Author: Editor TN Talks
ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆவின் நிறுவனம், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்சம் விற்பனை விலை ரூ.700. இதில்…
தமிழகத்தில் அரசு உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனம் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்ப பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் அரசு உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனம் தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்து கடந்த 2022 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து சீனிவாச மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதாயம் அடையும் நோக்கில், திமுக ஐ.டி. பிரிவைச் சேர்ந்தவர்களை உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்க முயற்சிப்பதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், பொது அறிவிப்பு வெளியிடாமல், எழுத்துத்தேர்வு நடத்தாமல், பெயரளவில் விண்ணப்பங்களை வரவேற்று விட்டு, திமுக ஐ.டி. பிரிவினரை நியமிக்க அரசு முடிவு…
பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 ஆண்டு காலமாக தலைமறைவாக இருக்கும் சதுர்வேதி சாமியார், நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் தங்கி, அவரது மனைவி மற்றும் மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு வெங்கடசரவணன (எ) S.A.R.பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி சாமியார், உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் கடந்த 2005 ஆம் ஆண்டு காவல் இறுதி அறிக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இவ்வழக்கானது மகளீர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணையின் போது வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது .இவ்வழக்கு மகிளா…
விஜய் பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறி தவெக தாக்கல் செய்த வழக்கிற்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக கட்சியை தொடங்கியுள்ள விஜய் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சார சுற்றுப் பயணங்களுக்கு காவல் துறையினர் கடுமையான நிபந்தனைகள் விதித்துள்ளதாக கூறி தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்கக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு செப்டம்பர் 24 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சி தலைவர் எம்எல்ஏ ரவி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “தமிழக ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் குரலை நெரித்து, ஜனநாயகத்தை ஒடுக்க முயற்சிக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு…
சென்னை நேரு உள்விளையாட்டு செப்டம்பர் 25-ந் தேதி நடைபெறும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்க உள்ளதாக அரசு செய்தித்தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ். கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 25 ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும். இந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில், தெலுங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இத்திட்டம் விரிவாக்கம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது. 4 முதல் 7 மணி வரை மேற்கண்ட திட்டங்கள் குறித்து அதில் பயன்பெற்ற சாதனையாளர்கள் எடுத்துரைக்க உள்ளனர். 2.57 லட்சம் மாணவ மாணவியர்கள் பயன்பெற…
சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க கோவிந்தா கோஷங்களுடன் புறப்பட்ட திருப்பதி வெண்பட்டு திருக்குடைகள். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையான் கருட சேவைக்கு தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் புறப்பட்டது. உடுப்பி பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி தொடங்கி வைத்தார். பெருமாளிடம் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகளை, திருப்பதி திருக்குடையிடம் பக்தர்கள் சமர்ப்பிப்பது வழக்கம். அது ஏழுமலையானை சென்றடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால்தான், திருப்பதி திருக்குடை ஊர்வல காலத்தில் சென்னையில் இருக்கும் பக்தர்கள், விரதம் இருந்து திருக்குடைகளை தரிசிக்கிறார்கள். ஆரத்தி காண்பித்து வழிபடுகிறார்கள். திருக்குடை ஊர்வலம் செல்லுமிடமெல்லாம் மங்களம் பெருகும், வறுமை…
தமிழகத்தில் எடப்பாடி யார் அலை வீசத் துவங்கியுள்ளது. ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா விசுவநாதன் பேசியுள்ளார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி குறித்த ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது… முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வரும் மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றது. இதனைக் கண்டு திமுக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அஞ்சி நடுங்குகின்றனர். மேலும் ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். எடப்பாடி அலை வீசத் துவங்கியுள்ளது. விடியா ஸ்டாலின் அரசு அவர்களும் குழம்பிக் கொண்டு. மக்களையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டாலின் அரசு…
விஜய் பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறி, த.வெ.க. தாக்கல் செய்த வழக்கிற்கு ஆதரவாக, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சார சுற்றுப் பயணங்களுக்கு காவல் துறையினர் கடுமையான நிபந்தனைகள் விதித்துள்ளதாக, த.வெ.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்கக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, செப்டம்பர் 24 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சி தலைவர் எம்.எல்.ரவி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் குரலை நெரித்து, ஜனநாயகத்தை ஒடுக்க முயற்சிக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை…
விஜய் பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறி, த.வெ.க. தாக்கல் செய்த வழக்கிற்கு ஆதரவாக, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சார சுற்றுப் பயணங்களுக்கு காவல் துறையினர் கடுமையான நிபந்தனைகள் விதித்துள்ளதாக, த.வெ.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்கக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, செப்டம்பர் 24 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சி தலைவர் எம்.எல்.ரவி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் குரலை நெரித்து, ஜனநாயகத்தை ஒடுக்க முயற்சிக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை…
ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பால் பொருட்களின் விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை எனப்படும் ஜிஎஸ்டி வரியில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டு இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இதுவரை 18% ஆக இருந்த வீட்டு உபயோக பொருட்களின் மீதான வரியை குறைத்து சீர்த்திருய்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் மீதான தனது ஜிஎஸ்டி வரி 18% இருந்து குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் பால் பொருட்களின் விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் ருஜ்.110க்கும், ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பன்னீர் ரூ.275 க்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு லிட்டர் நெய்யின் விலை ரூ.690ல் இருந்து ரூ.650 ஆக விலையை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.