாமக்கல், கரூரில் மக்களை சந்தித்து பேச உள்ளார். நாமக்கல்லில் உள்ள கே.எஸ். திரையரங்கம் அருகே காலை 8.45 மணிக்கு பேச விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொய்யேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுரை வீரன் கோவில் அருகே விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அங்கே கூட்டம் நடத்தினால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் போலீசார் அங்கு அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. எனினும், இந்த பிரச்சார கூட்டத்திற்கு அதிக கட்டுப்பாடுகல் விதிக்கப்பட்டுள்ளது. விஜய் பிரச்சார வாகனத்தை யாரும் பின் தொடர கூடாது, விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். பொது சொத்துக்களை சேதப்படுத்த கூடாது, உரிய நேரத்தை கடந்து பிரச்சாரம் செய்யக் கூடாது என பல்வேறு…

Read More

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி பெறாமல் சோனி நிறுவனம் பயன்படுத்தி வருவதோடு பாடல்களை மாற்றியமைப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார். மேலும், யூடியூப் உள்ளிட்ட தளங்களில் பயன்படுத்தியதன் மூலம் சோனி நிறுவனம் வணிக ரீதியாக பலனடைந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. சோனி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காப்புரிமை சட்டத்தை மீறும் செயல் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தில் 50 சதவீத தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். சோனி நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எக்கோ நிறுவனத்திடம் இருந்து…

Read More